Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்த ஆவணங்கள் ரெடியா? வாடகை ஒப்பந்த பத்திரம்.. மகளிர் விடுதிகளுக்கு கெடு விதித்த சென்னை கலெக்டர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் அனைத்து மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஆகியவற்றை வருகிற நவம்பர் 15-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.

வேலை தேடியும், படிப்பிற்காகவும் லட்சக்கணக்கானோர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பயணம் செய்கிறார்கள்... அந்த வகையில் பெண்களும் பெற்றோர்களை விட்டு பணிக்காகவும் படிப்பிற்காகவும் தனியார் விடுதிகளில் தங்கி படித்து வருகிறார்கள்.

rental agreement

ஆனால், பெண்களுக்கான தனியார் விடுதியில் சரிவர பாதுகாப்பு இல்லாத சூழலும், அடிப்படை வசதிகளும் இல்லையென தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அத்துடன், அனுமதி இல்லாமல் பல இடங்களில் விடுதியானது நடைபெற்று வருகிறது. எனவே, இவைகளை இதனை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு அதிரடிகளை சென்னை மாவட்ட கலெக்டர் எடுத்து வருகிறார்.

ஐடி நிறுவனங்கள்: அதுமட்டுமல்ல, சென்னையில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால், அவர்கள் தங்கும் வகையில், ஏராளமான விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பல அப்பார்ட்மென்ட் வீடுகளை வாடகைக்கு எடுத்து, ஆண், பெண் ஐடி ஊழியர்களுக்கு பலர் வாடகைக்குவிட்டும் பணம் சம்பாதித்து வருகின்றனர். இதுபோன்ற விடுதிகளில்தான் கடந்த மாதம் காவல்துறை சோதனை நடத்தியதில் ஏராளமான போதை பொருட்கள் சிக்கி பரபரப்பை தந்துவிட்டன.

இப்படிப்பட்ட சூழலில், சென்னையில் அனைத்து மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஆகியவற்றை வருகிற நவம்பர் 15-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.. அத்துடன், முறையாக பதிவு செய்யாத விடுதி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து ரூபாய் 50,000 அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அதிரடி: இதுதொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மகளிர் விடுதிகள் மற்றும் பெண் ஊழியர்கள் தங்கும் இல்லங்கள் ஆகியவை தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்கு முறைச்சட்டம் 2014 மற்றும் விதிகள் 2015 ன் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு பதிவுசெய்யப்படாத விடுதிகள் http://tnswp.com என்ற இணையதள பக்கம் மூலமாக பதிவு செய்யவேண்டும்.

இணையதளத்தில் பதிவு செய்ய அறக்கட்டளை பதிவு பத்திரம், சொந்த கட்டடம் மற்றும் வாடகை ஒப்பந்த பத்திரம், கட்டிட வரைபடம், கட்டிட உறுதிச்சான்று, தீயணைப்புத்துதுறையின் தடையில்லா சான்று, போலீஸ் சரிபார்ப்பு சான்று, உணவு பாதுகாப்புத்துறையின் சான்றிதழ், தணிக்கை அறிக்கை மற்றும் சுகாதாரதுறைச் சான்று ஆகிய சான்றுகளுடடன் http://tnswp.com என்ற இணையதளத்தில் நவம்பர் 15-ந்தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

புகார் எண்கள்: இதுகுறித்த சந்தேகங்களுக்கு 91500 56800 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். முறையாக பதிவு செய்யப்படாத தனியர் விடுதி மற்றும் அதன் இணை நிர்வாகிகள் மீது சட்டப்படி போலீசில் வழக்குபதிவு செய்து அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+