இனி ரெடிமேட் சட்டை கூட எடுக்க முடியாது போலயே.. புதிய ஜிஎஸ்டி வரி மாற்றங்கள்.. விலை கை கடிக்க போகுது
சென்னை: ஜிஎஸ்டி வரி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் காரணமாக ரெடிமேட் உடைகளின் விலை உள்ளிட்ட முக்கிய பொருட்களின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
ஜிஎஸ்டி விகிதங்களை முறைப்படுத்துவதற்காக ஜிஓஎம் குழு ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு ஜவுளி உட்பட 150 பொருட்கள் மற்றும் சேவைகளை மறுசீரமைக்க பரிந்துரைத்து உள்ளது. புகையிலை மற்றும் புகையிலை தொடர்பான பொருட்களுக்கு தற்போதுள்ள 28 சதவீதத்திற்கு (இழப்பீட்டு செஸ் தவிர்த்து) பதிலாக 35 வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

ஜவுளி, மிதிவண்டிகள், உடற்பயிற்சி புத்தகங்கள் இதனால் உயரும். அதே சமயம் பொதுவான பயன்பாட்டு பொருட்களுக்கான விலைகளை குறைக்க GoM பரிந்துரைத்துள்ளதாக நம்பப்படுகிறது. ஜவுளிப் பொருட்களுக்கான விலை ₹1,500 வரை இருந்தால் அதற்கு 5% வரி விதிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
ஆனால் ₹1,500 முதல் ₹10,000 வரை விலையுள்ள பொருட்களுக்கு 18 சதவீத வரியை விதிக்க முன்மொழியப்பட்டு உள்ளது. ₹10,000க்கு மேல் உள்ள ஜவுளிகளுக்கு, 28 சதவீதமாக வரி விதிக்க விதி கொண்டு வரப்பட்டு உள்ளது.
உயர்தர கைக்கடிகாரங்கள் மற்றும் காலணிகள் உள்ளிட்ட பல ஆடம்பரப் பொருட்களின் மீதான GST விகிதங்களை உயர்த்த GoM பரிந்துரைத்துள்ளதாக நம்பப்படுகிறது. ₹25,000க்கு மேல் விலையுள்ள கைக்கடிகாரங்களுக்கான ஜிஎஸ்டி விகிதத்தை 18 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக அதிகரிக்க GoM முன்மொழிந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், ₹15,000க்கு மேல் விலையுள்ள ஷூக்களும் வரி உயர்வு விதிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இந்த வரி விகிதம் 18 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
₹10,000க்கும் குறைவான விலையுள்ள சைக்கிள்களுக்கான ஜிஎஸ்டியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்க GoM முன்மொழிந்துள்ளது. காற்று நிரப்பப்பட்ட பானங்கள், சிகரெட்டுகள், புகையிலை மற்றும் தொடர்புடைய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை தற்போதைய 28 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக ஜிஎஸ்டி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விலை உயர்வு: மொத்தத்தில், ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு 148 பொருட்களுக்கான வரி விகிதங்களை மாற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த முடிவுகள் ஜிஎஸ்டி கவுன்சிலில் ஆலோசனை செய்யப்படும் இறுதி செய்யப்படும். ஜிஎஸ்டி கவுன்சில் முடிவிற்கு பிறகே இந்த வரி விகிதங்கள் அமலுக்கு வரும்.
புகையிலை மற்றும் தொடர்புடைய பொருட்கள் மற்றும் காற்றூட்டப்பட்ட பானங்கள் மீது 35 சதவீத சிறப்பு வரியை கொண்டு வர பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. பொருட்கள் மீது 5, 12, 18 மற்றும் 28 சதவிகிதம் என்ற நான்கு அடுக்கு வரி ஸ்லாப் எப்போதும் போல தொடரும். மேலும் 35 சதவிகிதம் சிறப்பு வரி என்ற புதிய வரி அறிமுகப்படுத்தப்படும். தற்போது, ஜிஎஸ்டி என்பது நான்கு அடுக்கு வரி அமைப்பாகும். இது போக சிறப்பு வரி கொண்டு வர வாய்ப்புள்ளது.
ஜிஎஸ்டியின் கீழ், சில அத்தியாவசியப் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. சில பொருட்களுக்கு மிகக் குறைந்த ஸ்லாப்பில் வரி விதிக்கப்படுகிறது, அதே சமயம் ஆடம்பர மற்றும் அலங்கார பொருட்கள் மிக உயர்ந்த வரியை ஈர்க்கும். கார், வாஷிங் மெஷின் போன்ற ஆடம்பர பொருட்கள் மற்றும் காற்று நிரப்பப்பட்ட நீர் மற்றும் புகையிலை பொருட்கள் போன்ற பொருட்கள் அதிகபட்ச வரியை பெறுகின்றன.
கடந்த அக்டோபரில் நடந்த கூட்டத்தில், 20 லிட்டர் மற்றும் அதற்கு மேற்பட்ட பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் மீதான ஜிஎஸ்டியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க முன்மொழியப்பட்டது. மேலும், 10,000 ரூபாய்க்கும் குறைவான சைக்கிள்களுக்கான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க கவுன்சிலில் முன்மொழியவும் முடிவு செய்யப்பட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications