டவ் தே புயல்: தமிழகம் உள்பட 3 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்தது வானிலை மையம்
சென்னை: தமிழகம், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.
தென் கிழக்கு அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நேற்றைய தினம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு டவ் தே என பெயரிடப்பட்டுள்ளது. இதை மியான்மர் நாடு பெயர் சூட்டியது.
தற்போது கோவா கடற்கரை பகுதியில் இந்த புயல் மையம் கொண்டுள்ளது. இதனால் குஜராத், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கனமழையை கொடுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரையை கடக்கும்
இந்த புயல் நாளை மறுநாள் குஜராத்தின் போர்பந்தர்- நலியா இடையே கரையை கடக்கும். இந்த புயல் அரபிக் கடலில் மத்திய கிழக்கு பகுதியில் உள்ளது. கோவாவிலிருந்து வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழகம், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட மாநிலங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகம்
பலத்த சூறாவளியுடன் தமிழகம் உள்பட மாநிலங்களிலும் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு நல்ல மழையை கொடுக்கும். சென்னை உள்பட வடகடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யும்.

நீலகிரி மாவட்டம்
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் பந்தலூரில் 18 செ.மீ. மழை பெய்துள்ளது. நடுவட்டம், சின்கோனா ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ. மழையும், சிவலோகத்தில் 8, சுருளக்கோடு, சிற்றார், கூடலூர் பஜார், பெருஞ்சாணி, புத்தர் அணை ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது.

தக்கலை
குளித்துறை, தக்கலை ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ. மழையும் குளச்சல், தேக்கடி, பெரியார், அவலாஞ்சி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் தலா 5 செ,மீ. மழையும் பதிவாகியுள்ளது. இரணியல், தென்காசி, பாபநாசம் தலா 4 செ.மீ. மழையும் மயிலாடி, நாகர்கோவில், கொட்டாரம், பொள்ளாச்சியில் தலா 3 செ.மீ. மழையும் பெய்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications