"நகைக்கடன் புதிய விதிகள்.. தமிழக அரசின் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது" : அமைச்சர் பெரியகருப்பன்
சென்னை: நகைக் கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி கொண்டு வரும் கட்டுப்பாடுகள் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறியுள்ளார்.
ஆர்.பி.ஐ.யின் நகை கடன் கட்டுப்பாடுகள் பொதுமக்களை கவலைக்கு உள்ளாக்கி இருக்கும் சூழலில், மாநில தொடக்க வேளாண்மை கடன் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதில்லை என அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வங்கிகளுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி ரிசர்வ் வங்கியில் இருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. ரிசர்வ் வங்கியின் முதன்மை பொது மேலாளர் தருண் சிங் அனுப்பிய அந்தச் சுற்றறிக்கையில் தங்க நகைக்கடனில் முறைகேடு நடப்பதாகவும் தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெறுவதில் ஒழுங்கற்ற நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகவும் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் தங்க நகைக்கடன் வழங்குவதில் வங்கிகளுக்கான புதிய வரைவு விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது மேலும் நகைக்கடனில் முறைகேடு நடப்பதை தடுக்கும் வகையில் நகை வாங்கிய ரசீதைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட புதிய விதிகள் கொண்டு வரப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வங்கிகளில் நகைகளை அடகு வைப்பவர்கள், ஆண்டுதோறும் வட்டியை மட்டுமே செலுத்தி, மறு அடகு வைக்கலாம் என்றிருந்த நிலையை மாற்றி, அசலுடன் வட்டியையும் சேர்த்து செலுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டு நெறிமுறையைக் கொண்டு வந்துள்ளது. இந்த புதிய விதிமுறைகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் இன்று கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில், துறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவையில் துறை சார்பாக அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் பெரியகருப்பன் துறை ரீதியாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியக்கருப்பன், "சட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை சார்பில் 49 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. தற்போது அதன் நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது. 8 ஆயிரம் சதுர அடியில் தீவுத்திடல் அருகே புதிய கட்டிடம் கட்டவும், அதில் கூட்டுறவு வங்கி மற்றும் நியாய விலை கடை ஆகியவை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் 110000 கோடி ரூபாய் வங்கி பரிவர்த்தனை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு பயிர்க்கடன் மட்டும் அல்லாமல் புதிய கால்நடைகள் வாங்க கடன் அதிக அளவில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பயனாளர்களுக்கு பயிர்க்கடன் வழங்க 17000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது." என்றார்.
மேலும் பேசிய அவர், "ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளால் ஏழை எளிய மக்கள் நடுத்தர வர்கத்தினருக்கு பாதிப்புதான். ஆனால் மாநில கூட்டுறவு வங்கிகளை பாதிக்காது. விலை மதிப்பில் மார்கெட் நிலவரத்தை பொறுத்து 75 சதவிகிதம் தான் கடன் கொடுக்கப்படும் என்று ஆர்.பி.ஐ சொல்கிறது. அந்தளவுதான் நாம் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.
தொடக்க வேளாண்மை கடன் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் வருவது இல்லை. அதனால் ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகள் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது. ஆனால் ஏழை, எளிய மக்கள் அவசர தேவைக்காக பாட்டன் பூட்டன் வாங்கிய நகையை வைத்து பணம் வாங்கச் சென்றால் அதற்கான ரசீது கேட்டால் எப்படி கொடுக்க முடியும். அதனால் தான் முதல்வர் ஸ்டாலின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications