தமிழகத்தில் கிடுகிடுவென உயர்ந்த அரிசி விலை! சென்னையில் கிலோ எவ்வளவு?
சென்னை: தமிழகத்தில் அரிசியின் விலை கிலோவுக்கு ரூ 17 வரை உயர்ந்துள்ளதால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் அவதிப்படுகிறார்கள்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே மளிகை பொருட்கள், காய்கறிகளின் விலை அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே பால், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது பூண்டின் விலை அதிகரித்துள்ளது. இப்படி விலைவாசி உயர்வால் அன்றாட ஊதியத்திற்கு பணியாற்றும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தென்னிந்தியாவின் முக்கிய உணவான அரிசியின் விலை கடந்த 6 மாதங்களாகவே அதிகரித்து வருகிறது.
ஜிஎஸ்டியிலுமா: அத்தியாவசிய உணவு பொருட்கள் ஜிஎஸ்டியில் கொண்டு வரப்பட்ட நிலையிலும் தமிழகத்தில் அரிசியின் விலை கிலோவுக்கு ரூ 5 முதல் 13 ரூபாய் வரை உயர்ந்து கொண்டே வந்தது. இதற்கு காரணம் விளைச்சல் குறைவு என்கிறார்கள். தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி பருவங்களில் 15 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுவது வழக்கம்.
குறுவை சாகுபடி: ஆனால் இந்த ஆண்டு குறுவை சாகுபடியின் போது போதிய மழை இல்லை. தண்ணீர் இல்லாததால் அக்டோபர் மாதமே மேட்டூர் அணையும் மூடப்பட்டுவிட்டது. இதனால் இருந்த தண்ணீரை வைத்து குறுவை சாகுபடி முடிக்கப்பட்டது. சம்பா சாகுபடியை எடுத்துக் கொண்டால், பொதுவாக மழையை நம்பியே இந்த சாகுபடி நடக்கும் நிலையில் போதிய மழை இல்லை. மேலும் நெற்களஞ்சியங்களான திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் ஓரிரு நாட்கள் பெய்த மழையால் நிலத்தில் தேங்கியிருந்த தண்ணீர் பயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.
அறுவடைக்கு தயார்: இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நீரில் மூழ்கி வீணடைந்தது. தமிழகத்தில் போதிய விளைச்சல் இல்லாததால் கர்நாடகா, ஆந்திரா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு அரிசி சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த 6 மாதங்களாகவே அரிசி விலை அதிகரித்து வருகிறது.
பாஸ்மதி அரிசி: சென்னையில் ஏற்கெனவே மொத்த விலையில் கிலோ ரூ 60க்கு விற்பனையாகும் புழுங்கல் அரிசி தற்போது ரூ 68 ஆக உயர்ந்துள்ளது. ரூ 60 க்கு விற்கப்பட்ட பாயில்டு ரைஸ் ரூ 70 ஆக உயர்ந்துள்ளது. பாஸ்மதி அரிசியின் விலையும் கிலோ ரூ 120 ஆக உயர்ந்துள்ளது. இட்லி , தோசைக்கு பயன்படுத்தும் குண்டு அரிசியின் விலையும் ரூ 37 லிருந்து ரூ 40 ஆக அதிகரித்துள்ளது.
உணவு பொருட்கள் விலை உயர்வு: பிராண்டட் அரிசியும் கிலோ ரூ 10 அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் சில்லரை விற்பனையிலும் அரிசியின் விலை அதிகரித்துள்ளது. கிலோவுக்கு ரூ 15 முதல் ரூ 17 வரை உயர்ந்துள்ளது. அரிசி விலை உயர்ந்துள்ள நிலையில் சென்னையில் ஹோட்டல்களில் இட்லி, தோசை, சாப்பாடு (meals), கலந்த சாதங்கள், பிரிஞ்சி, பிரியாணி உள்ளிட்ட உணவுகளின் விலையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு முழுவதும் அரிசி விலை குறைய வாய்ப்பே இல்லை என அரிசி வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications