தீபாவளி பண்டிகை.. ரயிலில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடக்கம்.. இது ரொம்ப முக்கியம்.. கவனம்!
சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி ரயிலில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்கப்பட உள்ளது. இதற்காக மக்கள் பலரும் காத்துகொண்டு நிலையில்தான் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மக்கள் அதிக அளவில் பயணம் மேற்கொள்வார்கள். சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வேலை பார்க்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பேருந்துகளின் தேவை அதிகரிக்கும். அதிக நெரிசலில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

சமயங்களில் போதிய பேருந்துகள் இல்லாத காரணத்தால் மக்கள் கஷ்டப்படும் அவலமும் ஏற்படும். இந்த நிலையில்தான் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் தமிழ்நாட்டில் பண்டிகை நாட்களில் இயக்கப்பட்டு வருகின்றன. தீபாவளி சிறப்பு பேருந்துகள் தொடர்பாக விரைவில் அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.
ஆனால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டாலும் மக்கள் பலருக்கு டிக்கெட் கிடைப்பது சிரமம். பலரும் முன் கூட்டியே டிக்கெட் புக் செய்வது வழக்கம். இதனால் பலரும் ரயிலில் செல்வதை விரும்புவார்கள். ரயில் பயணம் என்பது பலருக்கும் பிடித்தமானது. நீண்ட தூரம் பயணிக்க பேருந்தை விட ரயில் சிறப்பானது. பாதுகாப்பானது. அதே சமயம் பட்ஜெட் ரீதியாகவும் பேருந்து, விமானத்தை விட ரயில் குறைவான கட்டணம் கொண்டது. பேருந்துகளில் இல்லாத பல வசதிகள் ரயில்களில் உள்ளன. அதோடு ரயில்களில் சிறப்பு பேருந்துகளை விட கட்டணங்கள் குறைவாக இருக்கும்.
உதாரணமாக கழிப்பறைகள் தொடங்கி நன்றாக சவுகரியமாக அமர்ந்து கொள்வது வரை பல வசதிகள் இதில் உள்ளன. இந்த ரயிலில் பொதுவாக பல்வேறு இருக்கைகள் முன் பதிவில் கிடைக்கும். அதாவது அப்பர், மிடில், லோயர், சைடு அப்பர், சைடு லோயர். இதில் ஒவ்வொருவர் .. ஒவ்வொரு மாதிரியான இருக்கைகளை விரும்புவார்கள்.
ரயில் முன்பதிவு: தீபாவளி பண்டிகையை ஒட்டி ரயிலில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்கப்பட உள்ளது. இதற்காக மக்கள் பலரும் காத்துகொண்டு நிலையில்தான் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ந்தேதி இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ளது.
இதற்கான முன் பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. இரவு நேரத்தில் முன் பதிவு தொடங்கினால் டிராவல் ஏஜென்சிகள் எல்லா டிக்கெட்டையும் பிளாக் செய்துவிடும் என்பதால் காலையில் முன் பதிவு தொடங்குகின்றன.
டிக்கெட் கவுண்ட்டர்கள் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் இரண்டின் மூலமும் டிக்கெட்டுகளை புக் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் நாளை புக் செய்பவர்கள் நவம்பர் 9ம் தேதிக்கு மட்டுமே முன் பதிவு செய்ய முடியும். அதே சமயம் நாளை மறுநாள் செய்தால் 10ம் தேதி பயணம் செய்ய முடியும்.
வரும் 14ம் தேதி முன் பதிவு செய்ய சென்றால் நவம்பர் 11ம் தேதிக்கான டிக்கெட்டுகளை மட்டுமே முன் பதிவு செய்ய முடியும். பலரும் தீபாவளிக்கு முதல் நாள் அதாவது நவம்பர் 11ம் தேதி பயணம் செய்ய விரும்புவார்கள் என்பதால் வரும் 14ம் தேதி முன் பதிவு செய்ய பலரும் முண்டியடிக்க வாய்ப்புகள் உள்ளன.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications