அண்ணாமலையின் “மாஸ்டர் மைண்ட்” இவர்தான்.. கைதான விஷ்வ இந்து பரிஷத் தலைவர் பின்னணி -திமுக எம்எல்ஏ பரபர
சென்னை: திருவள்ளுவர், அண்ணல் அம்பேத்கர், திருமாவளவன், பட்டியலின மக்களை இழிவாக பேசியதற்காக தற்போது கைது செய்யப்பட்டு இருக்கும் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் ஆர்பிவிஎஸ் மணியன்தான் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆட்டுவித்து வருவதாக திமுக எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் தெரிவித்து உள்ளார்.
விஷ்வ இந்து பரிஷத் தலைவர் ஆர்பிவிஎஸ் மணியன் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, "அரசியலமைப்பை உருவாக்கியது யாரென்றால் ராஜேந்திர பிரசாத் பெயரையே போட வேண்டும். அங்கு வேலை பார்த்தவரே அம்பேத்கர். அரசியல் சாசனத்தை தன் மூளையிலிருந்து எழுதியதாக எங்கும் சொல்லவில்லை.

கிராமங்களில் உள்ள அக்ரஹாரங்களில் பிராமணர்கள் இருப்பதாக சொல்வார்கள். அங்கு துலுக்கர்கள் இருப்பதாக சொல்வார்கள். இங்கு காலனி மக்கள் என்று சொல்வார்கள். அவர்களுக்கு பெயர் கூட இல்லை. காலனி ஆட்கள். எந்த காலனியில் இருந்து யார் ஒட்டிக்கொண்டு வந்தார்கள் என்று யாருக்கும் தெரியாது. பட்டியல் சமூகம் என அவர்களையே சொல்கிறோம்.
திருவள்ளுவர் என்று ஒரு ஆளே இல்லை. அப்படி ஒருவர் இருந்தார் என சொல்வதே கற்பனை. யாரோ ஒருவர் திருவள்ளுவர், திருக்குறள் என சொல்லிவிட்டார். அந்த நபர்தான் திருக்குறளை எழுதினார் என சொல்வது நல்ல கற்பனை." என்று கூறினார். ஆனால், மேலே அவர் சொன்ன சர்ச்சைக்குரிய கருத்துக்களை சற்று நாகரீகமான முறையில் நாம் சொல்லி இருக்கிறோம்.
அவரது பேச்சு திருவள்ளுவர், அம்பேத்கர் என பெரும் ஞானிகளையும், பட்டியல், சிறுபான்மை சமூகத்தினரையும் ஒருமையில் இழிவாக பேசியதாக இருந்தது. இவரது பேச்சு சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வந்தது. பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து அவரை கைது செய்ய கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் திமுக எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் ஆர்பிவிஎஸ் மணியன் குறித்து கருத்து தெரிவித்து உள்ளார். அதில், "திருக்குறளை எழுதியது திருவள்ளுவர் அல்ல என்றார் இந்த நபர். இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியது அம்பேத்கர் அல்ல. அவர் ஒரு கிளார்க் வேலை மட்டுமே பார்த்தவர் என கிண்டலும் கேலியும் செய்கிறார். திருமாவளவனையும், பட்டியலினத்து மக்களையும் ரௌடிகளை போல சண்டை சாடிக்கு செல்பவர்கள் என வெளிப்படையாகவே கூட்டம் போட்டு கேவலப்படுத்துகிறார்.
இந்த பேச்சின் முழு வீடியோவில் இஸ்லாமிய பெருமக்களையும் கேவலப்படுத்தி இருக்கிறார் இந்த நபர். ராமபிரானை ஏற்றுக்கொள்ளாதவர்கள், இந்த நாட்டில் வாழ்வதற்கு தகுதியற்றவர்கள் என்று இந்துக்கள் அல்லாத பிற சமூகத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்.

இவர் யார் என தானே கேட்கிறீர்கள்? இவர் வேறு யாரும் அல்ல. திராவிட முன்னேற்றக் கழகம் வெறுப்பு அரசியல் பேசுவதாக கூறும் அண்ணாமலையை ஆட்டுவிக்கும் ஆர்எஸ்எஸின் தலைவர். RBVS மணியன் என்பதுதான் அன்னாரின் திருநாமம்.
திருவள்ளுவர் பெருமானையும், பாபா சாகிப் அம்பேத்கரையும், பட்டியலின மக்களையும், இஸ்லாமிய பெருமக்களையும் மிகக் கேவலப்படுத்தும் இந்த பேச்சிற்கு என்ன பெயர் சூட்டுவது என அண்ணாமலை முடிவு செய்யட்டும். மணியன் பேசுவது பிற சமூகத்து மக்கள் மீதான வெறுப்பரசியல் என அண்ணாமலையின் சிற்றறிவுக்கு புரிகிறதென்றால், இந்த நபரை கண்டித்து கன்னடத்துசிங்கம் (?) கண்டன அறிக்கை வெளியிடுவாரா? பார்ப்போம்.." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications