இந்து சமய அறநிலையத் துறைக்கு ரூ.387 கோடி.. ரூ.100 கோடியில் பழமையான கோவில்கள் புனரமைப்பு: பிடிஆர்
சென்னை: 1000 ஆண்டு பழமையான கோவில்களை புனரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் தாக்கல் செய்தார். அப்போது துறை வாரியாக முக்கிய அறிவிப்புகளையும், துறைக்கு ஒதுக்கிய நிதி விபரங்களையும் அவர் தெரிவித்து வந்தார்.
இந்து சமய அறநிலையத்துறை தொடர்பான அறிவிப்புகளை அவர் கூறினார். அப்போது தமிழகத்தில் சிதிலமடைந்த கோவில்களை புனரமைக்க உள்ளது குறித்து அவர் தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:
தமிழர்களின் வரலாறு, பண்பாடு, கட்டடக்கலை ஆகியவற்றின் விழுமியங்களின் சான்றாக தொன்மையான கோவில்கள் தமிழகமெங்கும் உள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில்களை அவற்றின் பழமை மாறாமல் புதுப்பித்து, புனரமைத்து பார் போற்றும் வண்ணம் பணிகள் மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். இப்பணிகள் ரூ.100 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். மொத்தமாக இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.340.87 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications