பத்திரப்பதிவு அதிரடி.. சந்தை வழிகாட்டி மதிப்பு.. தமிழக பதிவுத்துறை வெளியிட்ட அறிவிப்பு பாருங்க
சென்னை: பதிவுத்துறை சந்தை வழிகாட்டி மதிப்பு சீரமைப்புக்குழுவின் முதல்அடுக்கு உயர்மட்டக்குழு தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர். வாசுகி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. இதுகுறித்து அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
வழிகாட்டி மதிப்பு என்பது அரசாங்கத்தின் ஆவணங்களின்படி சொத்து ஒன்றின் நிர்ணயிக்கப்பட்ட சந்தை மதிப்பாகும்... அதன்படி, சொத்தின் சந்தை மதிப்பும், வழிகாட்டி மதிப்பும் ஒன்றாகவே இருக்க வேண்டும்.

ஆனால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சந்தை மதிப்பை விட, வழிகாட்டி மதிப்பு குறைவாகவே இருக்கும்.. ஒருசில சமயங்களில் மட்டும், வழிகாட்டி மதிப்பு என்பது சந்தை மதிப்பை விட அதிகமாக இருக்கும்.
சந்தை மதிப்பு: சொத்துக்களின் சந்தை மதிப்பை அறிவதற்கு உரிய காரணியாக சந்தை மதிப்பின் வழிகாட்டி பதிவேடு பின்பற்றப்படும் நிலையில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமி ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அந்த அரசாணையில் சொல்லியிருப்பதாவது: "பதிவுத்துறையில் பின்பற்றப்படும் சொத்துகளுக்கான சந்தைவழிகாட்டி மதிப்பை சீரமைக்க, சந்தை வழிகாட்டி மதிப்பு தொடர்பாக களநிலவரம் பற்றி ஆராய்ந்துவழிகாட்டி மதிப்பை நிர்ணயிப்பதற்கான வழிமுறைகளை பரிந்துரைக்க ஓர் உயர்மட்டக்குழு அமைக்கப்படும் என்று 2021-2022-ம்ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
சந்தை வழிகாட்டி மதிப்பு: அதன்படி, இரு அடுக்குகளுடன் (முதல் அடுக்கு - உயர்மட்டக்குழு, இரண்டாவது அடுக்கு - வழிகாட்டும் குழு) கூடிய சந்தை வழிகாட்டி மதிப்பு சீரமைப்புக்குழு அமைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டன.
சந்தை வழிகாட்டி மதிப்பு சீரமைப்புக்குழுவின் முதல்அடுக்கு உயர்மட்டக்குழு தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஜோதி ஜெகநாதன் கடந்த மே மாதம் 22-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.. ஆனால், சில தனிப்பட்ட காரணங்களுக்காக ஜூலை 3-ம் தேதி அந்த பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார்.
வாசுகி நியமனம்: இந்நிலையில், அந்த பொறுப்பில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.வாசுகி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சந்தை வழிகாட்டி மதிப்பு சீரமைப்புக்குழுவின் முதல் அடுக்கு உயர்மட்டக்குழு தலைவராக ஆர்.வாசுகி கடந்த 1-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது தலைமையிலான உயர்மட்ட குழுவானது வழிகாட்டி மதிப்பில் உள்ள முரண்பாடுகளை தீவிரமாக ஆராய்ந்து அதனை நேர் செய்ய, உரிய பரிந்துரைகளை பதிவுத்துறைக்கு அளிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications