அரிசி வாங்க போறீங்களா.. சாப்பாட்டு அரிசி வாங்க போறீங்களா.. திடீர்னு ஷாக்கிங் தந்த "அரிசி".. அட கடவுளே
சென்னை: தக்காளி விலையை தொடர்ந்து அரிசி விலையும் உயர்ந்துவிட்டது.. திடீரென அரிசி விலை உயர்வுக்கு என்னென்ன காரணங்கள்?
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. காய்கறிகள் விலையோ அதற்கு மேல் உயர்ந்து கொண்டிருக்கிறது.. இதற்கு நடுவில் மளிகை பொருட்களின் விலையும் பல மடங்கு அதிகரித்துவிட்டதால், நடுத்தர மக்கள் விழிபிதுங்கி போய் உள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின்: அதனால்தான், சில நாட்களுக்கு முன்பு, இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனையையும் மேற்கொண்டிருந்தார்..
"யாரெல்லாம் அத்தியாவசிய பொருட்களை பதுக்குகிறார்களோ, அவர்கள் மீதெல்லாம் கடும் கடுமையான நடவடிக்கை எடுங்கள்" என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். மேலும், அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
விலைஉயர்வு: அதில், விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குறிப்பாக, அரிசி, கோதுமை, பருப்பு, தக்காளி போன்ற பொருட்களின் விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், மாதம் ஒன்றுக்கு தலா 10,000 மெட்ரிக் டன் கோதுமை, துவரம் பருப்பை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருந்தார்.
கடந்த மாதம் அரிசி மட்டுமே கிலோவுக்கு 10 ரூபாய் வரை உயர்ந்திருந்தது.. குறிப்பாக, சிவாஜி பிராண்ட் பொன்னி, புழுங்கல் அரிசி 25 கிலோ பாக்கெட் ரூ.1,600-க்கு விலை உயர்ந்துவிட்டது. பொன்னி பச்சரிசி 25 கிலோ ரூ.1,500-க்கு விற்கப்படுகிறது.
ஜிஎஸ்டி: குறிப்பாக, பேக்கேஜ் செய்யப்பட்ட அரிசி, சோளம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களை கடந்த 18ம் தேதி முதல் 5 சதவீத ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவதற்கான அறிவிப்பை ஜிஎஸ்டி கவுன்சில் வெளியிட்டிருந்தது.. இதற்கு அரிசி ஆலைகள் மற்றும் அரிசி வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்... அத்தியாவசியப் பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவதால் அரிசி போன்றவற்றின் விலை உயரும் என்று அப்போதே அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.
தளர்வான அரிசி ஜிஎஸ்டி வரம்பிற்குள் வராது என்றாலும், மாநில உணவுத் துறையானது அனைத்து கடைக்காரர்களுக்கும் அரிசி மற்றும் பிற உணவு பொருட்களை பேக் செய்யப்பட்ட வடிவில் விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தியிருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
கோரிக்கை: இப்போதும் விலை உயர்ந்துவிட்டது.. கடந்த சில மாதங்களுக்கு முன்பு 40 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி விற்கப்பட்டது.. இப்போது, அதே அரிசி 60 ரூபாய்க்கு மேல் விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது.. வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் அரிசி வரத்து குறைந்துள்ளதால் தமிழ்நாட்டில் அரிசி வேலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதாகவும் ஒரு மூட்டைக்கு சராசரியாக ரூ.450 வரை உயர்ந்துள்ளதாகவும் அதிருப்திகள் வெடித்துள்ளன.
உள்நாட்டில் அரிசி உற்பத்தி குறைவு மற்றும் கையிருப்பு போதிய அளவில் இல்லாததே அரிசி விலை உயர்வுக்கு காரணம் என்கிறார்கள். இதைத்தவிர, வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், வெளிநாடுகளிலும் அரிசிக்கு பஞ்சம் வந்துவிடும்போல தெரிகிறது.
வணிகர்கள்: ஒரு மூட்டைக்கு ரூபாய் 450 வரை அரிசி விலை விற்பதால், இந்த விலையை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வணிகர்களும், பொதுமக்களும் விடுக்க துவங்கி உள்ளனர்.
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
717 டாஸ்மாக்கை மூடுறதா சொன்னீங்களே! ஓட்டேரி லிஸ்ட்ல இல்லை? தமிழக அரசுக்கு ஜவாஹிருல்லா வைத்த டிமாண்ட் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications