தமிழகத்தில் 7 மேஜர் ரயில்களில் ஸ்லீப்பர் கோச்கள் அதிரடியாக குறைப்பு.. கையோடு ரயில்வே செய்த ட்விஸ்ட்
சென்னை: தமிழ்நாட்டிலிருந்து செல்லும் 7 முக்கிய ரயில்களில் 2-ம் வகுப்பு பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து செல்லும் நீண்ட தூர ரயில்களில் 2ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் குறைக்கப்பட்டு ஏசி பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை ராமேஸ்வரம் விரைவு ரயிலில் நான்கு 2ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், ஏசி பெட்டிகளாக மாற்றப்படுகின்றன. இனி ராமேஸ்வரம் கோவை விரைவு ரயிலில் 8 ஏசி பெட்கடிள், ஒன்பது 2ம் வகுப்பு பெட்டிகள், 3 முன்பதிவில்லா பெட்டிகள் இருக்கும்.

கோவை -ராஜ்காட் விரைவு ரயிலில் இனி 8 ஏசி பெட்டிகள் , ஒன்பது 2ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 3 முன்பதிவில்லா பெட்டிகள் இருக்கும்.
எழும்பூர்-ஜோத்பூர் விரைவு ரயிலில் ஐந்து 2ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், ஒரு முன்பதிவில்லா பெட்டிக்கு பதில் 6 ஏசி பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர்-ஜோத்பூர் விரைவு ரயிலில் 13 ஏசி பெட்டிகள், ஆறு 2ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 3 முன்பதிவில்லா பெட்டிகள் இடம் பெறும்.
சென்னை-நாகர்கோவில் விரைவு ரயிலில் ஐந்து 2ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி, ஒரு முன்பதிவில்லா பெட்டி நீக்கப்பட்டு 6 ஏசி பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
மன்னார்குடியில் இருந்து ராஜஸ்தானின் பகத் கி கோதி செல்லும் விரைவு ரயிலில் மூன்று 2ம் வகுப்பு பெட்டிகள், ஒரு முன்பதிவில்லா பெட்டி குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மன்னார்குடி -பகத் கி கோதி ரயிலில் குறைக்கப்பட்ட 2ம் வகுப்பு பெட்டிகளுக்கு பதில் 4 ஏசி பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இனி மன்னார்குடி-பகத் கி கோதி ரயிலில் 11 ஏசி பெட்டிகள், ஏழு 2ம்வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் இருக்கும்.
ராமேஸ்வரம் -ஒகா(குஜராத்) விரைவு ரயிலில் ஐந்து 2ம் வகுப்பு, ஒரு முன்பதிவில்லா பெட்டிக்கு பதில், 6 முதல் வகுப்பு பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே இனி ராமேஸ்வரம் -ஒகா (குஜராத்) விரைவு ரயிலில் 10 ஏசி பெட்டிகள், ஆறு 2ம் வகுப்பு பெட்டிகள் மற்றும் 3 முன்பதிவில்லா பெட்டிகள் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மங்களூரு சென்ட்ரல் லேக்மானிய திலக் (மும்பை) விரைவு ரயிலில் ஒருமுன்பதிவில்லா பெட்டி ஏசி பெட்டியாக மாற்றப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 3ம் தேதி முதல் எழும்பூர்-நாகர்கோவில் விரைவு ரயிலில் 13 ஏசி பெட்டிகள், ஆறு 2ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 3 முன்பதிவில்லா பெட்டிகள் இருக்கும்.
ரயில் பெட்டிகளில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் இம்மாத இறுதி மற்றும் ஆகஸ்ட் தொடக்கத்தில் அமலுக்கு வரும். 2-ம் வகுப்பு பெட்டிகள் குறைக்கப்பட்டு ஏசி பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில் 2ம் வகுப்பு பெட்டிகளுக்கு பதில் ஏசி பெட்டிகளில் பயணிக்க மூன்று மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டம் என்பதால் பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தற்போதைய நிலையில் சென்னை நாகர்கோவிலுக்கு 2ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியில் பயணிக்க 425 ரூபாய் கட்டணம்ஆகும். ஆனால் 3ம் வகுப்பு ஏசி பெட்டியில் பயணிக்க ரூ.1110 கட்டணம் செலுத்த வேண்டும்.

ரயில்வே வர்த்தக நோக்கில் செயல்படுவதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்று ரயில்வே ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ரயில்வே நிர்வாக நடவடிக்கையால் 2ம் வகுப்பு பெட்டிகளில் கூட்ட நெரிசல் அதிகரிக்கும் என்றும் ரயில்வே ஊழியர்கள் சங்கம் கூறியுள்ளது.
வசதி படைத்தவர்கள் மட்டுமே ரயிலில் பயணிக்க முடியும் என்ற நிலையை ரயில்வே நிர்வாகம் உருவாக்குவதாக ரயில்வே ஊழியர்கள் குற்றம்சாட்டி உள்ளது.
இதனிடையே ஏற்கனவே இயக்கப்படடு வரும் ரயில்களில் 2ம் வகுப்பு பெட்டிகளை குறைப்பது கடும் கண்டனத்திற்குரியது என ரயில் பயணிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications