அசைந்தால் ஒரே போடு.. நீதிபதி வீட்டு பெட்ரூமில் 2 திருடர்கள்! வெறும் 4 நிமிடம், 10 நொடி திகில் வீடியோ
சென்னை: ஊரகப் பகுதிகளில், புறநகர்ப்பகுதிகளில் வயதானவர்களை குறி வைத்து கொள்ளை, கொலை போன்ற சம்பவங்கள் நடப்பது அதிகரித்து வருவதாக ஏற்கனவே நீதிமன்றங்கள் வேதனை தெரிவித்திருந்தன.. ஆனால், தற்போது நகர்ப்புறங்களிலேயே கொள்ளையர்கள் கைவரிசையை காட்ட துவங்கியிருக்கிறார்கள்.. மத்தியப் பிரதேச மாநிலத்தில் நீதிபதி வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சிசிடிவி காட்சியை கைப்பற்றி, போலீசாரும் விசாரணையை துவங்கியிருக்கிறார்கள்.
கடந்த வாரம் பாட்னாவிலுள்ள சோட்கி நக்லா மொஹல்லா என்ற பகுதியில், கொள்ளை சம்பவம் ஒன்று நடந்தது.. அந்த பகுதியில் பிரபலமான தனியார் மருத்துவமனை ஒன்றின் உரிமையாளர் அமித் ரஞ்சன் என்பவரது வீட்டுக்குள், நள்ளிரவு 1 மணிக்கு, 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று புகுந்துவிட்டது.

ஜன்னல் கிரில்கள்
வீட்டின் பின்பக்கமிருந்த ஜன்னல் கிரில்களின் ஸ்க்ரூ-க்களை அகற்றி, அதற்கு பிறகு அந்த கும்பல் வீட்டிற்குள் நுழைந்துள்ளது.. அமித் ரஞ்சனின் மனைவி, குழந்தைகளை ஒரு ரூமில் பூட்டி வைத்துவிட்டு, ரூ.16 லட்சம் மதிப்புள்ள நகைகள், 8 லட்சம் ரொக்கத்தையும் சேர்த்து கொள்ளையடித்து கொண்டு தப்பியது.
அதேபோல கிழக்கு டெல்லியில் உள்ள லக்ஷ்மி நகர் பகுதியிலும் ஒரு கொள்ளை சம்பவம் நடந்தது.. ரக்ஷா பந்தன் பண்டிகை என்பதால், வீட்டிலிருந்தவர்கள் வெளியே சென்றிருந்தனர்.. மேலும் அப்போது அந்த பகுதியில் மின் தடையும் ஏற்பட்டிருந்ததால், மர்மகும்பல் ஒன்று வீட்டிற்குள் புகுந்து, ரூ.25 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது..
கடந்த வாரத்தில் மட்டுமே இத்தனை கொள்ளைகள் நடந்துள்ள நிலையில், அவைகள் தொடர்பான விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
நீதிபதி வீட்டில் கொள்ளை
இந்நிலையில், மீண்டும் மத்திய பிரதேசத்தின் தலைநகரில் ஒரு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி ரமேஷ் கார்க் என்பவர் இந்தூரில் வசித்து வருகிறார்..
இவரது வீட்டிற்குள் கொள்ளை கும்பல் உள்ளே புகுந்து, லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளது.. கொள்ளையடிக்கப்பட்ட அறையில் சிசிடிவி வீடியோ இருப்பதாக தெரிகிறது.. எனவே இந்த கொள்ளை நிகழ்வுகள் அதில் பதிவாகியிருப்பதுடன், அந்த சிசிடிவி காட்சியும் இணையத்தில் வெளியாகி காண்போரை பதற வைத்துள்ளது.
படுக்கையறையில் நீதிபதி மகன்
அந்த வீடியோவில், படுக்கையில் நீதிபதியின் மகன் கார்த்திக் என்பவர் தூங்கி கொண்டிருக்கிறார்.. அப்போது கொள்ளையரில் ஒருவர், அந்த அறையிலிருந்த அலமாரியை திறந்து நகைகள், பணத்தை எடுக்கிறார்.. இன்னொரு நபர், படுக்கை அருகே கையில் ஆயுதத்துடன் நீதிபதியின் மகனுக்கு அருகில் இரும்புக்கம்பியுடன் நின்று கொண்டிருக்கிறார்.
படுக்கையில் தூங்கிக்கொண்டிருந்த நீதிபதியின் மகன் ரித்விக்-ஐ நோக்கி இரும்பு கம்பியை நீட்டியபடி நின்றுள்ளார் அந்த கொள்ளையன்.. ரித்விக் ஒருவேளை தூக்கத்தில் இருந்து எழுந்திருந்தாலோ அல்லது யதேச்சையாக திரும்பி படுப்பதற்காக லேசாக அசைந்திருந்தாலோ, அடுத்த நொடியே, அவரை இரும்பு கம்பியால் அடித்து நொறுக்க தயாராக நின்று கொண்டிருக்கிறார். எனினும், சிறிதும் அசைவில்லாமல் நீதிபதி மகன் தூங்கிக்கொண்டிருக்கிறார்.
செக்யூரிட்டி, அலாரம் - வெறும் 4 நிமிடம் 10 நொடி
இந்த வீடியோ எக்ஸ் தளத்தில், @Incognito_qfs என்கிற பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டுள்ளது.. அதில், "நீதிபதி கார்க்கின் மகன் விழித்திருந்தால், அவர்கள் அவரை நிச்சயம் கொலை செய்திருப்பார்கள்.. பலமான அலாரம் ஒலித்தும்கூட, நல்ல வேளை கார்த்திக் தூங்கிக் கொண்டிருக்கிறார்.. செக்யூரிட்டியும் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கிறார்" பதிவிடப்பட்டுள்ளது.
இந்த கொள்ளை சம்பவம் 4 நிமிடம் 10 விநாடிகள் நடந்துள்ளன.. அந்த அறையில் ரூ.5 லட்சம் பணம் மற்றும் தங்க, வெள்ளி நகைகளுடன் 2 கொள்ளையர்களும் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இரும்பு கிரில் கதவை வெட்டி வீட்டிற்குள் திருடர்கள் வந்துள்ளனர்.
பாதுகாப்பு குறைபாடுகள்
இந்த வீடியோவை பார்த்து இணையவாசிகள் கதிகலங்கி போயிருக்கிறார்கள்.. நீதிபதி வீடு உள்ள பகுதி என்றால், அதிக பாதுகாப்பு கொண்டதாக இருக்கும்.. அவ்வளவு பாதுகாப்பு பகுதிகளில் கூட கொள்ளையர்கள் எப்படி சுலபமாக நுழைய முடிந்தது? என்று பலரும் அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.. பலத்த சத்தத்துடன் அலாரம், நைட் டியூட்டி செக்யூரிட்டி, போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்த போதிலும், அவை செயல்படாத நிலை, நகரின் பாதுகாப்பு அமைப்பில் உள்ள குறைகளையே காட்டுவதாகவும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். .
வெறும் 4 நிமிடம் 10 நொடிகளில் கொள்ளையை அரங்கேற்றி அந்த கும்பல் அங்கிருந்து தப்பிய நிலையில், அவர்களை சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து போலீசார் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications