Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீட்டு மனை வாங்கறீங்களா? ரியல் எஸ்டேட்டில் எல்லாம் மாறுது போலயே.. கட்டுமான துறையில் முளைத்த சிக்கல்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சில ரியல் எஸ்டேட் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, வீடு, மனைப்பிரிவு திட்டங்களை பதிவு செய்யும் பணிகள் முடங்கி உள்ளதாக புகார் ஒன்று முளைத்துள்ளது.

வீட்டுமனை திட்டங்களில் ஏற்படும் சர்ச்சைகளை தீர்ப்பதற்காகவும், விதிகளை உருவாக்குவதற்காகவும், கட்டிட மனை விற்பனை (முறைப்படுத்தல் மற்றும் மேம்படுத்தல்) சட்டம்-2016 என்ற நடைமுறையை மத்திய அரசு உருவாக்கியிருந்தது.

Real Estate Officials TNRERA and Is the construction sector delaying the registration of house and plot plans

அதேபோல, 2016ல், இந்த ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, ரியல் எஸ்டேட் திட்டங்களை பதியவும், புகார்களை விசாரிக்கவும், மாநில ஆணையங்கள், மேல் முறையீட்டுக்கான தீர்ப்பாயம் போன்றவை ஏற்படுத்தப்பட்டன. அதன்படி, 5,381 சதுர அடி அல்லது 8 வீடு மனைகள் இருந்தால், அந்த திட்டத்தை ரியல் எஸ்டேட் சட்டப்படி பதிவு செய்வது கட்டாயமாகும்..

ஒழுங்குமுறை குழுமம்: வீடு அல்லது மனை வாங்குவோர், கட்டுநரின் பெயர், முகவரி, வங்கி தகவல்கள், நிறுவனத்தின் பெயர், இப்போதைய நிலை, எப்போது முடிவடையும்? போன்ற தகவல்களை எல்லாம் www.tnr-e-ra.in என்ற வெப்சைட்டின் மூலம் உறுதி செய்து கொள்ளலாம். எனவே, "ரெரா" சட்டத்தில் பதிவு செய்யப்படாத சொத்துக்களை வாங்கும் நிலையில், ஏதாவது சிக்கல்கள் வந்தால், ஒழுங்குமுறை குழுமத்தில் புகார் அளிக்க முடியாது..

வரையறைக்கு உட்பட்ட திட்டங்கள் பதிவு செய்யப்படாவிட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது புகார் அளிக்கலாம்.. அந்தவகையில், 8 அல்லது அதற்கு மேற்பட்ட வீடுகள், மனைகள் அடங்கிய திட்டங்களை பதிவு செய்வது கட்டாயம்.. இப்படிப்பட்ட சூழலில், ரியல் எஸ்டேட் அதிகாரிகளின் அலட்சியத்தால், வீடு, மனைப்பிரிவு திட்டங்களை பதிவு செய்யும் பணிகள் முடங்கிஉள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன..

குடியிருப்புகள்: அதாவது, குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்துபவர்கள், விண்ணப்பங்களை அளித்தாலும், அதை ஆய்வு செய்வது, பதிவு செய்வதில் பாரபட்சம் காட்டப்படுகிறதாம்.. பெரும்பாலான திட்டங்களின் பதிவு விஷயத்தில், முடிவு எடுப்பதில் அதிகபட்ச தாமதம் ஏற்படுவதாகவும் பிரபலமான கட்டுமான நிறுவனங்கள் பெயரில் வரும் விண்ணப்பங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் தரப்படுவதாகவும் கூறப்படுகிறது.

அதைவிட முக்கியமாக, சில நிறுவனங்களின் விண்ணப்பத்தில், நகர், ஊரமைப்பு துறை ஒப்புதல், உள்ளாட்சி அமைப்பு ஒப்புதல் தொடர்பான ஆவணங்களின்றி பதிவு செய்யப்படுவதாகவும் புகார் கிளம்பி உள்ளது.

கோரிக்கை: இதற்கெல்லாம் காரணம், ரியல் எஸ்டேட் ஆணையத்தில், போதிய பணியாளர்கள் இல்லை என்பதுடன், அரசு ஒப்புதல் அளித்த பல்வேறு பணியிடங்கள் காலியாக வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, குடியிருப்பு திட்டங்களை பதிவு செய்வதில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்டுமான துறையினர் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+