பைக்கில் இப்படியெல்லாமா போவாங்க.. அதுவும் முன்னாடி உட்கார்ந்திருக்கும் பெண்ணை பாருங்க
சென்னை: சாலையில் ஒரே இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் எப்படி பயணிக்கிறார்கள் என்பது குறித்து காரில் சென்ற ஒருவர் எடுத்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இரு சக்கர வாகனத்தில் பாதுகாப்பற்ற முறையில் பயணிப்பது தவறு என்பதை குறிப்பிட்டு இந்த வீடியோவை பலர் பரப்பி வருகிறார்கள்..
சாலையில் வாகனத்தை இயக்குவோருக்கு வாகனத்தை ஓட்டத்தெரிந்தால் தற்போது இந்தியா முழுவதும் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது. ஆனால் போக்குவரத்து விதிமுறைகளை சரியாக கடைபிடிக்க தெரிந்தவர்களுக்கு, இன்னும் சொல்லப்போனால் போக்குவரத்து விதிமுறைகளை 100 சதவீதம் நன்றாக அறிந்தவர்களுக்கு மட்டுமே ஓட்டுநர் உரிமம் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது,

அதேபோல் போக்குவரத்து விதிமுறைகளை வேண்டுமென்றே தொடர்ந்து மீறுவோரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.. அதேநேரம் பெருநகரங்களில் சாலையில் கண்ட இடத்தில் வாகனத்தை நிறுத்துவது, போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துவது, சாலையில் விதிகளை மீறி வாகனங்களை இயக்குவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
சிறிய நகரங்களில் தலைகவசம் அணியாமல் செல்வோருக்கு, இருசக்கர வாகனத்தில் இரண்டு பேருக்கு மேல் செல்லும் போது அபராதம் விதிக்கப்படுகிறது. சென்னை போன்ற பெரிய நகரங்களில் இருவரில் ஒருவர் தலைகவசம் அணிந்தாலும் அபராதம் விதிக்கப்படுகிறது. குறிப்பாக தலைகவசம் அணியாமல் ஞாயிறுகளில் சென்னையில் எந்த சாலைகளை கடந்தாலும் கண்டிப்பாக அபராதம் கட்ட வேண்டியதிருக்கும். அதேபோல் ஒரே வாகனத்தில் 3 பேர் பயணித்தாலும் கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படுகிறது. கார்களை பொறுத்தவரை சீட் பெல்ட் அணியாவிட்டால் கண்டிப்பாக அபராதம் விதிப்பார்கள் ..
சிறிய நகரங்களில் பைக்குகளுக்கு அடுத்தபடியாக அதிகம் சிக்குவது ஆட்டோக்கள், சரக்கு வாகனங்கள், சிறிய ரக கனரக வாகனங்கள்தான். அதிக பயணிகள் ஏற்றியதாக ஆட்டோக்கள் அபராதத்தில் சிக்குகின்றன. அதிக பாரம் ஏற்றியதாக சரக்கு வாகனங்கள் அதிக அளவில் அபராதத்தில் சிக்குகிறார்கள். இதெல்லாம் தினசரி நடப்பதைவிட திங்கள், வெள்ளி மற்றும் ஞாயிறுகளில் இந்த காட்சிகளை அதிகம் பார்க்க முடியும்.
Adding without any comments.#RoadSafety pic.twitter.com/gWGMPqOFrY
— 𝗟 𝗼 𝗹 𝗹 𝘂 𝗯 𝗲 𝗲 (@Lollubee) February 13, 2024
சரி விஷயத்திற்கு வருவோம்.. போக்குவரத்து விதிமீறல்களை பற்றி சிறிதும் கவலைப்படாமல், பாதுகாப்பற்ற முறையில் 3 பெண்களை ஏற்றிக்கொண்டு ஒருவர் பைக்கில் ஆபத்தான முறையில் பயணித்துள்ளார். அதுவும் முன்னாடி அமர்ந்திருந்த பெண் உட்கார்ந்திருந்த விதத்தை பார்த்து நெட்டிசன்கள் பலர் வாயடைத்து போயுள்ளனர். உண்மையில் இதுபோல் யாரும் பயணிக்கவே கூடாது. இதுபோல் பயணிப்பது புதிது அல்ல..
ஆனால் விபத்துக்கு காரணம் இதுபோல் அதிகம் பேர் செல்வது தான். ஏனெனில் ஏதேனும் வேகத்தடை அல்லது பிரேக் போட வேண்டிய நிலை, வாகனம் திடீரென குறுக்கே வரும் போது விபத்தில் சிக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இருசக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும். அந்த இருவரும் தலைகவசம் அணிந்து செல்வது நல்லது என்கிறார்கள் நெட்டிசன்கள்.












Click it and Unblock the Notifications