சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒத்த அறிக்கை.. வழக்கம் போல.. மொத்தமாக குழம்பிய அரசியல் களம்.. ரஜினிக்கு ஹேப்பிதான்

ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட என்ன காரணம் என தெரியவந்துள்ளது.

Google Oneindia Tamil News

- கோயா

Recommended Video

    Lok Sabha elections 2019 | எனது படம், பெயர், மன்றக் கொடியை பயன்படுத்தக் கூடாது: ரஜினி

    சென்னை: கட்சி ஆரம்பிக்கிறாரோ இல்லையோ, ஒரே அறிக்கையில் வழக்கம்போல எல்லாரையும் மண்டை காய வைத்து விட்டார் ரஜினிகாந்த்.

    நேற்று திடீரென ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டார். அதில் 2 விஷயங்களை முக்கியமாக கூறியிருந்தார். ஒன்று மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை, மற்றொன்று கூடவே தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பவர்களுக்கு வாக்களியுங்கள் என்பதுதான் அது.

    இப்படி ஒரு அறிக்கையை ரஜினி வெளியிட என்ன காரணம் என்று விசாரித்தால், தன்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து நெருக்கமானவர்களிடம் ஆலோசனை நடத்தினாராம். அப்போது அவர்கள் அளித்த ஐடியா படிதான் ரஜினி அறிக்கை வெளியிட்டுள்ளாராம்.

    மாவட்ட நிர்வாகிகள்

    மாவட்ட நிர்வாகிகள்

    அதாவது, இப்போதைக்கு ரஜினிமேல் பாஜக முத்திரைக் குத்தப்பட்டு வருகிறதாம். அதனால் அவரை யாரோ இயக்குகிறார்கள் என்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றஞ்சாட்டியே வந்திருக்கின்றன. இதைதவிர மோடி பலசாலி என்ற யதார்த்த பேச்சைகூட பாஜகவுக்கு ஆதரவாக திருப்பிவிடப்பட்டு விட்டது. ரஜினி ஒரு பாஜக ஆதரவாளர் என்ற இமேஜை உடைக்க வேண்டும் என்று ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகள் கேட்டு கொண்டார்களாம்.

    யாரை சொல்கிறார்

    யாரை சொல்கிறார்

    அதற்காகத்தான் இப்படி ஒரு அறிக்கை என்ற காரணம் நமக்கு தகவல்களாக கிடைத்திருக்கிறது. ஆனால் இந்த அறிக்கையை வைத்து தமிழக அரசியலில் பெரிய விவாதமே நடைபெறுகிறது. தண்ணீர் தர்றவங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று ரஜினி சொல்வது யாரை என்பதுதான் அந்த விவாதம்.

    பாஜகவுக்கு சூசகம்

    பாஜகவுக்கு சூசகம்

    கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறும் நிலையில், அங்கிருந்து காவிரி தண்ணீர் தர மறுக்கப்படுவதை மனதில் வைத்தே ரஜினி அறிக்கை அளித்துள்ளார் என்றும், இது பாஜகவுக்கு சூசகமாக ரஜினி ஆதரவு அளிப்பதை காட்டுக்கின்றது எனவும் கூறுகின்றனர் அந்தக் கட்சியினர்.

    ஒகேனக்கல் திட்டம்

    ஒகேனக்கல் திட்டம்

    இல்லை.. இல்லை, ரஜினி திமுகவை ஆதரிப்பதன் வெளிப்பாடே இந்த அறிவிப்புக்கு காரணம் என்கின்றனர் திமுகவினர். காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கடைக்கோடி மாவட்டமான ராமநாதபுரம் வரை காவிரி நீரை அளித்தது, ஒகேனக்கல் திட்டம், உள்ளிட்ட பல திட்டங்கள் திமுக ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது மு.க.ஸ்டாலின் செய்துகாட்டியது.

    மு.க.ஸ்டாலின்

    மு.க.ஸ்டாலின்

    மேலும், மேயராக இருந்த போது சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கியவர் மு.க.ஸ்டாலின். இதையெல்லாம் மனதில் வைத்தே தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் கட்சிக்கு வாக்களிக்க ரஜினி கூறியுள்ளார் என தெரிவிக்கின்றனர் திமுகவினர்.

    பத்த வச்சுட்டியே

    பத்த வச்சுட்டியே

    இப்படி ஒவ்வொரு கட்சியினரும் ரஜினியின் அறிக்கையை தங்களுக்கு சாதகமாக்கி ஆதாயம் அடையும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதனால் ஆளாளுக்கு இந்த அறிக்கை வைத்து பட்டிமன்றமும், பெரிய விவாதமும் நடத்தி வருவதால் நெட்டிசன்கள் இதையும் கலாய்த்து, 'பத்த வச்சுட்டியே பரட்டை' என பதிவிட ஆரம்பித்து விட்டனர்.

    English summary
    Rajinkanth's Statement is said to be the reason for the Rajini Makkal Mandra Executives.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X