இனி பிரச்சனை இல்லை.. அளிக்கப்பட்ட கிரீன் சிக்னல்.. சென்னையில் திறக்கப்படும் டாஸ்மாக்.. என்ன காரணம்?
சென்னை: சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. முறையான ஆலோசனை மற்றும் திட்டமிடலுக்கு பின் அரசு இந்த முடிவை எடுத்து உள்ளது.
தமிழகத்தில் இருக்கும் மதுபான கடைகளில் சென்னை தவிர மற்ற இடங்களில் கடைகளை திறந்து கொள்ளலாம், என்று அரசு கடந்த மே 7ம் தேதி அறிவித்தது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த காரணத்தால் அங்கு மட்டும் கடைகளை திறக்க அரசு அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில் சென்னையில் டாஸ்மாக் வரும் 18 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது சென்னையில் நடந்து வருகிறது.

என்ன கட்டுப்பாடு
ஆனால் கடும் கட்டுப்பாட்டுடன் இந்த கடைகள் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது. எல்லா கடைகளுக்கும் ஐந்துக்கும் அதிகமான போலீசார் நிற்க வைக்கப்பட்டு இருப்பார்கள். டோக்கன் அடிப்படையில் மது வழங்கப்படும். ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும். காலை 10 முதல் இரவு 7 மணி வரை கடை இருக்கும். கட்டுப்பாட்டு பகுதிகளில் கடை இருக்காது.

ஏன் இப்படி
சென்னையில் இப்படி திடீரென கடைகளை திறக்க என்ன காரணம் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது. முதல் காரணமாக சென்னையில் குறைந்து இருக்கும் கொரோனா கேஸ்கள் பார்க்கப்படுகிறது. சென்னையில் கடந்த ஒரு மாதமாக கொரோனா கேஸ்கள் குறைய தொடங்கி உள்ளது. தினமும் 1100 என்ற எண்ணிக்கையில் சராசரியாக கேஸ்கள் வருகிறது. சில நாட்களில் 1000க்கும் குறைவாக கேஸ்கள் வருகிறது.

கட்டுப்பாட்டு பகுதி
அதோடு சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளது. முன்பு 320 கட்டுப்பாட்டு பகுதிகள் இருந்தது. இப்போது கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 23 ஆக குறைந்துள்ளது. இதனால் மக்கள் இடையே கொரோனா பரவல் மொத்தமாக குறைந்துள்ளது. தற்போது தினமும் வர கூடிய 1000+கேஸ்களும் கூட இந்த கட்டுப்பாட்டு பகுதியில் இருந்தே வருகிறது.

இனியும் இல்ல
மற்ற இடங்களில் இருந்து கொரோனா கேஸ்கள் அதிக அளவில் வருவது இல்லை. இதனால் இந்த கட்டுப்பாட்டு பகுதிகளை லாக் செய்துவிட்டு, மற்ற இடங்களில் மக்களுக்கு லாக்டவுனில் இருந்து சுதந்திரம் அளிக்கலாம். இதனால்தான் சென்னையில் தற்போது கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வருவாய்
இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. சென்னை தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் வருவாய் தினசரி 130 கோடி ரூபாய் வரை சராசரியாக வருகிறது. ஆனால் இது கொரோனாவிற்கு இடையே தமிழக அரசின் பொருளாதார தேவைகளை சரி செய்ய உதவாது. சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறந்தால் வருவாய் இரட்டிப்பாகும். 200 கோடி வரை தினமும் வருவாய் கிடைக்கும்.

பட்ஜெட் உள்ளது
அடுத்த வருட பட்ஜெட், தேர்தல் செலவு, கொரோனா பொருளாதார சரிவை மீட்க தேவை என்று அரசுக்கு நிறைய தேவைகள் ஏற்பட்டுள்ளது. இதை ஈடுகட்ட சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் சென்னையை விட தினமும் அதிக கொரோனா கேஸ்கள் வரும் மற்ற பெருநகரங்களில் மதுபான கடைகள் தினமும் இயங்குகிறது.

எங்கு எல்லாம்
பெங்களூர், டெல்லி என்று தினமும் சென்னையை விட அதிக கேஸ்கள் வரும் இடங்களில் மதுபான கடைகள் இயங்குகிறது. அங்கு எல்லாம் பெரிய அளவில் கட்டுப்பாடுகள் இல்லை . இதனால் சென்னைக்கு மட்டும் ஏன் கட்டுப்பாடு, தாராளமாக டாஸ்மாக் கடைகளை திறக்கலாம் என்று அரசுக்கு தமிழக வாணிப கழகமும் ஆலோசனை வழங்கி உள்ளது. இதையடுத்தே முறையான விதிமுறைகளுடன் டாஸ்மாக் கடைகளை இயக்கலாம் என்று அரசு முடிவு செய்துள்ளது.
-
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
நாம ஜெயிச்சுட்டோம் மாறா.. கன்னியாகுமரியில் விடிய விடிய போராடி டாஸ்மாக் கடையை மூட வைத்த மக்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications