வாடகை வீட்டுதாரர்களுக்கு அறிவிப்பு.. நோட் பண்ணுங்க அட்ரஸை.. தமிழக அரசு மாஸ்..அப்பாடா இனிமேல் நிம்மதி
சென்னை: வாடகை வீட்டில் குடியிருப்பவர்களின் வசதிக்காகவும், பாதுகாப்புக்காகவும் தமிழக அரசு எத்தனையோ அதிரடிகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், தற்போதும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
குடிநீர் வரி செலுத்துவது தொடர்பாக, புதுப்புது அதிரடிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், கியூ.ஆர்.குறியீட்டை பயன்படுத்துவது தொடர்பான அறிவிப்பையும் சமீபத்தில் அரசு வெளியிட்டிருந்தது..

சொத்துவரி, குடிநீர் வரி செலுத்துதல், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் பெறுதல், பொதுவான குறைகளை பதிவு செய்தல், திட்டங்களுக்கு ஒப்புதல் பெறுதல், வர்த்தக உரிமம் பெறுதல் போன்றவை தொடர்பாகவும் கியூ.ஆர். குறியீடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பஸ் நிலையங்கள்: இந்நிலையில், வரி செலுத்தாமல் நிறைய பேர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருவதாக தெரிகிறது.. அதனால், வரி செலுத்தாத வீட்டு உரிமையாளர்களுக்கு ஜப்தி நோட்டீஸ் வழங்கப்பட உள்ளதாம்... அதுமட்டுமல்ல, உரிமையாளர் இல்லாதபட்சத்தில், வாடகைதாரர்களிடம் வரி வசூலித்து, அதை வாடகையில் கழித்துக் கொள்ளும் வகையில் நோட்டீஸ் வழங்கவும் குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளதாக கடந்த வாரம்கூட தகவல் ஒன்று வெளியாகியிருந்தது.
வரிவசூல்: பாக்கி வரியை வசூலிப்பதற்காகத்தான், வருவாய்த் துறை அதிகாரிகள் ஓனர்களுக்கு, ஜப்தி நோட்டீஸ் வழங்க, வாரியம் முடிவு செய்துள்ளதாகவும், உரிமையாளர் இல்லாதபட்சத்தில், வாடகைதாரர்களிடம் வரி வசூலித்து, அதை வாடகையில் கழித்துக் கொள்ளும் வகையில் நோட்டீஸ் வழங்கவும் குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இப்படிப்பட்ட சூழலில், இன்னொரு முக்கிய உத்தரவு வெளியாகி உள்ளது.. தமிழகத்தை பொறுத்தவரை, நிலம், வீடு வாடகை, குத்தகை விடுவதில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க ஒழுங்குமுறை சட்டம், கடந்த 2019ம் ஆண்டு அமலுக்கு வந்தது.
32 மாவட்டங்கள்: எனவே, வாடகை, குத்தகை ஒப்பந்த பதிவுக்காகவும், புகார்களை விசாரிக்கவும், மாவட்ட அளவில், ஆணையங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, 35 மாவட்டங்களில் வாடகை வீடு விவகாரங்களுக்கான ஆணையங்கள் ஏற்படுத்தப்பட்டன.
மேலும், வாடகை ஆணையத்திற்கு வரும் புகார்களை விசாரிக்கும் அலுவலர்களாக, வருவாய் கோட்டாட்சியர்கள், கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டனர்.. இவர்கள் வழக்கமான துறை சார்ந்த பணிகளை மேற்கொள்வதுடன், வாடகை தொடர்பான புகார்களையும் விசாரிப்பார்கள் என்றும், இது தொடர்பான கூடுதல் விபரங்களை பெற வேண்டுமானால், 044 - 2567 3341 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

சந்தேகங்கள்: எனினும், 32 ஆணையங்களிலும் எப்படி தொடர்பு கொள்வது? யாரிடம் புகார்களை தருவது? என்பதில் பொது மக்களுக்கு குழப்பமும், சந்தேகம் நிலவியபடியே உள்ளது. இதற்கும் ஒரு தீர்வை தற்போது தந்துள்ளனர் அதிகாரிகள்.
மாவட்ட வாரியாக வாடகை வீடுகளுக்கான ஆணையம், அதன் நிர்வாக எல்லை, தொடர்பு எண்கள் ஆகிய விபரங்களை வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை, www.tenancy.tn.gov.in/ என்ற இணைதளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. வாடகைதாரர்கள், வாடகை ஒப்பந்த பதிவு, புகார் அளிப்பது தொடர்பான விபரங்களை, இதன் வாயிலாகவே தெரிந்து கொள்ளலாம்.
ஆணையம் தீர்வு: வாடகை ஒப்பந்த பதிவு உள்ளிட்ட பணிகளுக்காகவே www.tenancy.tn.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது, பொதுமக்களுக்கு நிம்மதியை தந்து வருகிறது. இனிமேல், வாடகை ஒப்பந்தம் தொடர்பாக ஏற்படும் தகராறுகள், பிரச்சனைகளுக்கு இந்த ஆணயைம் தீர்வுகாணும் என்றும் நம்பப்படுகிறது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications