சசிகலாவின் அண்ணன் மகன்.. .சுதாகரனின் சொத்துகளை முடக்கிய வருமான வரித்துறை.. என்ன காரணம்?
சென்னை: சசிகலாவின் அண்ணன் மகனான .சுதாகரனின் சொத்துகளை வருமானத்துறை அதிகாரிகள் இன்று முடக்கியுள்ளனர். கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்குகள் தமிழ்நாட்டில் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கோடநாடு எஸ்டேட் வழக்கு மீண்டும் உயிர்பெற்றுள்ளது. இந்த எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் சயானிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது வழக்கு விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது.
ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக பணிபுரிந்த கனகராஜின் அண்ணன் தனபால், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் என பல்வேறு தரப்பினரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 40-க்கும் மேற்பட்டோரிடம் விசராணை நடந்ததாக கூறப்படும் நிலையில், இது தொடர்பான வழக்குகள் உதகை மாவட்ட நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

கோடநாடு எஸ்டேட் பங்குதாரரான சசிகலாவும் போலீசார் விசாரணை வளையத்தில் வருவார் என்று தகவல்கள் கூறப்படும் நிலையில் கடந்த வாரம் சென்னையை அடுத்த பையனுரில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான பையனூர் பங்களாவை வருமானத்துறை அதிகாரிகள் அதிரடியாக முடக்கினார்கள். பினாமி சொத்து சட்டத்தின் கீழ் சசிகலாவின் சொகுசு பங்களா முடக்கப்பட்டுள்ளதாக வருமான அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டிவிட்டு சென்றனர்.
இந்த நிலையில் சசிகலாவின் அண்ணன் மகனும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாகவும் இருந்த வி.என்.சுதாகரனின் சொத்துகளை வருமானத்துறை அதிகாரிகள் இன்று முடக்கி இருக்கின்றனர். சிறுதாவூர் பங்களா வளாகத்தில் உள்ள சுதாகரனுக்குச் சொந்தமான 21 ஏக்கர் நிலம் பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications