ஹூடி பாபா.. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு! திடீரென வீடியோ போட்ட ஆர்ஜே பாலாஜி! வருத்தத்தில் ரசிகர்கள்
சென்னை: ரேடியோ ஜாக்கி, நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், கிரிக்கெட் வர்ணனையாளர் என பல முகங்கள் கொண்ட ஆர்ஜே பாலாஜி இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் வர்ணனையாளராக பங்கேற்கவில்லை. இந்த நிலையில் திடீரென ஒரு வீடியோ போட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்திருக்கிறார் ஆர்.ஜே பாலாஜி. இதனால் அவரது ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில் அவரது சினிமா வாழ்க்கைக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
ஐசிசி உலகக் கோப்பை உள்ளிட்ட தொடர்களுக்கு அடுத்தபடியாக உலக அளவில் மிகுந்த வரவேற்பு பெற்ற தொடர் என்றால் அது ஐபிஎல் தான். உலகம் முழுவதும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களும் விளையாட்டு வீரர்களும் ஆண்டுக்காண்டு இந்த போட்டியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அதிரடி பேட்ஸ்மேன்கள், அட்டகாச பந்துவீச்சாளர்கள் என பலரை அடையாளம் கண்டு அவர்களை சர்வதேச கிரிக்கெட்டுக்கு அழைத்து வரும் ஒரு பாதையாகவும் ஐபிஎல் இருக்கிறது. ஐபிஎல்-ல் எந்த அளவுக்கு வீரர்கள் புகழ் பெறுகிறார்களோ, அவர்களுக்கு இணையாக கிரிக்கெட் வர்ணனையாளர்களும் பேசப்படுகிறார்கள். அந்த வகையில் தமிழ் ஐபிஎல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த வர்ணனையாளர் என்றால் அவர் ஆர்ஜே பாலாஜி தான்.
ரேடியோ ஜாக்கியாக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கிய அவர் அதற்கு பிறகு காமெடி கேரக்டர்களில் கலக்கி தற்போது நாயகனாக நடித்து வருகிறார். மேலும் இயக்குனர், தயாரிப்பாளராகவும் கலக்கி வரும் ஆர்ஜே பாலாஜி கடந்த எட்டு சீசன்களாக ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையாளராகவும் இருந்தார். ஹூடி பாபா என அவர் மந்திரம் போட்டால் விக்கெட் விழும் என்பது ரசிகர்களின் நம்பிக்கை. மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்கள் அவருக்கு கை கொடுத்த நிலையில் முதன்முறையாக மற்றொரு ஹீரோவை வைத்து படத்தை இயக்கி வருகிறார். தற்போது நடிகர் சூர்யாவின் 45 வது படமான சூரியா 45 படத்திற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
தற்போது படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்தாண்டு ஐபிஎல் சீசனில் ஆர்ஜே பாலாஜி வர்ணனையாளராக பங்கேற்கவில்லை. தற்போது ஐபிஎல் சீசன் தொடங்கி கிட்டத்தட்ட 10 போட்டிகள் முடிவடைந்துவிட்ட நிலையில் ஆர்.ஜே பாலாஜி ஒரு போட்டியில் கூட கமெண்ட்ரி செய்யவில்லை. இதனால் ஆர்ஜே பாலாஜிக்கு என்ன ஆனது? அவர் வருவாரா? வரமாட்டாரா? என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் தன் குறித்த கேள்விகளுக்கு விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் ஆர்ஜே பாலாஜி. அதில்," ஒவ்வொரு வருஷமும் மார்ச், ஏப்ரல், மே எனக்கு மிகவும் பிடித்த மாதங்கள். அப்போதுதான் எனக்கு ரொம்ப பிடிச்ச ஐபிஎல் கிரிக்கெட் கமெண்ட்ரி வேலை செய்வேன். அது உங்களுக்கு பிடிக்கும் என எனக்கு தெரியும். நேற்று ஷூட்டிங்கில் இருந்தபோது கூட நிறைய பேர் அன்னே நாளைக்கு நீங்க கமெண்ட்ரி பண்ண வருவீங்களா? என கேக்குறாங்க.
டிவியிலும், ஃபேஸ்புக், ட்விட்டர்லும் ஆர்ஜே பாலாஜியை மிஸ் பண்ணுவதாக நிறைய பேர் கேக்குறாங்க. அவங்களுக்கு பதில் சொல்லணும்னு தான் இந்த வீடியோ. இந்த வருஷம் ஐபிஎல் கிரிக்கெட் கமெண்ட்ரிக்கு நான் வரமாட்டேன். அது எனக்கு ரொம்ப கஷ்டமான விஷயம் தான். நீங்க என்ன மிஸ் பண்ற மாதிரி நானும் உங்கள மிஸ் பண்றேன். ஆனா ஒரு நேரத்துல ஒரு வேலையை நல்லா செமையா செய்யணும்னு ஆசைப்படுவேன். அந்த வேலைய தான் இப்ப நான் பாத்துட்டு இருக்கேன். இப்போ நான் ஒரு படம் இயக்கனும். அதுல நிறைய பொறுப்பு இருக்கறதுனால இந்த வருஷம் ஐபிஎல்-க்கு சின்ன இடைவெளி கொடுத்து இருக்கேன்.
இதை சொல்வது எனக்கு கஷ்டமா தான் இருக்கு. கமெண்ட்ரி எனக்கு ரொம்ப பிடிச்ச வேலை. கடந்த 10 வருஷமா நீங்க எல்லோரும் எனக்கு ரொம்ப சப்போர்ட் கொடுத்திருக்கிறீங்க. அந்த லவ் எனக்கு ரொம்ப பிடிக்கும். நேத்து ஏன் வரல நாளைக்கு வருவீங்களா என கேட்கிறப்போ ஒவ்வொரு முறையும் அந்த மைக் எடுக்கும் போது ஒரு உணர்வு வரும். அது ரொம்ப ஸ்பெஷல். இந்த வருஷம் நான் கமெண்ட்ரிக்கு வரலை. ஒரு சின்ன கேப் மட்டும்தான். அதே நேரத்துல வீட்ல இருந்துகிட்டு அல்லது வேலை பார்த்துகிட்டு உங்கள மாதிரியே நானும் ஹூடி பாபா மந்திரம் போட்டு சிஎஸ்கேக்கு சப்போர்ட் செய்வேன். சூட்டிங் எல்லாம் முடியட்டும் கண்டிப்பா அடுத்த சீசன்ல சந்திப்போம்" என கூறி இருக்கிறார்.
இதன் மூலம் இந்த சீசனில் ஆர்ஜே பாலாஜி கிரிக்கெட் கமெண்ட்ரி செய்ய வர மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் வருத்தம் அடைந்திருந்தாலும், அவரது சினிமா கேரியர் சிறப்பாக அமைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
-
நான் சின்ன பையன்.. சூர்யாவுக்கு தான் பாதிப்பு! கருப்பு படத்தில் தர்பூசணி காட்சி கட்.. திவாகர் வினோத விளக்கம் -
Karuppu Box Office: 11 நாளில் மாஸ் வேட்டை.. சூர்யாவின் கருப்பு செய்த வசூல் சம்பவம்.. மெகா ரிட்டர்ன்! -
Karuppu: விஜய் அரசியலுக்கு வந்து விட்டதால் ! சினிமாவில் வெற்றிடமா? "கருப்பு" ஆர்.ஜே. பாலாஜி விளக்கம் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications