பேரழிவு தொடங்குது! தங்கத்தில் முதலீடு செய்வது மட்டுமே தப்பிக்க ஒரே வழி.. Rich Dad Poor Dad ஆசிரியர் வார்னிங்
சென்னை: உலக பொருளாதாரம் இப்போது ஏற்ற இறக்கங்களுடன் குழப்பத்தில் இருக்கிறது. இதற்கிடையே சர்வதேச பொருளாதாரத்தில் ஒரு மாபெரும் சரிவு நிகழப் போவதாக எச்சரித்துள்ள "Rich Dad Poor Dad" ஆசிரியர் ராபர்ட் கியோசாகி, இதனால் பல கோடி பேர் அழியப் போகிறார்கள் என எச்சரித்துள்ளார். மேலும், தங்கத்தில் முதலீடு செய்து இந்தப் பேரழிவில் இருந்து பாதுகாப்பாக இருக்கும்படி அவர் கூறியிருக்கிறார்.
உலகளவில் மிகவும் பிரபல பைனான்ஸ் புத்தகம் "Rich Dad Poor Dad.." இதன் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்ற ஒரு பொருளாதார வல்லுநராக அறியப்படுகிறார். அமெரிக்காவில் பெடரல் வங்கி இப்போது வட்டி குறைப்பை ஆரம்பித்துள்ள நிலையில், இவர் மிகப் பெரிய எச்சரிக்கை ஒன்றைக் கொடுத்துள்ளார்.

வல்லுநர் வார்னிங்
அதாவது அமெரிக்க மத்திய வங்கி கடந்த வாரம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வட்டி விகிதத்தை 0.25% குறைத்தது. அமெரிக்காவில் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரம் சிக்கலாக உள்ளதைக் கருத்தில் கொண்டு வட்டி குறைப்பை மேற்கொள்வதாக அமெரிக்க மத்திய வங்கி அறிவித்திருந்தது. இந்தச் சூழலில் தான் ரிச் டாட் பூர் டாட் தந்தை இந்த எச்சரிக்கையை விடுத்ததுள்ளார்.
நிதிச் சந்தைகளில் ஒரு மாபெரும் சரிவு ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார். இதனால் பல கோடி மக்கள் அழியக்கூடும் என்றும் அவர் மிகப் பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். பணவீக்கம் மற்றும் கரன்சி மதிப்பு குறைந்து மிகப் பெரிய நிதிச் சிக்கல் ஏற்படும் என்றும் இதில் இருந்து பாதுகாப்பாக இருக்கத் தங்கம், வெள்ளி, பிட்காயின் மற்றும் எத்தேரியம் போன்ற சொத்துக்களில் முதலீடு செய்யலாம் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மாபெரும் சரிவு ஆரம்பம்
இது தொடர்பாக ராபர்ட் கியோசாகி தனது ட்விட்டரில், "மாபெரும் சரிவு தொடங்குகிறது.. பல கோடி பேர் இதனால் அழிவார்கள். உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். வெள்ளி, தங்கம், பிட்காயின், எத்தேரியம் முதலீடுகள் உங்களைப் பாதுகாக்கும் கவனமாக இருங்கள்" என்று பதிவிட்டுள்ளார். இந்த மாபெரும் சரிவு எப்போது தொடங்கும்.. எப்படித் தொடங்கும்.. இதனால் எப்படிப் பல கோடி பேர் பாதிக்கப்படுவார்கள் என்பது போன்ற தகவல்களை அவர் விளக்கவில்லை.
அவரது இந்த போஸ்ட் இணையத்தில் டிரெண்டானது. பலரும் அவரது ட்வீட்டை பதிவிட்டு வருகிறார்கள். ஒரு தரப்பினர் அவரது எச்சரிக்கைகளில் உண்மை இருப்பதாகவே சொல்கிறார்கள். கடந்த 2000, 2007, 2020 என வட்டி குறைப்பு செய்யப்பட்ட போதெல்லாம் இதுபோன்ற ஒரு பேரழிவு நடந்துள்ளது என்றும் இதனால் இதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.
நெட்டிசன்கள்
அதேநேரம் மற்றொரு தரப்பினர் கியோசாகியின் இந்த ட்வீட்டை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்கிறார். கடந்த 10 ஆண்டுகளாகவே அவர் ஒவ்வொரு ஆண்டும் இதுபோல தான் எச்சரிக்கை விடுத்து வருவதாகவும் ஆனால் அப்படி எந்தவொரு பேரழிவும் நடப்பதில்லை என்று பதிவிட்டுள்ளனர். மேலும், அதற்கு ஆதாரமாக அவரது முந்தைய ட்வீட்களையும் பதிவிட்டுள்ளனர்.
பாதுகாப்பானது எவை?
1997ஆம் ஆண்டு வெளியான "Rich Dad Poor Dad" புத்தகம் கியோசாகியை பிரபலமான நபராக மாற்றியது. அவரது புத்தகம் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு ஹிட் அடித்திருந்தது. அவர் நீண்ட காலமாகவே கடன் பத்திரங்கள் மற்றும் பங்குகள் ஆகியவை ஆபத்திற்கு உட்பட்டவை என்றும் தங்கம் மற்றும் கிரிப்டோ தான் பாதுகாப்பானவை என்று சொல்லி வருகிறார். இப்போதும் அவர் அதையே தான் வலியுறுத்தியுள்ளார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.
-
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
தரைதட்டிய பிட்காயின்.. மைக்ரோஸ்ட்ராடஜி நிறுவனம் செய்த சம்பவம்.. கிரிப்டோ முதலீட்டாளர்கள் ஷாக்! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications