மணல் குவாரிகளில் குடையும் ஈடி! திமுக அரசின் "பிக் பிரதர் நம்பர் 2" டார்கெட்? ரெய்டின் பரபர பின்னணி!
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்கள், அவருடன் தொழில் ரீதியாக தொடர்பு வைத்திருந்தவர்களின் இடங்கள் ஆகியவற்றில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை என்பதுடன் இந்த விவகாரம் முடியவில்லை.. ஆளும் திமுக அரசின் பெருங்கரம் ஒன்றை நோக்கியே இந்த ரெய்டுகள் நகரப் போகிறது என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
பொதுவாக அமைச்சர்களின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தும். இந்த முறை மணல் குவாரிகளை இலக்கு வைத்து தமிழ்நாடு முழுவதும் சோதனைகளை நடத்தி வருகிறது அமலாக்கத்துறை. இதில் மணல் ஒப்பந்ததாரர்களான திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் மட்டும் சிக்கவில்லை.

மணல் குவாரிகளை மையமாக வைத்து..:: வேலூர், திருச்சி, நாமக்கல் என மணல் குவாரி சார்ந்த இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக உள்ளே புகுந்து ஆட்டம் காட்டி வருகின்றனர். இதுவரை நடந்த சோதனைகளை விட மிக விரிவாக வேறு ஒரு கோணத்தில் இப்படியான நடவடிக்கை மேற்கொண்டிருப்பது தலைமை செயலகத்திலும் பெரும் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது.
அந்த பெரும் புள்ளிதானா டார்கெட்?: இது தொடர்பாக தலைமை செயலக வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, அமலாக்கத்துறையின் இந்த ரெய்டு போக்கானது செந்தில் பாலாஜி தொடர்புடையதாக தோன்றலாம். ஆனால் இவர்களது டார்கெட் திமுக அரசின் மிகப் பெரும் புள்ளி ஒருவரை நோக்கியதாக நகருவதையே காட்டுகிறது. திமுகவிலும் திமுக அரசிலும் 'வலதுகரமாக' இருக்கும் அந்த புள்ளிக்குதான் டார்கெட் பிக்ஸ் செய்திருக்கிறது போல அமலாக்கத்துறை என்கின்றனர்.
அள்ளி கொடுத்தும் ஏமாந்தவரா?: ஆனால் ஒரு சிலரோ, என்னதான் மத்தியில் ஆளும் தரப்புக்கு வேண்டிய இடைத்தரகர்களிடம் அள்ளி அள்ளி கொடுத்தும் பார்த்தீர்களா... அமலாக்கத்துறை உள்ளே நுழைந்துவிட்டது. அப்புறம் எதுக்கு அவ்வளவு கொடுத்தார்? அந்தோ பரிதாபம்! என திராவிட இயக்க மொழி நடையில் அங்கலாய்க்கின்றனர். இப்படியான சோதனைகள் தம்மை நெருங்கிவிடக் கூடாது என்பதற்காக 'வெளி' லாபிகள் வழியாக சில பலருக்கு சில பல சேர்க்கப்பட்டதை மையமாக வைத்துதான் இந்த அங்கலாய்ப்பு வார்த்தைகளை உதிர்க்கின்றன அந்த தலைமை செயலக வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications