சாரி.. தவிர்க்க முடியாத காரணத்தால் என்னால் வர முடியல.. வீடியோவில் மன்னிப்பு கேட்ட முகேஷ் அம்பானி!
சென்னை: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் என்னால் பங்கேற்க முடியவில்லை, அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை இன்று காலை 10 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்க்கும் விதமாக பல்வேறு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்றுள்ளனர். பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகிறது.

இந்த மாநாட்டில் 50 நாடுகளைச் சேர்ந்த 450க்கும் மேற்பட்ட சர்வதேச பிரதிநிதிகள், உலகப் புகழ்பெற்ற 170 பேச்சாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் தொழில் கருந்தரங்குகள், வணிக நிறுவனங்கள் தொடர்பான கண்காட்சிகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
உலகின் முன்னணி மின் வாகனத் தயாரிப்பு நிறுவனமான VinFast தமிழகத்தில் ரூ.16,000 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழ்நாட்டில் JSW எனர்ஜி நிறுவனம் ரூ.12,000 கோடி முதலீடு செய்யவும், டாடா நிறுவனம் ரூ.12,000 கோடி முதலீடு செய்யவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. டிவிஎஸ் நிறுவனம் கூடுதலாக ரூ.5000 கோடி முதலீடும், ஹூண்டாய் நிறுவனம் கூடுதலாக ரூ.6,000 கோடி முதலீடு செய்யவும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. Pagatron நிறுவனம் ரூ.1,000 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ நிறுவனம் தமிழ்நாட்டில் 35 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்காவிட்டாலும், காணொலி காட்சி மூலம் உரையாற்றினார் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி. அப்போது அவர் பேசுகையில், "தவிர்க்க முடியாத காரணங்களால் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் என்னால் பங்கேற்க முடியவில்லை. இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, நாட்டிலேயே தொழில் நிறுவனங்களுக்கு இணக்கமான மாநிலங்களில் முன்னிலையில் உள்ளது. தமிழ்நாடு எப்போதுமே தொழில், கலாச்சாரத்திற்கு சிறந்த மாநிலம். தமிழ்நாடு முழுவதும் ரூ.35 ஆயிரம் கோடி ரிலையன்ஸ் குழுமம் முதலீடு செய்துள்ளது. ஏஐ, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைகளில் தமிழ்நாடு முன்னிலை வகித்து வருகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன் துறைகளில் தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளைச் செய்யவுள்ளோம்" என்று பேசினார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications