ஆந்திராவில் மழையால் அதிர்ஷ்டம்.. ஒரு கல் கிடைத்தாலும் கோடி.. வைர வேட்டையில் இறங்கிய கிராம மக்கள்
சென்னை: ஆந்திரப் பிரதேசத்தின் ராயலசீமாவில் இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கொல்லூர் வைர சுரங்கம் பல ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்டு விட்டது. இந்நிலையில் வைரக் கண்டுபிடிப்புகளுக்கு நீண்ட காலமாகப் பெயர் பெற்ற ஜோனகிரி, துக்கலி மற்றும் பெரவலி மண்டலங்களில் உள்ள கிராம மக்கள் வைர வேட்டையில் இறங்கி உள்ளனர். ஆந்திராவில் ராயலசீமா பகுதியில் பருவமழை பெய்துள்ளதால் வைர வேட்டைக்கு மக்கள் தயாராகி உள்ளனர். பலரை லட்சாதிபதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும் மாற்றி உள்ளதால் தேடுவது அதிகரித்துள்ளது.
ஆந்திராவில் ஒவ்வொரு முறை மழை காலம் ஆரம்பிக்கும் போது கர்னூல், அனந்தபூர் மாவட்டங்களில் மக்கள் வைர வேட்டையில் இறங்குவார்கள். இதன்பின்னணி பற்றி பார்ப்போம். ஆந்திரப் பிரதேசத்தின் ராயலசீமா என்று அழைக்கப்படும் கர்னூல், அனந்தபூர் மாவட்டங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க கொல்லூர் வைர சுரங்கம் ஒரு காலத்தில் இருந்தது. இந்த சுரங்கம் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்டுவிட்டது. ஆனாலும் பொதுமக்களின் கைகளில் அதிர்ஷ்டவசமாக வைரங்கள் சிக்குவது தொடர்கதையாக இருக்கிறது தங்கம் எப்படி மக்களை கோடீஸ்வரன் ஆக்குகிறததோ, அதுபோல் வைரமும் மக்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி தருகிறது.

கர்னூல் அனந்தபூர்
எனவே கர்னூல் மற்றும் அனந்தபூர் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள், மழைக்காலத்தில் பயிர் விவசாயத்துக்குப் பதிலாக, "வைர வேட்டை"யில் ஈடுபடுவது நடக்கிறது.. அதற்காக மழைக்காலம் தொடங்கிவிட்டால் பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்களும் ராயலசீமா பகுதியின் சுற்றுவட்டார கிராமங்களுக்கு படையெடுத்து வைரங்களை தேட தொடங்குவது ஆரம்பிக்கிறது.
ராயலசீமா
ராயலசீமாவில் தற்போது பருவமழை அதிக அளவில் பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் கிராமவாசிகளுக்கு இந்த மழைப்பருவம், வைரங்களைத் தேடும் அதிர்ஷ்ட பருவமாக மாறியிருக்கிறது. வைரக் கண்டுபிடிப்புகளுக்கு புகழ் பெற்ற ஜோனகிரி, துக்கலி மற்றும் பெரவலி மண்டலங்களில் மழை நீரால் கழுவப்பட்ட நிலங்களில் வைரக் கற்கள், தங்கள் கண்களில் சிக்குமா என்று தீவிரமாக தேடி வருகிறார்கள். கிடைக்கும் வைரங்களை போட்டி போட்டு வாங்க வைர வியாபாரிகளும் இங்கு அதிக அளவில் இருக்கிறார்கள்.
அதிர்ஷ்டம் கிடைக்கும்
நீங்கள் ஒரு கல்லைத் கண்டெடுத்தாலும், அது உங்கள் அதிர்ஷ்டத்தை தரும் என்கிறார்கள் உள்ளூர் மக்கள். விலைமதிப்பற்ற கற்களை தேடி வந்த பலருக்கும் வாழ்க்கையே மாறி உள்ளது. பலோ என்பவர் தான் முதல் வைரத்தை 2018-ல் கண்டுபிடித்துள்ளார். இந்த ஆண்டு ஒரு கல்லை மட்டும் ரூ.8 லட்சத்திற்கு விற்றுள்ளாராம். இப்படி பலரும் வைர வேட்டையில் இறங்கி உள்ளார். சமூக சேவகியான தீபிகா என்பவர் முன்பு ஒரு வைரத்தை ரூ.5 லட்சத்திற்கு விற்றதாகவும் கூறியிருக்கிறார். இவர்கள் மட்டுமல்ல பலரையும் லட்சாதிபதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும் கர்னூல் வைரம் மாற்றி உள்ளது. அதனால் நம்பிக்கையுடன் தேடுவதை பலரும் தொடருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications