Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2 விஷயம் தான்.. வீடு வாங்குவோருக்கு ஏற்பட்ட சிக்கல்.. ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் பரபரப்பு பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: முத்திரை தீர்வு மற்றும் சொத்து பதிவு கட்டணத்தை குறைத்தால் வீடு வாங்குவோரின் நிதிச்சுமை கணிசமாக குறையும் என்றும் இந்த கட்டணங்கள் காரணமாக வீடுவாங்கும் மக்களின் எண்ணத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்க கூட்டமைப்பினர் (கிரெடாய்) தெரிவித்து உள்ளனர்.

இந்திய முத்திரைச் சட்டப்படி, பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், வங்கிகள் பயன்படுத்தும் பல வகையான ஆவணங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய முத்திரைத் தீர்வை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. சில வகையான ஆவணங்களுக்கு 1992-ம் ஆண்டிலும், வேறு சில வகை ஆவணங்களுக்கு 2001-ம்ஆண்டும் முத்திரைத் தீர்வை உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டது.

முத்திரைச் சட்டத்தில் உள்ள 65 வகையான ஆவணங்களில், வங்கி, நிறுவனங்கள் போன்றவை பயன்படுத்தும் 15 வகையான ஆவணங்களுக்கு முத்திரை தீர்வை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

Reducing stamp duty and property registration fees will reduce the financial burden on home buyers: CREDAI

இதேபோல் சொத்து விற்பனை, நன்கொடை, பரிமாற்றம் ஆகிய ஆவணங்களுக்கு கடந்த 2017 ஜூன் 8-ம் தேதி வரை கடைப்பிடிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பில் 5 சதவீதம் முத்திரை தீர்வை, 2 சதவீதம் சொத்து மாற்று வரி, 2 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கும் வந்துள்ளது. இதேபோல் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே இல்லாத ஏற்பாடு ஆவணத்துக்கு 7 சதவீதம் முத்திரை தீர்வை, 2 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டணங்கள் காரணமாக சொத்து வாங்குவோர் கூடுதலாக அதிக பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வீடு வாங்கும் எண்ணம் மக்களிடையே குறையும் அபாயம் எழுந்துள்ளதாகரியல் எஸ்டேட் துறையினர் கலக்கம் அடைந்துள்ளனர்.

இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்க கூட்டமைப்பின் (கிரெடாய்) சென்னை மண்டலத் தலைவர் சிவகுருநாதன், தென்மண்டல துணைத்தலைவர் ஸ்ரீதரன், இந்திய கட்டுமான சங்கத் தலைவர் பாலாஜி, சென்னை தெற்கு கட்டுமான சங்கத் தலைவர் மோகன், மாநிலத்தலைவர் இளங்கோவன், சிங்காரச் சென்னை கட்டுமானச் சங்க தலைவர் ஹனீபா உள்ளிட்டோர் சென்னையில் செவ்வாய்கிழமை செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறும் போது, தமிழக அரசு முத்திரை தீர்வு, சொத்து பதிவு கட்டணம் உள்ளிட்டவற்றை அதிகரித்துள்ளது. இந்த கட்டண உயர்வு அனைவருக்கும் வீடு என்ற தமிழக அரசின் தொலைநோக்கு பார்வையை பாதிக்கும்.

முத்திரை தீர்வு, சொத்து பதிவு கட்டணங்களில் ஏற்பட்ட திடீர் உயர்வு, வீடு வாங்குபவர்களுக்கு கணிசமான நிதிச்சுமையை அதிகரித்துள்ளது. முன்னணி வங்கிகள் இதற்கு கடன் தர தயாராக இல்லை. இதனால் கூடுதல் தொகையை வீடு வாங்குபவர்கள், தங்கள் சொந்த பணத்தில் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சொத்துப் பதிவுகள் தாமதம் ஆகி உள்ளது. தமிழகத்தில் கட்டுமான பணிகள் மற்றும் குடியேறத் தயாராக உள்ள குடியிருப்பு திட்டங்கள் ஆகிய இரண்டிலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதுபோன்ற முடிவுகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்துவதற்கு முன், முழுமையான அணுகுமுறை மற்றும் பொதுமக்களின் கருத்தை கேட்க வேண்டு என்று கோரிக்கை வைக்கிறோம்.

இப்போது உள்ள சூழலில் வீடு வாங்குவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து உள்ளோம். இதுதொடர்பாக தமிழக அரசிடம் முறையிட்டு உள்ளோம். அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

ரியல் எஸ்டேட்டை பொறுத்த வரை, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது. அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 23 சதவீத பங்களிப்பை கொண்டிருக்கிறது. ரியல் எஸ்டேட் துறை 2030-ம் ஆண்டு ரூ.82 லட்சம் கோடியை எட்டும் என்றும், 2025-ம் ஆண்டு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13 சதவீதம் பங்களிக்கும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது.

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒருவர் ரூ.50 லட்சத்தில் அடுக்குமாடி குடியிருப்பை வாங்கும்போது, அவர் கூடுதலாகலு ஒரு லட்சம் ரூபாய் செத்த வேண்டிய சூழல், கட்டண உயர்வால் ஏற்பட்டுள்ளது. இது, அவர்களின் வீடு வாங்கும் எண்ணத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சதவீத அடிப்படையில் கட்டணத்தை உயர்த்தாமல், ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் என்று உயர்த்தியிருக்கலாம்.

எனவே சந்தை நிலைமை மற்றும் நியாயமான மதிப்பீட்டுக்கு ஏற்ப சொத்து பதிவு மற்றும் முத்திரை கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்வது அவசியம். கட்டணங்களை குறைப்பதன் மூலம் அது வீடு வாங்குபவர்களின் நிதிச்சுமையை கணிசமாக குறைக்கும்" இவ்வாறு ரியல் எஸ்டேட் துறையினர் தெரிவித்தார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+