4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்.. 16 மாவட்டங்களில் இன்று கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகத்தில் தீவிரம் அடைந்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் இதனால் தீவிரமாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடலோர பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது.
தமிழகத்தில் மழை பெய்ய இதுதான் காரணம். இந்த புதிய காற்றழுத்த தாழ்வுநிலை நாளுக்கு நாள் வலிமை அடைந்து கொண்டே செல்கிறது.

என்ன ரெட் அலெர்ட்
தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் இன்று அதி தீவிர மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்று எப்படி
அதேபோல் இன்று தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும். திருவள்ளூர், தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர், நீலகிரி, புதுக்கோட்டை, கன்னியாக்குமரி, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தீவிரம் அடையும்
இந்த மழை படிப்படியாக தீவிரம் அடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் கனமழை பெய்யும். அதன்பின் காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறும். அதன்பின் 2 நாட்களில் கனமழை அதி தீவிர மழையாக மாறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை எப்படி
சென்னையில் இன்று சாரல் மழை பெய்யும். இன்று மாலைக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications