சிஎஸ்கே மீட்.. அடுத்தடுத்து ஓய்வு முடிவை அறிவித்த தல - சின்ன தல.. என்ன நடந்தது? ஏன் இந்த முடிவு?
சென்னை: கிரிக்கெட் வீரர்கள் தோனி மற்றும் ரெய்னா இருவரும் ஒரே நாளில் தனது ஓய்வு முடிவுகளை அடுத்தடுத்து எடுத்துள்ளனர்.
Recommended Video
இந்திய அணியின் மூத்த வீரர் தோனி இன்று கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டார். இன்று மாலை 7.29 மணியில் இருந்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்று இருந்தாலும், ஐபிஎல் போட்டிகளில் எப்போதும் போல விளையாடுவார். இந்த வருடம் செப்டம்பர் மாதம் நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் தோனி விளையாட இருக்கிறார்.

ரெய்னா
இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் தோனியை தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரெய்னாவும் அறிவித்துள்ளார். தலயின் அறிவிப்பை தொடர்ந்து சின்ன தலயும் தனது ஓய்வை அறிவித்துள்ளார். உங்களை பின்பற்றி ஓய்வு முடிவை எடுத்து இருக்கிறேன். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று ரெய்னாவும் அறிவித்துள்ளார்.

இருவரும் சந்தித்தனர்
ரெய்னா இந்திய கிரிக்கெட் அணியில் மிடில் ஆர்டரில் வாய்ப்பு கிடைக்காமல் பல வருடங்களாக சிரமப்பட்டு வந்தார். இந்திய மிடில் ஆர்டர் கடந்த சில வருடங்களாக மிக மோசமாக திணறி வந்தது. 4 மற்றும் 5வது இடத்தில விளையாட இந்திய அணியில் சரியான வீரர்கள் இல்லை . ஆனாலும் கூட இந்திய அணியில் ரெய்னா எடுக்கப்படவில்லை. பண்ட் போன்ற வீரர்கள் சொதப்பிய போதும் கூட ரெய்னாவிற்கு இடம் கிடைக்கவில்லை.

இப்போது என்ன
இப்போது தோனி ரெய்னா இருவரும் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்கள். ரெய்னாவின் ஓய்விற்கு பின் சரியான வாய்ப்பு கிடைக்காததும். இனிமேல் இந்திய அணியில் விளையாடுவது சிரமம் என்பதும் காரணமாக பார்க்கப்படுகிறது. தோனியின் ஓய்விற்கு பின் வயதும், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற அழுத்தமும் காரணமாக பார்க்கப்படுகிறது.

ஒன்றாக எடுத்து இருக்கலாம்
இவர்கள் இருவரும் இரண்டு நாட்களுக்கு முன்புதான் சந்தித்துக் கொண்டனர். சிஎஸ்கே அணி தற்போது கிரிக்கெட் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இதற்காக இவர்கள் இருவரும் சென்னை வந்தனர். ஐபிஎல் போட்டிக்காக தீவிரமான பயிற்சிகளை இவர்கள் எடுத்து வருகிறார்கள். இப்போதும் கூட இவர்கள் இருவரும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இருக்கலாம்
ஒருவேளை இவர்கள் இருவரும் நேரில் சந்தித்து ஒன்றாக இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள். தோனிக்கு செலுத்தும் மரியாதை போல, அதே நாளில் ரெய்னா ஓய்வை அறிவித்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள். அதாவது தனக்கு வாய்ப்பு கொடுத்து, தன்னை அணியின் முக்கியமான நபராக மாற்றி, சிஎஸ்கே அணியிலும் தனக்கு முக்கிய இடம் கொடுத்த தோனிக்கு ரெய்னா செய்யும் மரியாதை இந்த ஓய்வு என்கிறார்கள்.

வாய்ப்பு இருக்கிறது
அதேபோல் இவர்களின் ஓய்விற்கு ஐபிஎல்லும் ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். அதாவது ஐபிஎல் போட்டிகளில் இவர்கள் கவனத்தை செலுத்த வாய்ப்புள்ளது . இந்திய அணிக்கு சென்றால், அது இளைஞர்களின் வாய்ப்பை பறிப்பது போல மாறிவிடும். அதனால் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது என்ற முடிவை இவர்கள் எடுத்துள்ளனர். இதுவும் கூட ஒரே நாளில் ஓய்வை அறிவிக்க காரணமாகும்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications