வந்ததில் தேறியது 3 தான்.. ஓடவும் முடியாது.. தாவி தப்பிக்கவும் முடியாது.. பட்டையை கிளப்பும் பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பு முதல்நாளே தொற்றி கொள்ள ஆரம்பித்துவிட்டது

Subscribe to Oneindia Tamil

சென்னை: "வந்ததில் 3 தான் தேறுது".. என்று பிக்பாஸ் பிரபலங்களில் 3 பெண் பிரபலங்களை வைத்து சோஷியல் மீடியாவில் பரபரப்பை கிளப்ப தொடங்கிவிட்டனர்.
வழக்கம்போல இல்லத்தரசிகள் உட்பட ஏராளமானோரை தன் மாய, தந்திர வலையில் விழவைத்து வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி.

பல பேர் இந்த நிகழ்ச்சியை வேண்டாம் என்று புறக்கணித்தாலும் சரி, சரமாரியாக விமர்சித்தாலும் சரி, இதற்கான வியூவர்ஸ் இன்னமும் அதிகமாகி கொண்டுதான் இருக்கிறார்கள்.

 Rekha, Suresh and Aranthangi Nisha are rocking in Bigg Boss Tamil 4

போட்டி தொடங்கிய முதல் நாளிலேயே ஷிவானி தன் பக்கம் மொத்த பேரையும் திரும்பி பார்க்க வைத்துவிட்டார்.. அதிக ஹார்ட் பிரேக்குகளை பெற்றுவிட்டார்.

இவர்களில் கன்டன்ட் தருபவர்கள் என்று ரேகா, சுரேஷ், நிஷா ஆகிய 3 பேர்தான் என்கிறார்கள்.. இவர்கள்தான் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நிகழ்ச்சியை நடத்தி கொண்டு போவார்கள் என்றும் தெரிகிறது.. அதற்கேற்றபடி நேற்றும் சரி, இன்று வெளியான புரமோவிலும் சரி, சுரேஷ்தான் எதையோ சொல்லி வம்புகளை இழுத்து கொண்டிருக்கிறார்.

அடுத்த சண்டையை, ஷிவானியிடம் ஆரி ஆரம்பிக்கிறார். வந்த 2வது நாளே பிக்பாஸ் வீடு களைகட்டுவது இந்த முறை சீசனில்தான்! அதேபோல, உள்ளே வந்த பெண் போட்டியாளர்களில் 3 பேர் மட்டும் இளசுகளை கவர்ந்துள்ளனர்.

"ரம்யா பாண்டியன், ஷிவானி, அனிதா இவர்கள் பார்க்க அழகாக இருக்கிறார்கள்... இந்த 3 பேருக்காகவே புரோக்கிராமை பார்க்கலாம்.. 3 பேர் செமயா இருக்காங்க" என்று சோஷியல் மீடியாவில் இவர்களுக்கு ஆதரவான கமெண்ட்களை ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.. குறிப்பாக ரம்யா பாண்டியனுக்கு வந்த முதல்நாளே ஆர்மி என்றெல்லாம் பேச்சை தொடங்கி விட்டது ஆச்சரியமாகவும் உள்ளது.. இன்னும் போக போக என்னாக போகுதா!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+