தாம்பரம் தம்பதிக்கு மறுவாழ்வு.. இந்த காலத்தில் இப்படியும் ஒரு பெண்ணா.. ரூ.35 லட்சம் தங்கம் அப்படியே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தை சேர்ந்தவர்கள் ராமகிருஷ்ணன் - மீனாட்சி தம்பதிக்கு மறுவாழ்வு கொடுத்துள்ளார் துய்மை பணியாளர் ஜெயமணி.. திருமண மண்டபத்தில் தம்பதி தவறவிட்ட ரூ.35 லட்சம் தங்க, வைர நகைகளை போலீசில் ஒப்படைத்துள்ளார். இதை கேள்விப்பட்ட ஆவடி போலீஸ் துணை கமிஷனர் ஐமன் ஜமால் நேரில் அழைத்து பாராட்டினார். அப்போது ஜெயமணிக்கு அந்த நகைப்பெட்டியின் உரிமையாளர்கள் இன்ப அதிர்ச்சி தந்தனர்.

இன்றைக்கு ஒருவர் நேர்மையாக இருப்பதே மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அதேபோல் மண், மது, மாது என்ற ஏதாவது ஒன்றில் ஒருவர் பலவீனமாக இருப்பார்கள்.கெட்டப்பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி, மனதை குப்பை போல் மாற்றி, தூய்மையே செய்ய முடியாத அளவிற்கு கரையோடி போய் வாழ்ந்த வருகிறார்கள் பலர்.

Rehabilitation for Tambaram couple Praise for woman who handed over Rs 35 lakh gold and diamonds

சந்தர்ப்பம் கிடைக்காத வரையில் தான் ஒருவர் சத்யசீலர் போலவும் உத்தமன் போலவும் வாழ்வார்கள். ஆனால் மது, மாது, தங்கம், நிலம் போன்ற விஷயங்களில் சந்தர்ப்பம் கிடைத்தால் பலரும் தன்னிலை மறந்து தவறுகளை இழைத்து விடுகிறார்கள். நிறைய பேர் பெண்கள் விஷயத்தில் தவறிழைக்கிறார்கள்.

அதேபோல் மதுபானங்களில் வீழ்ந்துவிடுகிறார்கள். சிலர் தங்க நகை கீழே கிடந்தால், அதனை எடுத்துக்கொண்டு எஸ்கேப் ஆகிவிடுவார்கள். யாரும் பார்க்கவில்லை என்றால் அப்படியே அமுக்கிவிடுவார்கள்..ஆனால் ஒரு பெண் 35 லட்சம் மதிப்புள் தங்கம் மற்றும் வைர நகைகளை திரும்ப ஒப்படைத்துள்ளார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அவரை பற்றி பார்ப்போம்.

சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தை சேர்ந்தவர்கள் ராமகிருஷ்ணன் - மீனாட்சி தம்பதி. இவர்கள் கடந்த ஜூலை 2-ந்தேதி அயப்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு வீட்டுக்கு திரும்பினர். அப்போது அவர்கள் ரூ.35 லட்சம் மதிப்புள்ள வைரம் மற்றும் 20 பவுன் தங்க நகைகள் இருந்த நகைப்பெட்டியை மண்டபத்தில் உள்ள மணமகன் அறையில் கட்டிலுக்கு அடியில் வைத்திருந்ததை எடுக்க மறந்துவிட்டார்கள்.

அந்த மண்டபத்தை சுத்தம் செய்த திருச்சியை சேர்ந்த ஜெயமணி என்ற பெண் ஊழியர், அந்த நகைப்பெட்டியை எடுத்து மண்டப மேலாளரிடம் ஒப்படைத்தார். அவர் திருமுல்லைவாயல் போலீசில் ஒப்படைத்தார். நகைப்பெட்டியை நேர்மையுடன் போலீசில் ஒப்படைத்த ஜெயமணியை பாராட்டி ஆவடி போலீஸ் துணை கமிஷனர் ஐமன் ஜமால் பொன்னாடை போர்த்தி, ஊக்கத்தொகை வழங்கினார். மேலும் ஆவடி போலீசார் அந்த நகைப்பெட்டியை அதன் உரிமையாளர்களான ராமகிருஷ்ணன்-மீனாட்சி தம்பதியிடம் ஒப்படைத்தனர். நகையை பெற்றுக்கொண்ட அவர்கள், ஜெயமணியின் நேர்மையை பாராட்டி அவருக்கு அரை பவுன் தங்க மோதிரத்தை பரிசாக வழங்கி நன்றி தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+