சென்னையில் பயங்கரம்.."A+ கேங் லீடர்" மயிலை சிவக்குமாரின் கூட்டாளி வெட்டி கொலை..தலை தனியாக துண்டிப்பு
சென்னை: மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரும் "A+ கேங் லீடர்" மயிலை சிவக்குமாரின் கூட்டாளியுமான கோபி என்பவரை மர்ம நபர்கள் நேற்றிரவு வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மயிலாப்பூர் அப்பு தெருவைச் சேர்ந்தவர் கோபி. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், மயிலாப்பூரிலேயே ஆவின் பார்லரும் நடத்தி வந்துள்ளார்.
நேற்றிரவு 10 மணிக்குக் கோபி வழக்கம் போல அப்பு தெருவில் உள்ள ஆவின் பார்லரில் இருந்துள்ளார்.

சரமாரியாக வெட்டி கொலை
கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் கடையை மூடும் பணியில் அவர் இருந்துள்ளார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அந்த நேரத்தில் அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் பெரியளவில் இல்லை. அப்போது எங்கிருந்தோ வந்த மர்ம நபர்கள் கோபியை சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றனர். கோபியின் தலையைத் தனியாக வெட்டி சாய்த்துள்ளனர்.

போலீசார்
இந்த கோரத் தாக்குதலில் கோபி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த கோபியின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

யார் இந்த கோபி
அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து மர்ம நபர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கோபி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவர் என்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராற்றில் கோபி கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த கோபி என்கிற உருளை கோபி, பிரபல ரவுடி மயிலை சிவக்குமாரின் கூட்டாளி என்பது தெரிய வந்துள்ளது.

மயிலை சிவக்குமார்
மயிலை சிவக்குமார் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல் என 40க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி உத்திரமேரூரில் தனது சகோதரி வீட்டில் தலைமறைவாக இருந்தபோது துப்பாக்கி முனையில் மயிலை சிவக்குமார் கைது செய்யப்பட்டார். கடந்த மார்ச் மாதம் ஜாமீனில் வெளியே வந்த மயிலாப்பூர் சிவக்குமாரை, சென்னை அசோக் நகரில் வைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டி, முகம் அடையாளம் தெரியாத அளவுக்குச் சிதைத்து கொலை செய்தனர். அவரது கூட்டாளி தான் கோபி. எனவே ரவுடிகளுக்கு இடையேயான கோஷ்டி பூசலில் கோபி கொ செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications