மறைமலைநகரில் வெடிகுண்டு வீசி ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
செங்கல்பட்டு: மறைமலைநகர் முருகன் கோயிலில் பிரபல ரியல் எஸ்டேட் அதிபரை மர்ம கும்பல் வெடிகுண்டு வீசி கொலை செய்தது. அப்போது பாதுகாப்புக்கு வந்த காவலர் சுட்டதில் மர்ம நபர்களில் ஒருவர் பலியாகிவிட்டார். இதனால் பரபரப்பு எழுந்துள்ளது.
Recommended Video

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் பகுதியை சேர்ந்தவர் திருமாறன். அதிமுக பிரமுகரான இவர் மேன்பவர் தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.
தொழிலதிபரான இவர் தனது திருமணநாளான இன்று மறைமலைநகர் ஶ்ரீ செல்வமுத்து குமரசுவாமி முருகன் கோயிலுக்கு சாமி கும்பிட தனது மனைவி மற்றும் மகன், மகளுடன் வந்துள்ளார்.

துப்பாக்கி ஏந்திய காவலர்
இவருக்கு துப்பாக்கி ஏந்திய காவலர் கூடவே இருக்க அனுமதி உண்டு. அப்படி இருந்தும் ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் இருக்கும் போதே நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் திருமாறனை அரிவாளால் சரமாரியாக வெட்டி அவர் மீது வெடிகுண்டு வீசி கொலை செய்துள்ளனர்.

சிகிச்சை
தப்பிக்க சென்ற மர்ம கும்பலை நோக்கி திருமாறனின் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டதில் சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (19) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஒருவர் ஆபத்தான சூழ்நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

கடை அடைப்பு
மற்றவர்கள் தப்பியோடி விட்டனர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் மறைமலைநகர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு அப்பகுதியே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

உறவினர்கள்
சடலத்தை மீட்க விடமாமல் திருமாறனின் உறவினர்கள் ஆதரவாளர்கள் ஏராளமானோர் கூடி போலீசாரை பணி செய்மவிடாமல் இடையூறு செய்ததால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டினர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதி மற்றும் முருகன் ஆலயத்தில் இச்சம்பவம் நடந்தேறியதால் அப்பகுதியே பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications