Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குளித்த பின்... இறப்பதற்கு முன் அம்மாவுடன் வாக்குவாதம் செய்த சித்ரா.. பரபரப்பு தகவல்கள்!

சித்ராவின் மரணம் தொடர்பாக இன்று ஆர்டிஓ விசாரணை நடக்கிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரூமில் சித்ரா குளித்துவிட்டு, நைட்டியை மாற்றி உள்ளார் என்பதும், இறப்பதற்கு முன்பு, தன் அம்மாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.. இதனிடையே இந்த மரணம் தொடர்பாக ஆர்டிஓ விசாரணை இன்று ஆரம்பமாகி உள்ள நிலையில், சித்ரா குடும்பத்தினர் நேரில் ஆஜராகி உள்ளனர்.. இதையடுத்து சித்ரா தற்கொலையின் மர்ம முடிச்சுகள் விரைவில் அவிழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சித்ரா கடந்த 9-ந்தேதி ஓட்டல் ரூமில் பிணமாக மீட்கப்பட்டார்.. அவரது மரணம் தற்கொலை தான் என்று முதல்கட்ட போஸ்ட் மார்ட்டம்ரிப் போர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

எனினும், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் யார் என்ற விசாரணை அவரது கணவர் ஹேமந்த்திடம் 5 நாட்களாக நடந்து வருகிறது. மற்றொரு பக்கம் சித்ராவின் அம்மா விஜயபாவிடமும் விசாரணை நடந்து வந்தது.

விஜயா

விஜயா


பின்னர், ஹேம்நாத், விஜயாவும் அளித்த அழுத்தம் காரணமாகவே சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது... 5-வது நாளாக நேற்றும் ஹேமந்த்திடம் நசரத்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் பல முரண்பட்ட தகவல்களை தெரிவித்து வருவதாக சொல்லப்படுகிறது.

விசாரணை

விசாரணை

முன்னதாக, சித்ரா நடித்த சீரியல் டைரக்டர் உட்பட 5 பேரிடம் விசாரணை நடந்தது.. அதேபோல, சித்ரா கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சியின் டைரக்டர், புரொடியூசர், சித்ரா தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்களிடமும் போலீசார் விசாரணை செய்தனர். மேலும், சித்ரா உடலை மீட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் விசாரணை நடந்தது. அனைத்து தரப்பு விசாரணைகளும் ஓரளவு முடிவுக்கு வந்தால்தான், இந்த வழக்கு ஆர்டிஓ விசாரணைக்கு உட்படுத்ததப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

 பெற்றோர்கள்

பெற்றோர்கள்

அதன்படியே ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், இன்று ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ திவ்யஸ்ரீ விசாரணையை தொடங்கி உள்ளார். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வருவாய்த்துறை அலுவலகத்தில் இந்த விசாரணை நடந்து வருகிறது. முதல் விசாரணையே சித்ராவின் பெற்றோர்தான்.. அந்த வகையில், சித்ராவின் குடும்பத்தினர் ஆஜராகியுள்ளார்... சித்ராவின் அப்பா காமராஜ், அம்மா விஜயா, சகோதரர் சரவணன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.. விசாரணையின் இன்றைய முதல் நாளில் சித்ராவின் குடும்பத்தினரிடம் ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் விஜயஸ்ரீ விசாரணை நடத்துகிறார்.. இதையடுத்து, நாளை ஹேம்நாத்தின் பெற்றோரிடம் விசாரணை நடக்க உள்ளது. இந்த இரு தரப்பினருக்கும் தலா ஒரு மணி நேரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

 சித்ரா மரணம்

சித்ரா மரணம்

இந்த இரு தரப்பையும் முடித்தபிறகே, வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள எல்லாரிடமும் ஆர்டிஓ விசாரணை நடக்கும் என்று தெரிகிறது... சித்ரா மரணத்தில் இந்த ஆர்டிஓ விசாரணை மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.. காரணம், சித்ராவின் போஸ்ட் மார்ட்டத்தில் தற்கொலை என்று முடிவு வந்தாலும், அதை யாருமே ஏற்கவில்லை.. எப்படியும் ஆர்டிஓ விசாரணையில் சரியான முடிவு தெரியவரும் என்று சித்ராவின் குடும்பத்தினர், நட்பு வட்டாரங்கள் நம்பி கொண்டுள்ளனர்.

 கொலை வழக்கு?

கொலை வழக்கு?

அதனாலேயே இந்த ஆர்டிஓ விசாரணை முடிவில், மாறுபட்ட தகவல்கள் வெளியானால் தற்கொலைக்கு தூண்டியதாக கொலை வழக்கு வழக்குப்பதிவு செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது. அந்தவகையில், ஆர்டிஓ விசாரணை முடிந்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும், அதுவரை ஹேம்நாத்திடம் விசாரணை தொடரும் என்றும் போலீஸ் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

ஷூட்டிங்

ஷூட்டிங்

இதனிடையே, சித்ரா இறப்பதற்கு முன்பு, தன் அம்மா விஜயாவுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. சம்பவம் நடந்த அன்று ஷூட்டிங்கில் இருந்து வந்த சித்ரா, ஹேம்நாத்தை வெளியே அனுப்பிவிட்டு, குளித்து விட்டு டிரஸ் மாற்றி கொண்டுள்ளார்... அந்த சமயத்தில்தான், தன்னுடைய அம்மாவுடன் செல்போனில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

நைட்டி

நைட்டி

ஏனென்றால் சித்ரா ஷூட்டிங்கில் இருந்து வந்தபோது, வேற டிரஸ்ஸில் இருந்தாராம்.. ஆனால், தற்கொலை செய்து கொள்ளும்போது நைட்டியில்தான் இருந்தார்.. அம்மாவுடன் போனில் பேசும்போது ஏற்பட்ட மன உளைச்சல் ஒரு பக்கமும், கணவரை விட்டுப்பிரிய முடியாமல் மற்றொரு பக்கமும் என மாறி மாறி மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருந்ததாக விசாரணையில் தெரியவருகிறது. எனினும், ஆர்டிஓ விசாரணை இன்று தொடங்கி உள்ளதால், சித்ரா மரணத்தில் உள்ள அனைத்து மர்ம முடிச்சுகளும் விரைவில் அவிழும் என்று நம்பப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+