புவனகிரியில் குவிகிறது கவனம்.. ஒரே ஒரு வார்டில் இன்று மறுவாக்குப்பதிவு.. இன்றே வெளியாகிறது ரிசல்ட்
புவனிகிரியின் ஒரே ஒரு வார்டில் மட்டும் இன்று மறுவாக்குபதிவு நடக்கிறது
சென்னை: புவனகிரி பேரூராட்சியில் ஒரு வார்டில் மறுவாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. .இந்த ஒரு வார்டில் மட்டும் இயந்திர கோளாறு காரணமாக மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் கடந்த 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளுக்கு இந்த தேர்தல் நடத்தப்பட்டது.
1,374 மாநகராட்சி உறுப்பினர், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு, அதில் பதிவான வாக்குகளும் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன.

அபார வெற்றி
இதில் திமுக பெரும்பாலான இடங்களில் வென்றதுடன், அதிமுகவின் கோட்டைகளையும் தட்டி தூக்கியது... குறிப்பாக 21 மாநகராட்சிகளில் அனைத்தையும் திமுக கைப்பற்றியுள்ளது. அத்துடன் 75%க்கும் மேலான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது... இது திமுகவுக்கு கிடைத்த மிகப்பெரிய வரலாற்று வெற்றியாக கருதப்பட்டு வருகிறது.. திமுக தொண்டர்களும் மகிழ்ச்சியான மனநிலையில் உள்ளனர்.

புவனகிரி
தனித்து போட்டியிட்ட கட்சிகள் அனைத்தும் தோல்வியை தழுவி உள்ளன.. அதிமுக 2வது இடத்தை பெற்றுள்ளது.. பெரும்பாலான கட்சிகள் டெபாசிட் வாங்காமல் மண்ணை கவ்வியுள்ளன.. இந்நிலையில், கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சியில் மட்டும், ஒரே ஒருவார்டில், வாக்கு எண்ணிக்கையின் போது இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது..

மிஷின் கோளாறு
இதனால் அங்கு வாக்கு எண்ணிக்கை தடைபடவும், மறுவாக்குபதிவு மீண்டும் இங்கு நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.. அதற்கேற்றவாறு, புவனகிரியை தவிர்த்து மற்ற எல்லா இடங்களிலும் தேர்தல் விதிகள் வாபஸ் பெறப்பட்டுவிட்டன.. இந்நிலையில் புவனகிரி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ள நிலையில் 4-வது வார்டில் இன்று மறு வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது..

ரிசல்ட்
புவனகிரி பேரூராட்சி 4-ம் வார்டு வாக்குச்சாவடி எண் 4AV ல் இந்த மறு வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கிறது. மாலை 6 மணிவரை வாக்குபதிவு நடக்கிறது. ஒரே ஒரு வார்டு என்பதால், வாக்குப்பதிவு முடிந்தவுடனேயே, வாக்கு எண்ணிக்கை நடத்தி தேர்தல் முடிவுகள் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது... ஒரேநாளில் தேர்தல் நடத்தி, ஒரே நாளில் எண்ணப்பட்டு, ரிசல்ட்டும் வெளியாவதால் மிகுந்த எதிர்பார்ப்பையும் கவனத்தையும் புவனகிரி பெற்று வருகிறது.
-
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ!












Click it and Unblock the Notifications