சரியாக தீர்ப்பு வர்ற நேரம் பார்த்து வந்த மத்திய அரசு: தீர்ப்பாய சீர்திருத்த சட்ட வழக்கில் கி. வீரமணி
சென்னை: தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டம் தொடர்பான வழக்கு விசாரணைகள் முடிந்தபின்பும் வழக்கை இழுத்தடிக்க மத்திய அரசு முயற்சிப்பது ஏன்? என்று தமிழகத்தின் மூத்த தலைவரும், திராவிடர் கட்சி தலைவருமான கி.வீரமணி கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக வீரமணி வெளியிட்டிருக்கும் அறிக்கை பலரது கவனம் பெற்று வருகிறது.
தீர்ப்பாயம் என்பது சாதாரண நீதிமன்றங்களுக்கு மாற்றாக, குறிப்பிட்ட துறையில் உள்ள வழக்குகள் அல்லது சர்ச்சைகளை தீர்க்க அரசு அமைத்த சிறப்பு நீதிமன்றம் ஆகும்.

தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டம் (Tribunals Reforms Act) என்பது இந்தியாவில் பல்வேறு தீர்ப்பாயங்கள் (Tribunals) தொடர்பான நிர்வாக அமைப்பு, உறுப்பினர்கள் நியமனம், பதவிக்காலம், சம்பளம், மற்றும் செயல்முறை போன்றவற்றை ஒழுங்குபடுத்தும் சட்டமாகும்.
தனித்தனி தீர்ப்பாயங்கள்
இது கடந்த 2021ல் (Tribunals Reforms Act, 2021) எனப்படும் சட்டமாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.. இதற்கு முன்பு பல்வேறு துறைகளுக்கு தனித்தனியாக தீர்ப்பாயங்கள் இருந்தன.. ஆனால், அவற்றில் குழப்பம், அதிகார ஒட்டுமொத்தம், மற்றும் நியமனத்தில் தாமதம் இருந்ததால், அவற்றை ஒன்றுபடுத்தி ஒழுங்குபடுத்தும் நோக்கில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.
ஏற்கனவே செயல்பட்டுவரும் சில தீர்ப்பாயங்களைக் கலைத்துவிட்டு, அவற்றை நீதித் துறையுடன் இணைக்க வகைசெய்யும் இந்தச் சட்டம் தீர்ப்பாயங்களின் உறுப்பினர்களுக்குக் குறைந்தபட்ச வயது 50 என்றும், அவர்களின் பதவிக்காலம் அதிகபட்சம் 4 ஆண்டுகள் எனவும் வரையறுத்துள்ளது.
புதிய சட்டசீர்திருத்தம்
தீர்ப்பாயங்களில் அளிக்கப்பட்ட தீர்வாணைகளின் மீது மேல்முறையீடு செய்து மேலும் வழக்கின் முடிவைக் காலதாமதப்படுத்துவதே எழுதப்படாத விதியாக இருந்து வரும் நிலையில், இந்த புதிய சட்டசீர்திருத்தமானது, வழக்குகளை விரைவில் தீர்க்க உதவும், நீதிமன்றத்தின் வேலைச்சுமையை குறைக்கும்.. அத்துடன் குறிப்பிட்ட துறையில் நிபுணர்களின் தீர்ப்பு கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
ஆனால், 2021ம் ஆண்டின் தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டம் அரசியலமைப்பு ரீதியாகச் செல்லுபடியாகாதது என்று கூறப்படும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டது.. காரணம், இந்த சட்டம் அரசியலமைப்பின் கீழ் நீதித்துறையின் சுதந்திரத்தைக் குறைப்பதாக கூறி பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள் தீர்ப்பாயங்களில் நியமனங்கள், பணி நீக்கம், மற்றும் நிர்வாக அமைப்புகள் தொடர்பான பல்வேறு சிக்கல்களை எழுப்புவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்று பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.. அந்த அறிக்கையில் உள்ளதாவது:
தீர்ப்பு வரும் நேரத்தில்
"கடந்த 2021ம் ஆண்டின் தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டம், அரசியலமைப்பு சட்டத்தின்படி செல்லத்தக்கது அல்ல என்று தொடுக்கப்பட்ட வழக்கினை, உச்சநீதிமன்றம் தற்போது முழுமையாக விசாரித்து முடித்துள்ளது. இந்நிலையில் திடீரென, இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்குமாறு மத்திய அரசு விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் நிராகரித்தது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு இதனை விசாரித்து, வழக்கின் இறுதித் தீர்ப்பு இந்த மாதம் வெளிவரவிருக்கும் நிலையில், மீண்டும் வழக்கை நவம்பர் 23-ந் தேதிக்குப் பிறகு விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு எழுப்பியுள்ளது.
இழுத்தடிக்கிறதா மத்திய அரசு
தீர்ப்பாயச் சீர்திருத்தச் சட்டம் தொடர்பான வழக்கு விசாரணைகள் முடிந்தபின்பும் வழக்கை இழுத்தடிக்க மத்திய அரசு முயற்சிப்பது ஏன்?.
இதை புரிந்துகொண்ட பி.ஆர்.கவாய் ஒன்றிய அரசைக் கண்டித்து, "தீர்ப்புக்கு தயாராக உள்ள நிலையில், இப்படி மீண்டும் வாதங்களை தொடரக் கேட்பதா?" என்று வேதனையுடன் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனாலும் நீதித்துறையின் மாண்புகளை பாதுகாக்க தனது கடமையை வழுவாமல், நழுவாமல் செய்து வருகிறார்" என்று அதில் வீரமணி தெரிவித்துள்ளார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications