தனியே தன்னந்தனியே.. தனிமரமாய் தமிழ்நாட்டை விட்டுப் போன ஆர்என் ரவி! யாருமே கண்டுக்கலையே! பரபர சீன்!
சென்னை: தமிழ்நாட்டின் ஆளுநராக கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றிய ஆர்.என். ரவி தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து புதன்கிழமை தமிழ்நாட்டை விட்டு புறப்பட்டார். அவர் மேற்கு வங்க மாநிலத்தின் புதிய ஆளுநராக மத்திய அரசு நியமித்துள்ள நிலையில், அவர் கொல்கத்தாவில் நாளை பதவியேற்க உள்ளார். இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற அவரது விடைபெறும் தருணத்தில் தமிழ்நாடு அமைச்சரவை உறுப்பினர்கள் யாரும் பங்கேற்காதது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.என். ரவி 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பேற்றார். அதன் பிறகு சுமார் ஐந்து ஆண்டுகளாக அந்த பதவியில் இருந்து மாநில நிர்வாகத்துடன் பணியாற்றி வந்தார். ஆனால் அவரது பதவிக்காலத்தில் ஆளுநர் மாளிகைக்கும் திமுக அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டபோது, அவை நீண்ட காலம் நிலுவையில் வைக்கப்பட்டதாக மாநில அரசு குற்றம்சாட்டியது. இந்த விவகாரம் அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆர்.என். ரவி
இதையடுத்து, மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என கூறி மாநில அரசு உச்ச நீதிமன்றத்தையும் அணுகியிருந்தது. அதே நேரத்தில், மாநில அரசின் செயல்பாடுகள் குறித்து ஆளுநர் ஆர்.என். ரவியும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இதனால் ஆளுநர் மாளிகைக்கும் மாநில அரசுக்கும் இடையேயான மோதல் அடிக்கடி அரசியல் விவாதமாக மாறியது.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக இருந்த சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தமிழ்நாடு ஆளுநர்
இதையடுத்து, அந்த மாநிலத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவியை மத்திய அரசு நியமித்தது. அதே சமயம், தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கூடுதல் பொறுப்பாக தமிழ்நாட்டின் ஆளுநர் பணிகளை மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்க உள்ளார்.
கொல்கத்தா ஆளுநர்
இதற்காக அவர் புதன்கிழமை காலை சென்னை விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். டெல்லியில் இருந்து வியாழக்கிழமை காலை கொல்கத்தா செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஆர்.என். ரவிக்கு தமிழ்நாடு காவல்துறையினர் அதிகாரப்பூர்வ மரியாதை அளித்தனர். பின்னர் அவர் விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டார்.
தமிழக அரசு
ஆனால் அவர் விடைபெறும் தருணத்தில் தமிழ்நாடு அமைச்சரவை உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இது அரசியல் ரீதியாக கவனிக்கப்படும் விஷயமாக மாறியுள்ளது. இதற்கு முன் தமிழகத்தில் சில ஆளுநர்கள் பதவியேற்று பின்னர் பிற மாநிலங்களுக்கு செல்லும் போது தமிழக அரசின் சார்பில் சில ஐபிஎஸ் அதிகாரிகளாவது வழியனுப்ப செல்வார்கள். ஆனால், ஆர்என் ரவியை யாருமே வழியனுப்ப செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கேரள ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் ஆலோசகர் மார்ச் 12 ஆம் தேதி சென்னை லோக் பவனில் தனது பொறுப்பை ஏற்க உள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டில் ஆளுநர் பதவியில் புதிய கட்டம் தொடங்க உள்ளது.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications