குடும்ப சொத்து பாகப்பிரிவினை.. கடன் ரசீது, அடமானம் பத்திரத்தில் மாற்றம்? பதிவுத்துறை திடீர் உத்தரவு
சென்னை: "பொது அதிகார ஆவண ரத்து, பாகப்பிரிவினை உள்ளிட்ட பத்திரங்களை பதிவு செய்வது குறித்து பதிவுத்துறை முக்கிய உத்தரவினை பிறப்பித்திருக்கிறது.
பொதுவாக, ஆவணங்களை பதிவு செய்யும்போது, அது தொடர்பாக தடை ஏதாவது இருக்கிறதா என்பதை, சார் பதிவாளர்கள் சரிபார்ப்பது அவசியமாகும்..

ஆனால், இதுபோன்ற ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும்போது, வேறு சார் பதிவாளர் அலுவலகத்தில் தடை எதுவும் உள்ளதா என்பதையும் டிஐஜி. அலுவலகம் வாயிலாக சரிபார்க்க வேண்டும் என்பது நடைமுறையாக இருந்தது..
சார் பதிவாளர்: இதற்காக, சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு இடையே கடித போக்குவரத்து நடத்த, அதிக தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்தது. எனவேதான் இதனை முறைப்படுத்த ஆன்லைன் பத்திரப்பதிவுக்கான, ஸ்டார் 2.0 சாப்ட்வேரில் உரிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
எனினும், அதற்கு பிறகும் பெரும்பாலான சார் - பதிவாளர்கள், இவ்வகை பத்திரங்களை நிலுவையில் வைப்பதாக, பதிவுத்துறை கவனத்துக்கு வந்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்திருக்கிறார். அந்த உத்தரவில் உள்ளதாவது:
10 கட்டளைகள்: "வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் ஆவண ஒப்படைப்பு, அடமானம், கடன் முடிந்த பிறகு மேற்கொள்ளப்படும் ரத்து மற்றும் ரசீது, பொது அதிகார ரத்து, குடும்ப நபர்களிடையே மேற்கொள்ளப்படும் பாகப்பிரிவினை பத்திரங்கள் தாக்கலாகும் போது, டி.ஐ.ஜி., அலுவலகத்தில் இருந்து ஒப்புதல் பெற வேண்டியதில்லை.
இது தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. இவை தவிர, பிற ஆவணங்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் தொடரும். இதற்கான சுற்றறிக்கை அடிப்படையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தளர்வுகள்: முன்னதாக அதாவது கடந்த ஏப்ரல் 5ம்தேதியே பதிவுத்துறை அதிகாரி சில உத்தரவுகளை பிறப்பித்திருந்தார்.. அதாவது, உரிய காரணமின்றி, பத்திரங்களை நிலுவையில் வைக்கும் சார் - பதிவாளர்களுக்கு கிடுக்கிப்பிடி போடும் வகையில், 10 கட்டளைகள் அடங்கிய உத்தரவை, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அப்போது பிறப்பித்திருந்தார்.
அதில், "பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் பத்திரத்தை, சார் - பதிவாளர் நிலுவையில் வைக்கும் போது, 'ஸ்டார் 2.0 'மென்பொருளில், 'டிராப் டவுன் பாக்ஸ்' என்ற பிரிவில், உரிய காரணத்தை பதிவிட வேண்டும். ஒரு பத்திரம் நிலுவையில் வைக்கப்படும் நிகழ்வில், அதற்கான எழுத்துப்பூர்வ கடிதம் பெறப்பட்டிருக்க வேண்டும்.. நிலுவையில் வைக்கப்படும் பத்திரங்கள் விஷயத்தில், 15 நாட்களுக்குள் முடிவு எட்டப்பட வேண்டும்" என்பன உட்பட 10 கட்டளைகளை பிறப்பித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications