சென்னையின் புறநகர் பகுதி.. சிஎம்டிஏ அறிவிப்பு அரசியல் சட்டத்துக்கு விரோதமானது.. ஹைகோர்ட் அதிரடி
சென்னை: சென்னை புறநகர் பகுதியில் உள்ள 27 கிராமங்களில் உள்ள 13 ஆயிரத்து 720 ஹெக்டேர் நிலப்பரப்பை 'செங்குன்றம் ஏரி நீர்பிடிப்பு பகுதி' என அறிவித்து சிஎம்டிஏ பிறப்பித்த உத்தரவு அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும் 2வது மாஸ்டர் பிளானில் இதனை மாற்றியமைக்கவும் உத்தரவிட்டுள்ளது.
சென்னையின் புறநகர் பகுதிகள், நீர்பிடிப்பு பகுதிகளாகவும்,நீர்நிலை பகுதிகளாகவும் உள்ளது. சென்னையை சுற்றியிருந்த பல ஏரிகள் இன்று ஆக்கிரமிப்பு காரணமாக சுருங்கிவிட்டன. சென்னையின் பல நீர்நிலைப்பகுதிகள் அடுக்குமாடி குடியிருப்புகளாகவும், பெரிய நகரங்களாகவும் உருவெடுத்துவிட்டன. தற்போது சுருங்கிவிட்ட சென்னையின் நீர்நிலைப்பகுதிகளை பாதுகாக்கவும், ஏற்கனவே உள்ள பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் கட்டிடங்களை அகற்றவும் சிஎம்டிஏ அதிரடி உத்தரவினை பிறப்பித்தது,.

அதாவது சிஎம்டிஏ, சென்னை பெருநகர இரண்டாவது முழுமை திட்டத்தின் (மாஸ்டர் பிளான்) அடிப்படையில், புறநகர் பகுதியில் 27 கிராமங்களில் பரந்து விரிந்திருந்த 13 ஆயிரத்து 720 ஹெக்டேர் பரப்பு நிலத்தை 'செங்குன்றம் ஏரி நீர்பிடிப்பு பகுதி' என அறிவித்தது. மேலும் குறிப்பிட்ட 13 ஆயிரத்து 720 ஹெக்டேர் அளவுள்ள நீர்பிடிப்பு பகுதியில் வளர்ச்சி பணிகளுக்கு தடை விதித்தது. அத்துடன் சோழவரம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட அலமாதி கிராமத்தில் இயங்கி வந்த இரு தனியார் நிறுவனங்களை மூடி சீல் வைத்தது. அத்துடன் அந்தக் கட்டுமானங்களை இடிக்கவும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் 2017ஆம் ஆண்டு அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து குளோபல் வேஸ்ட் ரீசைக்கிளிங் நிறுவனம், பி.டி.எண்டர்பிரைசஸ் நிறுவனம் ஆகிய இரண்டு நிறுவனங்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு, இவ்வளவு பெரிய நிலப்பரப்பை நீர்பிடிப்பு பகுதி என அறிவித்தது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என உத்தரவிட்டனர்.
தமிழக அரசுக்கோ, உள்ளாட்சி அமைப்புகளுக்கோ இவ்வளவு பெரிய நிலப்பரப்பான 13 ஆயிரத்து 720 ஹெக்டேர் பரப்பை நீர்பிடிப்பு பகுதி எனவும், வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளக் கூடாத பகுதி எனவும் அறிவிக்க உரிமை இல்லை என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்தனர். மேலும் சென்னை பெருநகர இரண்டாவது முழுமை திட்டத்தை, இந்த தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு நகரமைப்பு சட்ட விதிகளை பின்பற்றி மாற்றியமைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், அறிவிப்புக்கு பின் மூன்று ஆண்டுகளுக்கு மேல் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ளாமல், இழப்பீடு வழங்காமல், சில நிறுவனங்களுக்கு சாதகமாகவும், மனுதாரர் நிறுவனங்களுக்கு பாரபட்சமாகவும் செயல்பட்டுள்ளதாகக் கூறிய நீதிபதிகள், மனுதாரர் நிறுவனங்களுக்கு சீல் வைத்தும், கட்டிடங்களை இடிக்கவும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications