ப்ளீஸ்.. இந்த பொறுப்பற்ற அமைச்சரை நீக்குங்க.. இவரால் தமிழ்நாட்டுக்கே அவமானம்.. டார்கெட் செய்த பாஜக!
சென்னை: சமூக ஊடகங்களில் உண்மை கண்டறியும் குழுவை அமைத்த தமிழக அரசின் அமைச்சரே பொய் பேசலாமா? தமிழக முதல்வரே, முதிர்ச்சியற்ற, ஒன்றும் தெரியாத அமைச்சரை நீக்கி விடுங்கள் என பாஜக கூறியுள்ளது.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், "இந்தியாவில், என்று நடு இரவில் பெண்கள் நகை அணிந்து தனியாக செல்கின்றனரோ அன்று தான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக உணரப்படும் என்று தேசப்பிதா காந்தியடிகள் கூறினார். பாஜக ஆளுகின்ற உத்தர பிரதேசத்தில் பெண்கள் மாலை 6 மணிக்கு மேல் பயிற்சி வகுப்பு மையங்களுக்கு செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு எதை நோக்கி செல்கிறது என்பது புரிகிறதா?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ள பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "சமூக ஊடகங்களில் உண்மை கண்டறியும் குழுவை அமைத்து அந்தப் பணிக்கு கட்சிகாரர்களை நியமித்து சம்பளம் வழங்குவதாக மார்தட்டிக் கொள்ளும் தமிழக அரசின் அமைச்சர் பொய் பேசலாமா? 7 மணிக்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும். பெண்களை பணிக்கு வருமாறு கட்டாயப்படுத்த கூடாது, வீட்டிலிருந்து பணியிடத்திற்கு நிறுவனமே அழைத்து செல்ல வேண்டும், இரவு 7 மணிக்கு மேல் நான்கு பெண்கள் இணைந்து பணியாற்ற வேண்டும்.
தரமான உணவு அளிக்கப்பட வேண்டும், பாலியல் தொல்லைகள் இல்லாத வகையில் நிறுவனத்தை நிர்வகிக்க வேண்டும் என்றும் இரவு நேர பணிக்கு வர மறுத்தால் பணியிலிருந்து நீக்க கூடாது, அப்படி நீக்கினால் நிறுவன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட பெண்கள் பாதுகாப்பு குறித்த உத்தரவை உத்தர பிரதேச அரசு விதித்திருக்கும் போது, எதையும் தெரிந்து கொள்ளாமல் ஏனோ, தானோ, வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று அமைச்சர் மனோ தங்கராஜ் பதிவிட்டிருப்பது தமிழகத்திற்கு அவமானம்.
சமூக ஊடகங்களில் உண்மை கண்டறியும் குழுவை அமைத்து அந்த பணிக்கு கட்சிகாரர்களை நியமித்து சம்பளம் வழங்குவதாக மார்தட்டி கொள்ளும் தமிழக அரசின் அமைச்சர் பொய் பேசலாமா?
— Narayanan Thirupathy (@narayanantbjp) November 29, 2023
7 மணிக்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும். பெண்களை பணிக்கு வருமாறு கட்டாயப்படுத்த கூடாது,… https://t.co/tQDPsxWifp
என்ன செய்வது நமக்கு வாய்த்த அமைச்சர் அவ்வளவு தான்!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, தயவு செய்து இந்த பொறுப்பற்ற, முதிர்ச்சியற்ற, ஒன்றும் தெரியாத அமைச்சரை நீக்கி விடுங்கள். இல்லையேல் உங்களுக்கு தான் அவமானம்!" எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, ஆவின் விவகாரத்தில் அமைச்சர் மனோ தங்கராஜை தமிழக பாஜக கடுமையாக விமர்சித்து வந்தது. அமைச்சர் மனோ தங்கராஜ், ஆவின் பாலில் கொழுப்பைத் திருடி கொள்ளை அடிப்பதாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அதற்கு மனோ தங்கராஜும் பதிலடி கொடுக்க, இந்த விவகாரம் வார்த்தை மோதலாக வளர்ந்தது. இந்நிலையில், மனோ தங்கராஜ் போட்ட மற்றொரு பதிவை சுட்டிக்காட்டி, அவரை காட்டமாக விமர்சித்துள்ளது பாஜக.












Click it and Unblock the Notifications