தனி லோன், ஹவுஸ் லோன் உள்ளவர்களுக்கு.. பொன்னான வாய்ப்பு.. குறைகிறது உங்கள் EMI.. RBI புது திட்டம்
சென்னை: வீட்டுக் கடன் அல்லது வாகனக் கடனுக்கு அதிக EMI செலுத்தி வருபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. இனி உங்கள் EMI குறைய வாய்ப்புள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை குறைக்கவில்லை, வங்கிகளும் எந்த சிறப்புத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை. ஆனால் வட்டி குறைவதற்கான ரகசியம் உங்கள் CIBIL ஸ்கோரில் அடங்கியுள்ளது.
ஆம், உங்களுக்குக் கடன் கிடைக்குமா என்பதைத் தீர்மானிக்கும் அதே CIBIL ஸ்கோர், இப்போது உங்கள் EMI-ஐயும் குறைக்க உதவும். CIBIL ஸ்கோர் என்பது உங்கள் நிதி நம்பகத்தன்மையை அளவிடும் ஒரு கருவி. இது 300 முதல் 900 வரையிலான புள்ளிகளைக் கொண்டது. ஸ்கோர் அதிகமாக இருந்தால், வங்கிகள் எளிதாகவும் குறைந்த வட்டியிலும் கடன் வழங்கும்.

CIBIL ஸ்கோர்
உங்கள் முந்தைய கடன்கள், கிரெடிட் கார்டு கொடுப்பனவுகள் மற்றும் நிதி ஒழுக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஸ்கோர் கணக்கிடப்படுகிறது. பெரும்பாலானோர் புதிய கடன் தேவைப்படும்போது மட்டுமே இந்த ஸ்கோரைச் சரிபார்க்கிறார்கள். ஆனால், இதைத் தொடர்ந்து கண்காணிப்பது இப்போது அவசியமாகிவிட்டது.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய சுற்றறிக்கை: அக்டோபர் 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய ரிசர்வ் வங்கி சுற்றறிக்கையின்படி, வங்கிகளுக்கான 'ஸ்பிரட்' மீதான மூன்று வருட லாக்-இன் காலம் நீக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு கடனின் 'ஸ்பிரட்' தொகையை மாற்ற வங்கிகளுக்கு அனுமதி இல்லை. ஆனால் இப்போது இந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டுவிட்டது.
CIBIL ஸ்கோர் மூலம் கடன் மாறும்
இதன் பொருள், உங்கள் CIBIL ஸ்கோர் மேம்பட்டால், நீங்கள் வங்கியை அணுகி EMI தொகையைக் குறைக்கக் கோரலாம். வங்கிக் 'ஸ்பிரட்' என்றால் என்ன? நீங்கள் கடன் வாங்கும்போது, வட்டி விகிதம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. ஒன்று, ரிசர்வ் வங்கியின் பெஞ்ச்மார்க் விகிதம்; மற்றொன்று, வங்கியின் 'ஸ்பிரட்' ஆகும்.
பெஞ்ச்மார்க் விகிதம் ரிசர்வ் வங்கி முடிவுகளால் தீர்மானிக்கப்படும் நிலையில், வங்கி 'ஸ்பிரட்' உங்கள் தனிப்பட்ட நிதி நிலை மற்றும் வங்கியின் கொள்கையைப் பொறுத்தது. முன்னர், இந்த 'ஸ்பிரட்' மூன்று ஆண்டுகளுக்கு மாற்ற முடியாததாக இருந்தது. தற்போது ரிசர்வ் வங்கி இந்த கட்டுப்பாட்டை நீக்கியுள்ளது.
உங்கள் CIBIL ஸ்கோரை உயர்த்தி EMI-ஐக் குறைக்கவும்: நீங்கள் சமீபத்தில் பழைய கடனைத் திருப்பிச் செலுத்தியிருந்தால் அல்லது கிரெடிட் கார்டு பில்களை உரிய நேரத்தில் செலுத்தியிருந்தால், உங்கள் CIBIL ஸ்கோர் உயர்ந்திருக்கும். இந்த நிலையில், உங்கள் வங்கியைத் தொடர்பு கொண்டு, மேம்பட்ட கடன் விவரத்தின் அடிப்படையில் EMI குறைப்புக்கு கோரிக்கை வைக்கலாம்.
CIBIL ஸ்கோர் EMI குறையும் வாய்ப்புகள் உள்ளன
வங்கி மறுத்தால், ரிசர்வ் வங்கியின் சமீபத்திய சுற்றறிக்கையை மேற்கோள் காட்டலாம். ஏனெனில், தற்போது EMI குறைப்புக்கு மறுப்பு தெரிவிக்க வங்கிகளுக்கு எந்தத் தடையும் இல்லை.வங்கிகள் தற்போது இருப்பது போல 15 நாட்களுக்கு ஒருமுறை Cibil Score தகவல்களைச் சமர்ப்பிப்பதற்குப் பதிலாக, இனி வாராந்திர அடிப்படையில் Cibil Scoreஐ கடன் தகவல் நிறுவனங்களுக்கு (CICs) அனுப்ப வேண்டும் என்று ஆர்பிஐ உத்தரவிட உள்ளதாம் கடன் வழங்குநர்கள் கடன் அண்டர்ரைட்டிங் செயல்முறைகளில் Cibil Score அறிக்கைகளை அதிகமாக நம்பி வருவதால் இந்த மாற்றம் அவசியமாகிறது.
இந்த நடவடிக்கையின் முக்கிய காரணம், கடன் மோசடி செய்பவர்கள் ஒரு கடன் வாராக்கடனாக மாறியதற்கும், அது CIC-க்கு அறிக்கை செய்யப்படுவதற்கும் இடையிலான காலதாமதத்தைப் பயன்படுத்திக் கொள்வதைத் தடுப்பதாகும். அதாவது வாரக்கடன் ரிப்போர்ட் செல்லும் முன் சில அந்த இடைவெளியை பயன்படுத்தி புதிய லோன் எடுக்கிறார்கள். இடைப்பட்ட காலத்தில், இந்தத் தகவல் CIC-யில் credit score புதுப்பிக்கப்படாததால், மோசடி செய்பவர்கள் பிற கடன் நிறுவனங்களிடமிருந்து (CIs) கடன் பெறும் வாய்ப்புகள் உள்ளன.
இத தடுக்கவே இனி வாரம் ஒரு முறை Cibil score ரிப்போர்ட்டுகளை CICக்கு அனுப்ப ஆர்பிஐ உத்தரவிட உள்ளதாம். credit score முறைகேடு நடக்காமல் இருக்க.. மோசடியாளர்கள் கடன் பெறாமல் இருக்க இந்த புதிய முறையை பயன்படுத்த ஆர்பிஐ திட்டமிட்டு உள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications