குடியரசு தின விடுமுறை.. தமிழகத்தில் ‘டாஸ்மாக்’ கடைகளில் ஒரே நாளில் ரூ.220 கோடிக்கு மது விற்பனை
சென்னை:தமிழகத்தில் 'டாஸ்மாக்' கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகும்போதெல்லாம் மது பிரியர்கள் முதல் நாளே உஷாராகி கூடுதலாக மதுபாட்டில்களை வாங்கி இருப்பு வைத்துக் கொள்வார்கள.அந்த வகையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள 'டாஸ்மாக்' கடைகளுக்கு நேற்று விடுமுறை என அறிவிக்கப்பட்டதால் நேற்று முன்தினம் 'டாஸ்மாக்' கடைகளில் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதியது. மதுபிரியர்களின் படையெடுப்பால் அன்று ஒரே நாளில் ரூ.220 கோடியே 75 லட்சத்துக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாளை மதுக்கடைகள் விடுமுறை என்றால், டாஸ்மாக் கடைகளிலும், மனமகிழ் மன்றங்களிலும், தனியார் மதுபான பார்களிலும் கூட்டம் அதிகமாக இருக்கும். ஏனெனில் முதல்நாளே மதுக்கடைகளில் தேவையான மதுபானங்களை வாங்கி வைப்பார்கள். அந்த வகையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள 'டாஸ்மாக் உள்பட அனைத்து வகையான மதுபானக்கடைகளும் திறக்கப்படவில்லை.. இதனால் மதுக்கடைகளில் கடந்த ஜனவரி 25ம் தேதி கூட்டம் அதிகமாக இருந்தது

மதுக்கடைகளில் மதுபான விற்பனை படுஜோராக இருந்தது. இதில் மனமகிழ் மன்றங்கள் மூலம் ரூ.5 கோடியே 43 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகி இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒரே நாளில் ரூ.220 கோடியே 75 லட்சத்துக்கு விற்பனை நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னதாக பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் கடந்த ஜனவரி 14-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடைபெற்றது. 5 நாட்கள் தொடர்ந்து விடுமுறை விடப்பட்டதால் பொங்கலை உற்சாகமாக மக்கள் கொண்டாடினர். அதே நேரத்தில் டாஸ்மாக் கடைகளிலும் மது விற்பனை அமோகமாக நடந்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த வருடம் மது விற்பனை அதிகமாக நடைபெற்றதாக டாஸ்மாக் வட்டாரங்கள் கூறின. இந்த ஆண்டு சுமார் ரூ.850 கோடிக்கு மது விற்பனை நடந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு ரூ.140 கோடிக்கு மது விற்பனை கூடுதலாக நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகின. ஜனவரி மாதம் 15, ஜனவரி 26 ஆகிய நாட்களில் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தது. அடுத்து பிப்ரவரி 1ம் தேதி தைப்பூசத்தன்று மதுக்கடைகள் தமிழ்நாடு முழுவதும் மூடப்பட உள்ளன.
-
கஜானாவுக்கு வரும் 1200 கோடி.. பார்ட்டி ஃபண்டில் கைவைத்த விஜய்! இனி டாஸ்மாக் கல்லா கட்டுமே! சூப்பர்! -
பாட்டிலுக்கு ரூ.10.. டாஸ்மாக் பிரச்சனைக்கு பத்து நாட்களில் நிரந்தர தீர்வு.. அமைச்சர் விக்னேஷ் உறுதி -
டாஸ்மாக் கடையை மூட மறுக்கும் விஜய் அரசு.. களத்தில் குதித்த தூத்துக்குடி மக்கள்! ரொம்ப தப்புங்க! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications