குடியரசு தின விழா.. ஆளுநர் தேநீர் விருந்து.. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் புறக்கணிப்பு.. அப்போ திமுக?

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடியரசு தின விழாவையொட்டி தமிழக ஆளுநர் அளிக்கவுள்ள தேநீர் விருந்தை புறக்கணிக்க போவதாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன. திமுக கூட்டணி கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குடியரசு தினத்தன்று மாலை 4.30 மணியளவில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் வைத்து தேநீர் விருந்து நடைபெற உள்ளது. இந்த தேநீர் விருந்துக்கு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஆளுநரின் தேநீர் விருந்தை காங்கிரஸ் கட்சியும் புறக்கணிப்பதாக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப் பெருந்தகை அவர்கள் அறிவித்துள்ளார்.

Republic Day Celebration Congress and Communist parties Boycotting Governors Tea Party

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக கம்யூனிஸ்ட் கட்சியினரும் அறிவித்துள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் ஆளுநர் மாளிகை அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்பது குறித்து திமுக ஆலோசித்து முடிவெடுக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காத காரணத்தால் ஏற்கனவே தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் கடந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14 ஆம் தேதி தேநீர் விருந்தை புறக்கணித்தன. இந்தநிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசுக்கு எதிராக தொடர்ந்து கருத்து கூறுவதும், தமிழ்நாட்டிற்கு தமிழகம் என்ற பெயர் தான் சரியாக இருக்கும் என தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து கடந்த ஆண்டு சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்ட ஆளுநர் ரவி தமிழ்நாடு, அமைதி பூங்கா, அண்ணா,பெரியார், அம்பேத்கர் போன்ற வார்த்தைகளை பேச தவிர்த்தார். இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி பதிலடி கொடுத்தார்.

இதனையடுத்து ஆன்லைன் மசோதா மீது தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு ஒப்படைத்த நிலையில் அதற்க்கு எந்தவித அனுமதியும் கொடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்தநிலையில் குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் மாளிகை சார்பாக தேநீர் விருந்துக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த தேநீர் விருந்தை கடந்த ஆண்டு திமுக கூட்டணி கட்சியினர் புறக்கணித்தனர்.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாளின் போது இந்திய சுதந்திர வரலாற்றை மாற்றி எழுதவேண்டுமென பேசினார் ஆளுநர் ஆர்.என். ரவி. காந்தியினால் மட்டுமே சுதந்திரம் கிடைக்கவில்லை என்றும் நேதாஜியின் தியாகம் பற்றியும் தேசத்தந்தை பற்றியும் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஆளுநர் அளிக்கும் குடியரசு தின விழா தேநீர் விருந்தை புறக்கணிக்கப்போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து பேசிய செல்வ பெருந்தகை, காந்தியின் தியாகத்தை பற்றி மாற்றி பேசுகிறார் ஆளுநர் என்று குற்றம் சாட்டியுள்ளார். காந்தியை தேசத்தந்தை என்று நேதாஜியே கூறியுள்ளார். தமிழகம், தமிழ்நாடு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் என்று நினைத்திருந்த வேளையில் மீண்டும் சர்ச்சை பேச்சுகள் பேசி தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளை செயல்படவிடாமல் தடுக்கிறார்.

ஆர்எஸ்எஸ் கொள்கைளை திணிப்பதில் முழு மூச்சாக செயல்படுகிறார் ஆளுநர் ரவி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்தவும், அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட நினைக்கும் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநரின் செயலுக்கு வன்மையாக கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். ஆளுநரின் தேநீர் விருந்தை காங்கிரஸ் கட்சி புறக்கணிக்கப்போவதாகவும் அறிவித்துள்ளார் செல்வபெருந்தகை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+