பாக். அணிக்கு எதிராக அஸ்வின் தேர்வு செய்யப்பட்டது ஏன்? ரோஹித் ஷர்மா எடுத்த புத்திசாலித்தனமான முடிவு!
சென்னை: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டதற்கான காரணம் பற்றி தெரிய வந்துள்ளது.
டி20 உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடி வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்தப் போட்டியில் பிட்ச் பேட்டிங்கிற்கும், தொடக்க நேரத்தில் பந்துவீச்சிற்கும் சாதகமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. இதற்கேற்றவாறே இரு அணிகளும் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்துள்ளனர்.

இந்திய அணி தேர்வு
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை பொறுத்தவரை பாகிஸ்தானின் பவுலிங்கிற்கும் இந்தியாவின் பேட்ஸ்மேன்களுக்கும் இடையிலான போட்டியாகவே இருக்கும். அதனால் இந்திய அணி 7 பேட்ஸ்மேன்களோடும், 4 பந்துவீச்சாளர்களோடும் களமிறங்கியுள்ளது. பாகிஸ்தான் அணியும் பேட்ஸ்மேன்கள், ஆல் ரவுண்டர்கள், பந்துவீச்சாளர்கள் என்று கலவையாக அணியை கட்டமைத்துள்ளது.

அஸ்வின் ஏன் தேர்வு?
இந்தப் போட்டியில் சஹால் தேர்வு செய்யப்படாமல் அஸ்வின் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது இந்திய அணியின் எச்சரிக்கை மாற்றமாகவே பார்க்கப்படுகிறது. ஏனென்றால் டி20 வகை கிரிக்கெட்டைப் பொறுத்தவரை விக்கெட்டுகளை வீழ்த்துவதோடு, ரன்களை கட்டுப்படுத்த வேண்டும். அந்த வகையில் ரன்களை கட்டுப்படுத்துவதில் அஸ்வின் கில்லாடியாகவே இருந்து வருகிறார். அதனால் கேப்டன் ரோஹித் ஷர்மா அறிவுக்கூர்மையுடன் முடிவை எடுத்துள்ளார்.

சஹால் ஏன் தேர்வு செய்யப்படவில்லை?
சஹால் தேர்வு செய்யப்படாததற்கு அவரின் கூகுளிகள் வீசும் தன்மையே காரணமாக இருக்கிறது. ஆஸ்திரேலியா போன்ற மைதானங்களில் கூகுளிகளை உறுதியோடு நல்ல ஃப்ளைட் செய்து வீசவில்லை என்றால், நிச்சயம் அது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே அமையும். அதனால் சிறிய அணிகளோடு சஹால் பரிசோதிக்கப்பட்டு, பின்னர் முக்கியப் போட்டிகளில் களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாதிப்பாரா அர்ஷ்தீப் சிங்?
அதுமட்டுமல்லாமல் இடதுகை பந்துவீச்சாளரின் தேவையை அறிந்து அர்ஷ்தீப் சிங்கை தேர்வு செய்துள்ளது. இறுதி ஓவர்களில் இந்திய அணி சொதப்பி வரும் நிலையில், அர்ஷ்தீப் சிங் அவரின் ஐபிஎல் அனுபவத்தை பயன்படுத்திக் கொள்வார். அதுமட்டுமல்லாமல், ஷமி மற்றும் புவனேஷ்வர் ஆகிய அனுபவ பந்துவீச்சாளர்கள் இருப்பதால், அர்ஷ்தீப் சிங் பயமின்றி சிறப்பாக வீசுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications