ரியல் எஸ்டேட் இருக்கட்டுமே.. குலுக்கலில் வீடுகள் விற்பனை.. வந்தது புதிய மாற்றம்.. தமிழக அரசு அதிரடி
சென்னை: வீட்டு வசதி வாரியம் பொதுமக்களின் நன்மைக்காக பல்வேறு அதிரடிகளை செய்து வருகிறது. அந்தவகையில், தற்போதும் முக்கிய முடிவு ஒன்றை எடுத்து, திறன்பட செய்துள்ளது.
குடிநீர் வரி செலுத்துவது தொடர்பாக, புதுப்புது அதிரடிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், கியூ.ஆர்.குறியீட்டை பயன்படுத்துவது தொடர்பான அறிவிப்பையும் சமீபத்தில் அரசு வெளியிட்டிருந்தது..

அதேபோல, வரி செலுத்தாமல் நிறைய பேர் உள்ளார்களாம்.. இதில் பெரும்பாலானோர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருவதாக தெரிகிறது.. அதனால், வரி செலுத்தாத வீட்டு உரிமையாளர்களுக்கு ஜப்தி நோட்டீஸ் வழங்கப்பட உள்ளதாம்...
வாடகைதாரர்கள்: அதுமட்டுமல்ல, உரிமையாளர் இல்லாதபட்சத்தில், வாடகைதாரர்களிடம் வரி வசூலித்து, அதை வாடகையில் கழித்துக் கொள்ளும் வகையில் நோட்டீஸ் வழங்கவும் குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை வசூலிப்பதற்காகத்தான், வருவாய்த் துறை அதிகாரிகள் ஓனர்களுக்கு, ஜப்தி நோட்டீஸ் வழங்க, வாரியம் முடிவு செய்துள்ளதாம்..
ஒருவேளை, உரிமையாளர் இல்லாதபட்சத்தில், வாடகைதாரர்களிடம் வரி வசூலித்து, அதை வாடகையில் கழித்துக் கொள்ளும் வகையில் நோட்டீஸ் வழங்கவும் குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளதாம்.. இந்த அதிரடியை தொடர்ந்து, வீடுகள் விற்பனையில் இன்னொரு அதிரடியும் வீட்டு வசதி வாரியம் எடுத்துள்ளது.
குலுக்கல் முறைகள்: வழக்கமாக, குலுக்கல் முறையில் நடத்தாமல், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வீடுகள் விற்பனை திட்டத்தை வீட்டுவசதி வாரியம் ஆரம்பித்துள்ளது. இதற்கு பெருத்த வரவேற்பும் கிடைத்து வருகிறதாம்.
குடியிருப்பு திட்டங்கள் அனைத்துமே, தமிழக வீட்டுவசதி வாரியம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.. அரசு நிறுவன திட்டம் என்பதால், வீடு வாங்குவதற்கு பொதுமக்களிடையே எப்போதுமே போட்டிகள் நிலவுவதுண்டு. அதற்காகத்தான், குடியிருப்பு திட்டங்களை அறிவித்து, விண்ணப்பங்கள் பெற்று, குலுக்கல் நடத்தி உரிய உரிய ஒதுக்கீட்டாளரை தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.
முடங்கிய நிதி: ஆனால், கடந்த ஆட்சிக் காலத்தில் சுயநிதி திட்டங்களுடன் இணைந்த பகுதிகளில் வாரிய நிதியில் கட்டப்பட 8000 வீடுகள் விற்பனையாகவில்லை.. அத்துடன், 5,000 கோடி ரூபாய் வரை வாரிய நிதியும் முடங்கிவிட்டது. அதனால்தான், இவற்றை விற்பனை செய்யவே, வீட்டு வசதி வாரியம் ஒரு புதிய யுக்தியை கையிலெடுத்துள்ளது.

அதன்படி, வழக்கமான குலுக்கல் முறை இல்லாமல், முதலில் யார் வருவோர்களோ, அவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில வீடுகளை விற்க முடிவு எடுத்துள்ளதாம். இதற்கான விண்ணப்பமும் ஆன்லைலேயே பெறப்போகிறார்களாம்.. வீடுகளின் விலை நிர்ணயம் தொடர்பாக, இதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.
சபாஷ் முடிவு: இப்போதைக்கு சென்னை, கோவை, மதுரை நகரங்களில், இந்த அடிப்படையில்தான் வீடு, மனை விற்பனையும் நடந்து வருவதாக தெரிகிறது.. வீட்டுவசதி வாரியம் முன்னெடுத்துள்ள இந்த அதிரடியானது, பொதுமக்களிடம் பெருத்த வரவேற்பினை பெற்று வருகிறது. அத்துடன், வீடு வாங்குவதற்கு எந்தவிதமான போட்டிகளும் இனி இருக்காது என்றும் நம்பப்படுகிறது..












Click it and Unblock the Notifications