Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யுஎஸ் டாலருக்கு விரைவில் RIP ? 10 மடங்கு விலை ஏறப்போகும் தங்கம்! சான்ஸ் போனால் வராது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சத்தை எட்டி வரும் நிலையில், வரப் போகும் 5 ஆண்டுகளில் தங்கத்தின் விலையானது கிட்டத்தட்ட 10 மடங்கு உயரப் போகிறது என்று பொருளாதார நிபுணர் ஒருவர் எச்சரிக்கை மணியை அடித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதத்தில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கத்தின் மீதான சுங்கவரி குறைத்தார். அதனால், உடனடியாக சந்தையில் தங்கத்தின் விலை லேசான சரிவு ஏற்பட்டது. மத்திய அரசு சில ஆண்டுகள் முன்பு அறிமுகம் செய்த தங்கப் பத்திரத்தின் கால வரவும் நிறைவடைந்துவிட்டது. அது முதிர்ச்சி பெற்றுவிட்டதால், அரசு அதற்காக வட்டியுடன் கூடிய தொகையைத் திரும்ப அளிக்க வேண்டும்.

gold price gold market

சந்தையில் தங்கத்தின் விலை கூடுதலாக இருந்தால், அதிகமான தொகையை அரசு முதலீட்டாளர்களுக்கு வழங்கவேண்டிய நிலை உருவாகும். அதனால் அரசுக்கு அதிக வருவாய் இழப்பு ஏற்படும். அதை மனதில் வைத்தே இந்த வரிச் சலுகையை நிதியமைச்சர் வெளியிட்டுள்ளார் என சில பொருளாதார நிபுணர்கள் ஒரு கருத்தை அப்போது வெளியிட்டிருந்தனர்.

எது எப்படி இருந்தாலும் சந்தையில் தங்கத்தின் விலை கொஞ்சம் குறைந்தது. ஆனால், அது தொடர்கதையாக இருக்கவில்லை. சில வாரங்களிலேயே மீண்டும் உச்சத்தைத் தொட்டது தங்கத்தின் விலை. மீண்டும் . சில நாட்கள் உயர்வதும் அடுத்து சரிவதுமாக இருந்தது. இப்போது மறுபடியும் விலை உயர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரன் 58,920 ரூபாய் விற்பனையாகிறது. அதாவது கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ரூ. 7365 விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் இன்னும் 5 ஆண்டுகளில் தங்கத்தின் விலை 10 மடங்கு உயரப் போகிறது என்று ஒரு எச்சரிக்கை மணியை அடித்துள்ளார் பொருளாதார நிபுணர் சண்முகநாதன். அவர் இனிமேல் உலகம் டாலருக்கு சாவு மணி அடிக்க இருக்கிறது என்றும் எழுதி இருக்கிறார். இதைப் பற்றி விரிவாகப் பேசிய அவர், "அமெரிக்க டாலர் என்பது கடந்த 200 ஆண்டுகளாக புழக்கத்திலிருந்து வருகிறது. ஆனால், கடந்த 1971க்குப் பிறகான அமெரிக்க டாலர் என்பது முற்றிலும் வேறானதாகவே இருந்துள்ளது.

இதற்கு முன்னதாக இருந்த டாலருக்கும் தங்கத்திற்கும் ஒரு தொடர்பு இருந்தது. அந்தத் தொடர்பு 1971க்குப் பிறகு அறுந்துவிட்டது. வங்கி ஒரு 20 டாலர் மதிப்பு உள்ள பணத்தை அச்சடித்து வெளியிட வேண்டும் என்றால், அதற்குக் குறிப்பிட்ட தங்கம் அவர்களின் கணக்கிலிருந்தால்தான் அதை வெளியிட முடியும்.

தங்களின் இஷ்டத்திற்குப் பணத்தை அச்சடித்து வெளியிட முடியாது. ஆகவே, இன்னும் சில ஆண்டுகளில் டாலரின் மதிப்பை தங்கம் எடுத்துக் கொண்டுவிடும். அதன்பின் டாலரின் மதிப்பு இப்போது இருப்பதைப் போல உலக சந்தையில் இல்லாமல் போய்விடும். அதைத்தான் நான் ஆர்.ஐ.பி. 'யுஎஸ்டி' என்று புத்தகம் எழுதி அதன் மூலம் விளக்கி இருக்கிறேன்" என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "இப்போது இந்தியா அமெரிக்க டாலரைக் கொடுத்து எண்ணெய் வாங்கி வருகிறது. வரும் காலங்களில் டாலருக்குப் பதிலாக தங்கம் கொடுத்துத்தான் எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நிலை உருவாகும். நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், அமெரிக்கப் பொருளாதாரம் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. அதனால் வரும் காலத்தில் டாலரை விடத் தங்கத்தின் மதிப்பு அதிகரிக்கப் போகிறது. எனவே உலக வர்த்தகமே இனி தங்கத்தை வைத்தே நடைபெறப் போகிறது.

இதனால் தங்கத்தின் விலை யூகிக்க முடியாத அளவுக்கு ஏறப்போகிறது. எவ்வளவு அதிகரிக்கும் என்றால், இப்போது உள்ள விலையிலிருந்து 10 மடங்கு உயரும். இந்த மாற்றம் இன்னும் 5 வருடங்களில் வரப் போகிறது. இதற்கான காரணம் அமெரிக்காதான். நாட்டில் பொருளாதாரம் சீர்குலைந்தால் உடனே அமெரிக்க மத்திய வங்கி உடனே டாலரை அச்சடித்து வெளியிட்டு வருகிறது. கடந்த 2008இல் அமெரிக்க ஃபிடரல் பேங்க்கின் பேலன்ஸ் ஷீட் 6 மடங்கு அளவுக்குக் கூடியது.

அந்த வங்கியின் இருப்பு கணக்கு வைத்து ஆராய்ந்தால், அதன் வருமானம் என்பது 30% வட்டிக்காகவே செலவழிக்கப்படுகிறது. அவ்வளவு கடன் உள்ளது. இன்றைய தேதிக்கு வங்கியின் வட்டி 3% உள்ளது. ஒருவேளை அது உயர்ந்தால் வருமானத்தில் 50% பணத்தை அமெரிக்கா வட்டி கட்டவே செலவிட வேண்டிய நிலை உருவாகும். இதனால் அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ந்து வருகிறது.

கடந்த 50 ஆண்டுகால தங்கத்தின் வரலாற்றைக் கவனித்தால் சில விளக்கங்கள் கிடைக்கின்றன. 1971க்கு முன்பு தங்கத்தின் மதிப்பு இப்படி இல்லை. எனவே பலரும் முதலீடாக மட்டுமே பார்த்தார்கள். இன்றுக்கு அதுவே நிலையான மதிப்பாக மாறிவிட்டது. டாலரை நம்புவதை விட தங்கத்தை நம்பலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. பல நாடுகள் தங்கத்தை வாங்கி இருப்பு வைக்கின்றன. அதனால் தேவை அதிகரித்துள்ளது. டாலர் வீழ்ச்சிதான் தங்கத்தை விலையை ஏற வைத்துள்ளது" என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர் இந்தியா இந்தப் பாதிப்பிலிருந்து தப்பிக்க நிறைய உற்பத்தி சார்ந்த தொழில்களில் கவனம் செலுத்த வேண்டும். வேளாண்மையில் அதிக முதலீடுகளைக் கொண்டுவர வேண்டும். அதனால் நம் பொருளாதாரம் காப்பாற்றப்படும் என்றும் அவர் சொல்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+