Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு அடித்த ஜாக்பாட்.. 74 வயதில் ஒரு லட்சம் சம்பளத்தில் அரசு வேலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் 9 லட்சத்து 42 ஆயிரத்து 941 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சுமார் 7 லட்சத்து 33 ஆயிரம் ஊழியர்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது 58-ல் இருந்து 60 ஆக உள்ளது. காலி பணியிடங்களை பொறுத்தவரை 3 லட்சம் என்கிற அளவில் உள்ளது. ஆண்டுக்கு ஒட்டுமொத்தமாக 50 ஆயிரம் பேர் அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெறுதவாக கூறப்படுகிறது. இளைஞர்களுக்கு போதிய வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்படாத சூழலில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 74 வயது நபரை குறைந்தது ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்து வேலைக்கு அமர்த்திருப்பது தெரியவந்துள்ளது.

தமிழக அரசின் துறைகளில் இன்றைய நிலையில் 9 லட்சத்து 42 ஆயிரத்து 941 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சுமார் 7 லட்சத்து 33 ஆயிரம் ஊழியர்கள் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது 58-ல் இருந்து 60 ஆக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உயர்த்தப்பட்டது. அதன்படி தற்போது மாநில அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆக இருக்கிறது. ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்பட்ட காரணத்தால் ஏராளமான வேலைகளுக்கு புதிதாக இளைஞர்கள் சேரமுடியாத நிலை இருக்கிறது. அரசு ஓய்வூதியம், பணி பலன்களுக்காக இப்படி 60 வயதாக அன்றைக்கு தள்ளிப்போட்டதாக கூறப்படுகிறது. அது இன்றைக்கும் அப்படியே தொடர்கிறது.

Retired government employee in TN hits jackpot Govt job with a salary of one lakh at the age of 74

ஒரே நாளில் 8144 பேர் ஓய்வு

என்னதான் 60 வயது என்று அரசு ஓய்வு பெறுவோரின் வயதை தள்ளிப்போட்டாலும், தற்போது ஒவ்வொரு மாதமும் ஊழியர்கள் தாங்கள் பணியில் சேர்ந்த மாதத்தின் அடிப்படையில் ஓய்வு பெறுவோர் எண்ணிக்கை சராசரியாக 4000 என்கிற அளவில் உள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக மே மாதங்களில் அதிக அளவில் பணியாளர்கள் ஓய்வு பெறுவார்கள். அந்த வகையில், மே மாதம் 31-ந்தேதி இன்றுடன், ஒரே நாளில் சுமார் 8 ஆயிரத்து 144 பேர் ஓய்வு பெற்றுள்ளனர்.

அரசு ஊழியர்கள் ஓய்வு

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், மாநில அரசின் குரூப்-ஏ பணியிடங்களில் 424 பேரும், பி பணியிடங்களில் 4 ஆயிரத்து 399 பேரும், சி பணியிடங்களில் 2 ஆயிரத்து 185 பேரும், குரூப்-டி பணியிடங்களில் 1,136 பேரும் மே 31ம் தேதியான இன்றுடன் ஓய்வு பெற்றிருக்கிறார்கள். சென்னை தலைமை செயலகத்தில் மட்டும் 30 பேர் வரை இன்று ஓய்வு பெற்றுள்ளார்கள். கல்லூரி பேராசிரியர்களை பொறுத்தவரை ஏ பிரிவிலும், ஆசிரியர்களை பொறுத்தவரை பி பிரிவு ஊழியர்களாக இருப்பார்கள். இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் அதிகம் பேர் ஓய்வு பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை மொத்த அரசு ஊழியர்களில் 0.86 சதவீதம் என்று கூறப்படுகிறது.

அன்புமணி ராமதாஸ் புகார்

என்னதான் ஓய்வு பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், அதற்கு தகுந்தாற் போல் காலி பணியிடங்களை நிரப்பினால் பிரச்சனை இல்லை.. ஆனால் போதிய அளவில் நிரப்பப்படவில்லை.. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தமிழக அரசுத் துறைகளில் மூன்றரை லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அவற்றை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், மேலும் 2 லட்சம் பணியிடங்களை புதிதாக உருவாக்கி அவற்றையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்பதுடன், கடந்த நான்காண்டுகளுக்கும் மேலாக கூடுதலாக ஏற்பட்ட சுமார் மூன்று லட்சம் காலியிடங்களையும் திமுக அரசு நிரப்பவில்லை என்பது தான் உண்மை.

காலி பணியிடங்கள்

தமிழகத்தில் அரசுத்துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 6.50 லட்சமாக அதிகரித்திருப்பதாக அரசு ஊழியர் அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன. இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதில் திமுக அரசு படுதோல்வி அடைந்து விட்டது என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் குற்றச்சாட்டை இந்த புள்ளிவிவரங்கள் உறுதி செய்கின்றன" என்று கூறியுள்ளார்.

74 வயது நபருக்கு ஒரு லட்சம்

பல லட்சம் இளைஞர்கள் வேலை இல்லாமல் இருப்பதாக கூறப்படும் விமர்சனங்களுக்கு நடுவில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 74 வயது ராஜேந்திரனை நூலகப் பொறுப்பாளராக நியமித்துள்ளது. அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய நூலகத்தில் அரசு கொள்கைகள், மாசு, பேரிடர் மேலாண்மை என பல்வேறு தலைப்புகளில் 11 ஆயிரம் நூல்கள் இருக்கின்றன. இங்குதான் 74 வயது நபர் ஒரு லட்சம் சம்பத்திற்கு நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

65 வயதில் அரசு வேலை

இவர் மட்டுமல்லாமல் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற 64 வயதாகும் தமிழரசன் , உள்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற 65 வயதாகும் சம்பத், நிதித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற 65 வயதாகும் நாராயணன் ஆகியோர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தாங்கள் கடைசியாக வாங்கிய சம்பளத்தை இந்த புதிய பணிகளில் சம்பளமாக பெற்று வருகின்றனர்.

மாசு கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம்

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் எம் ஜெயந்தி இது தொடர்பாக ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "இளைஞர்கள் இந்த வேலைக்கு உரிய தகுதிகளை கொண்டிருக்கவில்லை என்றும் விருப்பமும் இல்லாமல் இருக்கிறார்கள் என்றும் கூறினார். மேலும் நிதி என்பது பெரிய துறை என்றும் அதில் மூத்த ஊழியர்களை தான் நியமிக்க முடியும். அதே போன்று ஒரு நூலகத்தை பராமரிப்பதும் பெரிய வேலை, 74 வயது அனுபவமுள்ள நபரே சரியானவர். அவர்களும் அந்த வேலைகளை திறம்பட செய்து வருகிறார்கள். தலைமை செயலகத்தின் பரிந்துரையின் பெயரில் நியமிக்கப்பட்டுள்ளார்கள்" இவ்வாறு கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+