நம்பி வாங்க தம்பி... அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கு ஆள் பிடிப்பு தீவிரம்
சென்னை: அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது அதிமுக தலைமை.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சிக்கு புத்துயிரூட்டும் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன.
திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் லட்சக்கணக்கில் புதிய உறுப்பினர்களை இணைத்த நிலையில் இப்போது அதிமுகவும் இளைஞர்களை அதிகளவில் இணைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஜெயலலிதா தொடங்கியது
அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையை பொறுத்தவரை ஜெயலலிதாவால் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. கட்சிக்கு புதுரத்தம் பாய்ச்சி புத்துயிரூட்டும் வகையில் இந்த அமைப்பை உருவாக்கினார் ஜெயலலிதா. குறிப்பாக திமுக இளைஞரணிக்கு போட்டியாக அதிமுகவில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை தோற்றுவிக்கப்பட்டன. இதனிடையே இந்த அமைப்பை தற்போது வலிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். கவனம் செலுத்தி வருகின்றனர்.

பாசறை செயலாளர்
அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை தொடங்கப்பட்ட போது அதன் முதல் மாநில செயலாளராக இருந்தவர் டாக்டர் வெங்கடேஷ். இவர் டிடிவி தினகரனின் மைத்துனர், அதாவது சசிகலாவின் மூத்த அண்ணன் மகன். சில காலம் எல்லாம் சரியாக சென்று கொண்டிருந்த நிலையில் டாக்டர் வெங்கடேஷ் மீது போயஸ் கார்டனில் குவிந்த புகார்கள் காரணமாக அவர் ஓரங்கட்டப்பட்டு அடுத்தடுத்து வைகைச்செல்வன், கலைச்செல்வன், செந்தில்நாதன், என அண்மையில் பரஞ்சோதி வரை இந்த பொறுப்புகளை வகித்தனர்.

ஆக்டிவ் செயல்பாடு
திமுக இளைஞரணிக்கு போட்டியாக ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு அவரது மறைவுக்கு பிறகு சொல்லிக்கொள்ளும் வகையில் ஆக்டிவாக இல்லை. இதனிடையே அந்த நிலையை மாற்றி பாசறையில் அதிகளவில் இளைஞர்களையும், இளம் பெண்களையும் சேர்த்து அமைப்பை வலிமைப்படுத்துவார் என்ற நம்பிக்கையில் வேடசந்துர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி.பி.பி.பரமசிவத்திடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளது அதிமுக தலைமை.

சுறுசுறுப்பானவர்
அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளராக உள்ள டாக்டர் வி.பி.பி.பரமசிவத்தை பொறுத்தவரை அரசியலில் ஆக்டிவாக இயங்கக் கூடியவர். மருத்துவரான இவர் முன்னாள் துணை சபாநாயகர் பாலசுப்பிரமணியனின் மகன் ஆவார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பாசறை செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் பரமசிவம் தமிழகம் தழுவிய அளவில் பாசறைக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை தொடங்கியுள்ளார்.
-
அரசு இல்லத்திற்கு பை-பை.. ராயப்பேட்டை சொகுசு பங்களாவில் குடியேறினார் எடப்பாடி.. பின்னணி என்ன? -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications