இனி சார் பதிவாளர் அலுவலகம் சனிக்கிழமைகளிலும் செயல்படும்.. தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: இனி சனிக்கிழமைகளில் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் சனிக்கிழமைகளில் மட்டும் பத்திரம் பதிவு செய்ய ரூ 1000 கட்டணமாக வசூலிக்கப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
பத்திரப் பதிவுத் துறை 138 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு சேவையாற்றி வருகிறது. அத்துடன் அரசு நிர்வாகத்திற்கு தேவையான நிதியை திரட்டி தருவதில் மூன்றாவது இடத்தை வகிக்கிறது. மேலும் அரசுக்கும் பொதுமக்களுக்கும் பாலமாக இருந்து சேவையாற்றி வருகிறது.
இந்த குறிக்கோளுடன் இந்த துறை நவீனமயமாக்கலுக்கு அடிகோலிட்டுள்ளது. சென்னை, கோவை , கடலூர் உள்ளிட்ட 9 இடங்களில் மண்டல அலுவலகங்களும் அரக்கோணம், அரியலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 50 மாவட்ட பதிவாளர் அலுவலகங்களும் உள்ளன.

571 சார்பதிவாளர் அலுவலகம்
தமிழ்நாடு முழுவதும் 571 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகம் மூலம் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வில்லங்கம் இருக்கிறதா என பார்த்து அவ்வாறு இல்லாவிட்டால் அந்த இடத்தை நாம் விலை கொடுத்து வாங்கலாம்.

சொத்து வழி முறை
சொத்து வழிமுறை மதிப்புகள், வில்லங்க பதிவுகள், முத்திரை தாளுக்கான ஆன்லைன் கட்டணம், பத்திர முன்பதிவு போன்ற பல அம்சங்கள் சேவைகளாக வழங்கப்படுகின்றன. வாரத்தில் 5 நாட்கள் இந்த துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

இனி சனிக்கிழமை
இந்த நிலையில் இனி சனிக்கிழமைகளிலும் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்கள் பத்திரப்பதிவு செய்ய ஏதுவாக சார் பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவணப் பதிவிற்கான முன்பதிவ டோக்கன் வழங்குவதில் தட்கல் முறை அறிமுகப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சனிக்கிழமைகளில் மட்டும் பத்திரப் பதிவிற்கு ரூ 1000 வசூலிக்கப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் பத்திரப் பதிவு செய்யும் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் பத்திரம் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம். ஆனால் பத்திரம் பதிவு செய்ய பொதுமக்கள் நேரில் செல்ல வேண்டிய நிலை இருந்தது.

லஞ்சம் கொழிக்கும் துறை
இதனால் இடைத்தரகர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பத்திர பதிவுக்கு பொதுமக்களிடம் பல இடங்களில் லஞ்சம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதற்கு ஒரு முடிவு கட்ட பொதுமக்கள் இனி பத்திரம் பதிவு செய்ய நேரில் வர வேண்டிய அவசியமில்லை என அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications