நெருப்பில் சிக்னல்.. “பொங்கி” எழுந்த அண்ணாமலை! உடைகிறதா அதிமுக - பாஜக கூட்டணி? “பின்னணி” காரணமே வேற
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தது தாமரைக்கு ஷாக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
சென்னை: தமிழ்நாடு பாஜக - அதிமுக இடையே சமீப காலங்களாக மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் வரும் 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தால் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று தெரிவித்து இருக்கிறார் அண்ணாமலை. இதன் பின்னணி காரணத்தை அலசுவோம்.
கடந்த 2021 ஆம் ஆண்டு எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாடு பாஜக தலைவராக நியமிக்கப்பட்டவர் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை.
இவர் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதில் இருந்தே தொடர்ந்து திமுக அரசை விமர்சித்து அளித்த பேட்டிகளாலும், ஊடகம் மற்றும் சமூக வலைதள வெளிச்சத்தின் காரணமாகவும் குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.

ஓபிஎஸ் - இபிஎஸ் மோதல்
இவரது செயல்பாடுகள் பெரியளவில் கவனிக்கப்பட்டதற்கு காரணம் எதிர்க்கட்சியாக இருந்த அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல். எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இடையே கடந்த 7 மாதங்களாக நீடித்து வந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவரைபோல் தன்னை காட்டிக் கொண்டு தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வந்தார் அண்ணாமலை.

டெல்லியின் தலையீடு
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் நடத்திய தர்ம யுத்தத்தை தொடர்ந்து அதிமுக எடப்பாடி பழனிசாமி - சசிகலா - ஓ.பன்னீர்செல்வம் என மூன்றாக உடைந்தபோதும் அவர்களை இணைப்பதில் டெல்லியின் தலையீடு இருந்ததாக கூறப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு ஒற்றைத் தலைமை பிரச்சனை வெடித்தபோதும் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் மோடி மற்றும் அமித்ஷாவை சந்திக்க போட்டிபோட்டனர்.

அண்ணாமலைக்காக காத்திருப்பு
இருவருமே டெல்லியின் தயவை எதிர்பார்ப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர். இருவருக்கும் சாதகமாகவும், பாதகமாகவும் மாறி மாறி தீர்ப்புகள் வந்துகொண்டிருக்க, அதிமுக உட்கட்சி மோதலிலேயே பிசியாக இருந்தபோது சைலண்டாக ஸ்கோர் செய்துகொண்டிருந்தார் அண்ணாமலை. ஈரோடு கிழக்கு தேர்தலுக்கு முன்பாகவும் ஈபிஎஸ், ஓபிஎஸ் அண்ணாமலையை சந்திக்க காத்திருந்ததை பார்த்தோம்.

ஈரோடு கிழக்கு
நிலைமை இவ்வாறு இருக்க ஈரோடு கிழக்கு தேர்தல் சமயத்தில் தேர்தல் ஆணையத்தின் நிலைபாடு, உச்சநீதிமன்ற தீர்ப்பு போன்றவை எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக அமைய அவர் பாஜகவை விட்டு மெல்ல நழுவ தொடங்கினார். உச்சக்கட்டமாக தேர்தல் பணிமனை பேனரில் பாஜக கூட்டணி பெயரையும், பாஜக தலைவர்கள் படங்களையும் எடப்பாடி தவிர்த்தார்.

அண்ணாமலை பிரச்சாரம்
ஆனால், பாஜகவோ வழிய சென்று அதிமுகவுக்கு ஆதரவளித்து அண்ணாமலை பிரச்சாரமும் செய்தார். இருப்பினும் ஈரோடு கிழக்கில் கடந்த 2021ல் தமாக வேட்பாளர் பெற்ற வாக்குகளை விட மிகக்குறைவான வாக்குகளை பெற்று தோல்வியடைந்தது அதிமுக. அதே சமயம் எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை ஆதரிப்பதாக கூறி அவருக்கு எதிராக சிவகங்கையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தீர்மானம் நிறைவேற்றியது தனிக்கதை.

அதிமுக தாவிய பாஜகவினர்
அதே சமயம், ஓபிஎஸும் அவரது மகன் ரவீந்திரநாத் குமாரும் பாஜக ஆதரவு நிலைபாட்டிலேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில்தான் பாஜக ஐடி விங் மாநில தலைவராக இருந்த நிர்மல் குமார், மாநில செயலாளராக திலிப் கண்ணன் உள்ளிட்டோர் அன்ணாமலையை கடுமையாக விமர்சித்து பாஜகவிலிருந்து விலக, அவரை எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இணைத்துக்கொண்டது பூதாகரமாக வெடித்தது.

அதிமுக - பாஜக மோதல்
இதற்கு பாஜக தலைவர்கள் மத்தியில் அதிருப்தி கிளம்ப அது உச்ச நிலையை அடைந்து தூத்துக்குடியில் எடப்பாடி பழனிசாமியின் உருவ படத்தையும் எரித்தார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அரியலூரில் அண்ணாமலை படத்தை அதிமுகவினர் எரித்தார்கள். அதிமுக முன்னாள் அமைச்சர்களும் பாஜக மற்றும் அண்ணாமலையை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

எடப்பாடி உருவப்படம் எரிப்பு
அதேபோல் பாஜக மாநிலத் தலைவர்களும் அதிமுகவை சாடி வந்தனர். சென்னையில் பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சி நிர்வாகி எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தபோது மைக்கை பிடுங்கினார் பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன். அதேபோல், எடப்பாடி உருவ படத்தை எரித்தவர் 6 மாதங்கள் இடைக்காலமாக நீக்கப்பட்டார்.

டெல்லியின் திட்டம்
இதனை வைத்து பார்க்கையில் அதிமுகவிடம் பாஜக பணிந்து செல்கிறதோ என்ற பேச்சு எழுந்த நிலையில் நீக்கப்பட்ட மறுநாள் காலையிலேயே எடப்பாடி படத்தை எரித்த நிர்வாகியை கட்சியில் மீண்டும் இணைந்தது பாஜக. இது அதிமுகவினருக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் நிலைமை கைமீறி சென்றுகொண்டிருந்ததை டெல்லி உணர்ந்தது.

பொதுச்செயலாளர் தேர்தல்
இந்த நிலையில் எடப்பாடி - ஓபிஎஸ் - சசிகலா ஆகியோரை மீண்டும் இணைந்தால் அவர்களை கட்டுப்பாட்டில் வைக்கலாம் என டெல்லி திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தது தாமரைக்கு ஷாக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

முதலமைச்சர் ஆசையா?
அதேபோல் தன்னை கடுமையாக விமர்சித்த அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுவதில் அண்ணாமலைக்கே தயக்கம் இருக்கிறதாம். அதேபோல் அவருக்கு முதலமைச்சர் ஆசையும் இருப்பதாக அவரது வலதுகரமான அமர் பிரசாத் ரெட்டியின் ட்வீட்டை வைத்து அறிய முடிகிறது. இதன் காரணமாகவே 2024 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்று அண்ணாமலை தெரிவித்திருக்கலாம் என்று பேசப்படுகிறது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications