ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட்.. என்னாச்சு
சென்னை: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சக்திகாந்த தாஸ் உடல் நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள். சக்திகாந்த தாஸ்க்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் உடல் நலம் குறித்து பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை எனவும், சில மணி நேரங்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

ரிசர்வ் வங்கி கவர்னரான சக்திகாந்த தாஸ் இன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. சக்திகாந்த தாஸ் உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள்.
ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருக்கும் சக்திகாந்த தாஸ், ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். தமிழக கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சக்திகாந்த தாஸ், தமிழக அரசில் பல்வேறு துறைகளில் பணியாற்றி இருக்கிறார். மத்திய நிதித்துறை செயலாளராக பணியாற்றிய சக்திகாந்த தாஸ், கடந்த 2018 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்பட்டார்.
இவரது பதவிக்காலம் 2021 ஆம் ஆண்டுடன் முடிவடைய இருந்தநிலையில், மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது. தற்போது 67 வயது ஆகும் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநராக திறம்பட செயலாற்றி வரும் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் மீண்டும் நீட்டிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் சக்திகாந்த தாஸ்க்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் உடல் நலம் குறித்து பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை எனவும், சில மணி நேரங்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இது தொடர்பாக ரிசர்வ் வங்கி செய்தி தொடப்ராளர் கூறியிருப்பதாவது:-
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ்க்கு அசிடிட்டி (acidity) பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் நலமாக உள்ளார். அடுத்த சில மணி நேரங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications