பஸ் லேட்டா வருதா? கண்டக்டர் எரிந்து விழுகிறாரா? இனி ஒரு போன் கால் போதும்! அதிரடி ஆக்ஷன் உறுதி!
சில்லறை கொடுக்கச் சொல்லி கண்டக்டர் எரிந்து விழுந்தால் கூட 1800 599 1500 என்ற எண்ணில் பயணிகள் புகார் அளிக்கலாம்.
சென்னை: பேருந்துகளின் தூய்மை, தாமதமாக இயக்குதல், பேருந்துக்காக அதிக நேரம் காத்திருப்பது, ஓட்டுநர்கள் பேருந்து நிறுத்தங்களைத் தவிர்ப்பது, பயணிகளின் பொருட்கள் பஸ்ஸில் தொலைந்து போவது, பேருந்துகளில் பணியாளர்கள் தவறான நடத்தை உள்ளிட்ட இன்னும் பல புகார்களை ஒரு போன் கால் மூலம் நீங்கள் அரசுக்கு தெரிவிக்கலாம்.
சில்லறை கொடுக்கச் சொல்லி கண்டக்டர் எரிந்து விழுந்தால் கூட தாராளமாக 1800 599 1500 என்ற இலவச எண்ணில் பயணிகள் உடனடியாக புகார் அளிக்கலாம்.
இது தொடர்பான விவரம் வருமாறு;

அரசுப் பேருந்துகள்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளைக் கண்டறியவும், அவர்களின் குறைகள் மற்றும் புகார்களைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கவும், ஒருங்கிணைந்த பயணிகள் குறை மற்றும் புகார் தீர்வு உதவி மையம் அமைக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.

இலவச எண் 1800 599 1500
உதவி மையத்தைத் தொடர்பு கொள்வதற்கான இலவச எண் 1800 599 1500 அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனால் பயணிகளுக்கு அழைப்புக் கட்டணம் எதுவும் இல்லை. பயணம் செய்யும் பயணிகள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார்கள், குறைகள் மற்றும் தகவல்களையும் பெறலாம்.

அமைச்சர் சிவசங்கர்
பயணிகள் மற்றும் பொது மக்களிடமிருந்து அழைப்புகளைப் பெறுவதற்கான வசதி பல்லவன் இல்லத்தில் உள்ள மாநகர போக்குவரத்து கழக தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட புகார்கள் மற்றும் குறைகள் பிரத்யேக அடையாள எண் ஒதுக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டு, பின்னர் ஒப்புகை குறுந்தகவல் பயணிகளுக்கு அனுப்பப்படும். பெறப்பட்ட புகார்கள் மற்றும் குறைகளை அந்தந்த போக்குவரத்து கழகங்கள் உடனுக்குடன் கண்காணிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

என்னென்ன புகார்கள்?
பயணிகள் மற்றும் பொதுமக்கள், பேருந்துகளின் தூய்மை, தாமதமாக இயக்குதல், பேருந்து பழுதடைதல், பேருந்து நிலையங்களில் உரிய பேருந்துகள் இல்லை, பேருந்து நிலையங்களில் அதிக நேரம் காத்திருப்பது, பேருந்து நிறுத்தங்களில் அதிக நேரம் காத்திருப்பது, ஓட்டுநர்கள் பேருந்து நிறுத்தங்களைத் தவிர்ப்பது, பயணிகளின் பொருட்கள் தொலைந்து போவது, பேருந்துகளில் பணியாளர்கள் தவறான நடத்தை, சக பயணிகளால் துன்புறுத்தல், பேருந்துகளை மோசமாகப் பராமரித்தல், விபத்துகள், வெள்ளம், கலவரங்கள் தொடர்பான புகார்கள் மற்றும் குறைகளை தெரிவிக்கலாம்.

கூகுள் குரல் உதவி
பேருந்து இயக்கம் தொடர்பான விசாரணை, பண்டிகைக் கால சிறப்பு பேருந்து இயக்கம் போன்ற தகவல்களையும் பெறலாம். விரும்பத்தகாத சம்பவங்கள் குறித்த எச்சரிக்கை செய்திகளை பணியாளர்கள் தெரிவிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் தங்கள் புகார் மற்றும் குறைகளை தங்கள் தொலைபேசியிலிருந்து " கூகுள் குரல் உதவி " வழியாக மேற்கண்ட இலவச எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குறுந்தகவல்
பெறப்படும் புகார்கள் மற்றும் குறைகளை அந்தந்த போக்குவரத்து கழகங்கள் கண்காணிக்கலாம். புகார்கள் மற்றும் குறைகள் தீர்க்கப்பட்ட பிறகு, புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பயணிகளுக்கு மீண்டும் குறுந்தகவல் தெரிவிக்கப்படும். இத்திட்டத்தின் செயல்பாட்டைக் கண்காணிக்க தேவையான நபர்கள் புகார் மையத்திலும் அந்தந்த போக்குவரத்துக் கழகங்களிலும் ஈடுபடுத்தப்படுவார்கள்.

போக்குவரத்துக் கழகங்கள்
தினசரி, வாராந்திர, மாத அடிப்படையிலான மற்றும் குறிப்பிட்ட காலத்திற்கு போக்குவரத்து கழக வாரியான புகார் மற்றும் குறைகள் குறித்த விவரங்கள் பற்றிய அறிக்கைகள் வழியாக போக்குவரத்துக் கழகங்களின் மேலாளர்கள், பயணிகளின் புகார்கள்/குறைகள் மீது கவனம் செலுத்தி, பொதுமக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பேருந்து சேவையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இதனால் பேருந்து இயக்கத்தில் பயணிகளின் திருப்தியை மேலும் அதிகரிக்க முடியும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications