கேட்க கேட்க குலை நடுங்குதே.. அரசையே மண்டியிட வைத்த ஆர்பிசி.. கட்டாயப்படுத்தி விழா! பின்னணியில் யார்?
சென்னை: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக குலை நடுங்க வைக்கும் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த விவகாரம் பெங்களூரு காவல் ஆணையர் பி. தயானந்தா மற்றும் மூத்த காவல் அதிகாரிகள் பலரை கர்நாடக அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் (RCB) வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட இந்த விபத்து தொடர்பாக, அந்த அணியின் சந்தைப்படுத்தல் மற்றும் வருவாய் பிரிவின் தலைவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.

சின்னசாமி மைதான நெரிசல்: இலவச டிக்கெட் வதந்தி காரணமா?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றி கொண்டாட்டத்தை அவசர அவசரமாக நடத்த வேண்டாம் என்றும், ஒரு வாரம் கழித்து நடத்தலாம் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆனால், ஆர்சிபி நிர்வாகம் அதை கேட்கவில்லை. திட்டமிட்டபடி எப்படியாவது அந்த நிகழ்ச்சியை நடத்தியே தீர வேண்டும் என்று "அரசியல் அழுத்தம்" கொடுத்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசுக்கும், காவல்துறைக்கும் சில புள்ளிகள் வழியாக ஆர்சிபி அணி அழுத்தம் கொடுத்ததாம். பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு காவல்துறை அதிகாரி இதுகுறித்து கூறுகையில், "ஆர்சிபி அணியின் முக்கிய சில தலைகள்தான் இந்த குளறுபடிக்கு முக்கிய காரணம். உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா அவர்கள்கூட எங்களுடைய கருத்தை ஏற்றுக்கொண்டார். ஆனால், அவரின் கருத்தை கூட ஆர்சிபி ஏற்கவில்லை. போலீஸ் திட்டமிடுவதற்கு போதிய அவகாசம் இல்லை" என்றார்.
நேரம் இல்லை
மேலும், "காவல்துறையினர் இரவு வரை விழித்திருந்து அந்த பிரம்மாண்ட கொண்டாட்டத்திற்கான வேலைகளைச் செய்தனர். ஒவ்வொரு காவலரும் இரவு 4 மணி வரை வேலையில் இருந்தனர். மதியத்திற்குள் எப்படி எல்லாவற்றையும் தயார் செய்ய முடியும்? இதுபோன்ற பெரிய நிகழ்ச்சிக்கு, நாங்கள் மாதிரி மதிப்பீடு செய்வோம். ஆனால், இந்த முறை எங்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் அவகாசம் இருந்திருந்தால், நாங்கள் இதைத் முறையாக செய்திருக்க முடியும்" என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.
சுமார் 30,000 முதல் 40,000 பேர் வரை அமரக்கூடிய சின்னசாமி மைதானத்தில், ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்திற்காக 2 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டனர். இது எதிர்பாராத விதமாக 11 பேர் உயிரிழக்கக் காரணமானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மைதானத்தின் கொள்ளளவுக்கு அதிகமான ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்து, சுமார் 3,000 காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியிருந்தோம். இது வழக்கமாக இதுபோன்ற போட்டிகளுக்குச் செய்யப்படும் ஏற்பாடு என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஒரு நபர் நீதி விசாரணை ஆணையம் அமைப்பு
இதற்கிடையில், சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் ஆகியோரின் ராஜினாமாவை வலியுறுத்தி மாநில அரசுக்கு எதிராக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு பதிலடியாக, "அவர்கள் அற்ப அரசியல் செய்வதாக" காங்கிரஸ் கட்சியினர் பதிலடி கொடுத்துள்ளனர்.
இந்த துயர சம்பவம் குறித்து விசாரிக்க, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி மைக்கேல் டி'குன்ஹா தலைமையில் ஒரு நபர் நீதி விசாரணை ஆணையத்தை மாநில அரசு அமைத்துள்ளது. இதுகுறித்து சித்தராமையா கூறுகையில், "30 நாட்களில் அறிக்கையை சமர்ப்பிக்க ஆணையத்திடம் கூறியுள்ளோம்" என்றார்.
மேலும், கபன் பார்க் காவல் நிலையத்தின் ஆய்வாளர் ஏ.கே.கிரிஷ், உதவி ஆணையர் சி.பாலகிருஷ்ணா, மத்திய பிரிவு துணை ஆணையர் சேகர் எச். தெக்கண்ணவர், மைதானப் பொறுப்பாளர் கூடுதல் ஆணையர் விகாஷ் குமார் விகாஷ் மற்றும் பெங்களூரு நகர காவல் ஆணையர் தயானந்தா ஆகியோரையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் சீமந்த் குமார் சிங், பெங்களூரு பெருநகர பணிக்குழு, கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பெங்களூரு நகர காவல் ஆணையராகவும் அவர் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கபன் பார்க் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 115 (தானாக முன்வந்து காயம் ஏற்படுத்துதல்), பிரிவு 118 (ஆபத்தான ஆயுதங்கள் அல்லது வழிமுறைகளைப் பயன்படுத்தி தானாக முன்வந்து காயம் அல்லது பலத்த காயம் ஏற்படுத்துதல்), பிரிவு 121 (பொது ஊழியரை அவரது கடமையில் இருந்து தடுக்க தானாக முன்வந்து காயம் அல்லது பலத்த காயம் ஏற்படுத்துதல்) மற்றும் பிரிவு 190 (சட்டவிரோத கூட்டம்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மொத்தத்தில், ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட இந்த துயர சம்பவம், திட்டமிடல் குறைபாடுகள் மற்றும் நிர்வாக குளறுபடிகளால் நிகழ்ந்தது மட்டுமன்றி சிலரின் அழுத்தம் காரணமாகவும் ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக அரசு உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications